தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரனை ஆதரவளிக்கும் பொதுக் கூட்டம் ஒன்று யாழ்ப்பாணம் நெல்லியடியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பொதுக் கூட்டம், நேற்றையதினம் நெல்லியடி மைக்கல் விளையாட்டு கழக மைதானத்தில் ஈபிஆர்எல்எவ் தேசிய அமைப்பாளர் சிவகுமார் தலைமையில் இடம்பெற்றது. |
-
11 செப்., 2024
நெல்லியடியில் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்கும் பொதுக்கூட்டம்
ஆட்கள் வரவில்லை - உடுப்பிட்டியில் சஜித்தின் கூட்டம் ரத்து
யாழ்ப்பாணம், வடமராட்சி - உடுப்பிட்டியில் செவ்வாய்க்கிழமை முற்பகல் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரித்து நடைபெறவிருந்த பிரசாரக் கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் மக்களை அழைத்துவர முடியாது போன நிலையில் முற்பகல் 10 மணி முதல் இசைக் குழுவினர் பாடல் இசைத்தவண்ணம் இருந்துள்ளனர். |
நண்பகல் வரை மக்களை ஒன்றுதிரட்டுவதில் ஏற்பாட்டாளர்கள் தோல்வி கண்ட நிலையில் இந்தக் கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது |
கொக்குவிலில் டிப்பர் மோதி உயர்தர வகுப்பு மாணவி பலி
யாழ்ப்பாணத்தில் டிப்பர் வாகனம் மோதியதில் உயர்தரப் பிரிவு மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கொக்குவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த குறித்த மாணவி நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் துவிச்சக்கர வண்டியில் தனியார் கல்வி நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தவேளை ஆடியபாதம் வீதியில் பின்பக்கமாக வந்த டிப்பர் மாணவி மீது மோதியதால் இவ் விபத்து ஏற்பட்டது |
ஐ.நா அறிக்கையை வரவேற்கிறது ஐரோப்பிய ஒன்றியம்!
ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட அறிக்கையை ஏற்றுக்கொள்வதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் ஐரோப்பிய ஒன்றியம் தமது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது. |
பொது வேட்பாளருக்கு வாக்களியுங்கள்!- ஈழத் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு வேண்டுகோள்.
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் பொது வேட்பாளராக போட்டியிடும் பா.அரியநேந்திரனுக்கு வாக்களிக்குமாறு, தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக செயற்பட்டுவரும் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு அறைகூவல் விடுத்துள்ளது |