புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஜூலை, 2024

மருத்துவர் அர்ச்சுனா பேராதனை வைத்தியசாலை வைத்திய அதிகாரியாக தரமிறக்கம்

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக இருந்த மருத்துவர் இராமநாதன் அர்சுனா பேராதனை வைத்தியசாலையின் மருத்துவ அதிகாரியாக தரமிறக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக இருந்த மருத்துவர் இராமநாதன் அர்சுனா பேராதனை வைத்தியசாலையின் மருத்துவ அதிகாரியாக தரமிறக்கப்பட்டுள்ளார்.

சஜித்தின் புதிய கூட்டணி - ஓகஸ்ட் 8 இல் கைச்சாத்து

www.pungudutivuswiss.com


அடுத்த தேர்தல்களை இலக்காகக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான புதிய ஐக்கிய மக்கள் கூட்டணி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம்  8 ஆம் திகதி கைச்சாத்தப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார  தெரிவித்தார்.

அடுத்த தேர்தல்களை இலக்காகக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான புதிய ஐக்கிய மக்கள் கூட்டணி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி கைச்சாத்தப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்

மொட்டு கட்சியின் 12 மாவட்டத் தலைவர்கள் ரணில் வசம்

www.pungudutivuswiss.com


 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைத் தவிர வேறு ஒருவரை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தினால் அதற்கு எதிராக செயற்பட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 12 மாவட்டங்களின் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைத் தவிர வேறு ஒருவரை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தினால் அதற்கு எதிராக செயற்பட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 12 மாவட்டங்களின் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று நேற்றுமுன்தினம் இரவு கொழும்பு மலலசேகர மாவத்தையில் உள்ள இராஜாங்க அமைச்சர் ஒருவரின் இல்லத்தில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் 12 மாவட்டங்களைச் சேர்ந்த மொட்டுக் கட்சியின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

பெரும்பான்மையினரின் கருத்துக்கு எதிராக சென்று கட்சி வேறு வேட்பாளரை நியமித்தால் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக அங்கு அவர்கள் முடிவு செய்தனர்.

அதற்காக அவர்கள் தற்போது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏறக்குறைய 75 மொட்டுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரசாரத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான அமைப்பு ரீதியான செயற்பாடுகளை மாவட்ட மட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் தொடர்பு கொண்டு முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

ad

ad