-
24 மே, 2024
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமராக உருத்திரகுமாரன் மீண்டும் தேர்வு
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமராக விசுவநாதன் உருத்திரகுமாரன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது தவணைக்காலத்தின் முதலாவது அமர்வு கடந்த மே 17,18,19 ஆகிய மூன்று நாட்களில் அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது. இதன்போது அரசாங்கத்தின் பிரதிநிதிகள் நேரடியாகவும் இணையம் மூலமாகவும் பங்கேற்றிருந்தனர். |
கடற்கொந்தளிப்பினால் நெடுந்தீவு படகுச் சேவை ரத்து!
கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்ற காரணத்தால் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி குறிகாட்டுவான் - நெடுந்தீவு கடற்போக்குவரத்து இன்று 24 ஆம் திகதி இடம்பெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. |
ஒன்ராறியோவின் போக்குவரத்து 'ஒற்றைக் கட்டணத்' திட்டத்தில் 5 மில்லியனுக்கும் அதிகமானோர் பயன்!
ஒன்ராறியோ அரசு மாநில பொதுப்போக்குவரத்துக் கட்டமைப்பில் 'ஒற்றைக் கட்டண' ஒருவழிப் பயணத் திட்டத்தை பெப்ரவரி 26ஆம் திகதியன்று அறிமுகப்படுத்தியது |
ருஹுணு குமாரி மோதியதில் 3 இளைஞர்கள் பலி
கிந்தோட்டை பிந்தலியா ரயில்வே கடவையில் நேற்று இடம்பெற்ற விபத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் |
இலங்கையின் காரீயச் சுரங்கங்களை குறிவைக்கும் இந்தியா
இலங்கையில் உள்ள காரீய சுரங்கங்களை இந்தியா கையகப்படுத்த முயற்சித்து வருகிறது. காரீயத்துக்கான தேவை உலகளாவிய ரீதியில் அதிகரித்து வரும் நிலையிலேயே, இந்தியா குறித்த நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன |
பொறுப்புக்கூறலுக்கான ஆணையை ஐ.நா மனிதஉரிமை பேரவை புதுப்பிக்க வேண்டும்!
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது கொல்லப்பட்டவர்கள் காணாமல்போனவர்களை நினைவுகூர்ந்தவர்களை இலங்கை அதிகாரிகள் அச்சுறுத்தினர் தடுத்து வைத்தனர் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது |