-
23 அக்., 2024
தமிழ் மக்களே....... சுமந்திரன் எம்பி ஆவதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன இரண்டையும் இறுக மூடி விடுங்கள்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பழியை மொட்டு தலைவர்களின் மீது கட்ட முயற்சி! [Tuesday 2024-10-22 17:00]
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்தின் பொறுப்பினை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் மீது சுமத்த ஒருசில மதத்தலைவர்களும், அரசியல் கட்சிகளும் முயற்சிக்கின்றன. இமாம் அறிக்கையையும் எதிர்பார்த்துள்ளோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார் |
சுவிஸ் தூதரக அதிகாரிகள் செல்வம் அடைக்கலநாதனுடன் சந்திப்பு! [Tuesday 2024-10-22 17:00]
சுவிஸ் தூதரக அரசியல் விவகாரங்களுக்கான முதல் செயலாளர் ஜஸ்டின் பொய்லட் தலைமையிலான குழுவினர் இன்று மன்னாருக்கு விஜயம் செய்து, தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர். |
அல்விஸ் ஆணைக்குழுவின் அறிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது! [Tuesday 2024-10-22 17:00]
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான அல்விஸ் குழுவின் அறிக்கையை ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென அரசாங்கம் தெரிவித்துள்ளது |
தேசிய மக்கள் சக்தி அரசுடன் கூட்டுச் சேருவோம்! - ஈபிடிபி கூறுகிறது. [Tuesday 2024-10-22 17:00]
பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர், மக்களின் நலனுக்காகவும், அவர்களின் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்காகவும் கணிசமான ஆசனங்களை பெற்று ஆட்சி அமைக்கின்ற தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக்கு பாராளுமன்றத்தில் ஆதரவு கொடுத்து, அதில் பங்கெடுத்துக் கொள்வோம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடகப் பேச்சாளரும், திருகோணமலை மாவட்ட வேட்பாளருமான ஸ்டாலின் தெரிவித்தார் |