தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனுக்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சி பசுமைப்பூஙகாவில் இன்று பிற்பகல் ஆரம்பமாகி நடைபெறும் கூட்டத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா பங்கேற்று ஆதரவு தெரிவித்துள்ளார். |
-
16 செப்., 2024
பொதுவேட்பாளருக்கு ஆதரவாக மேடையேறினார் மாவை!
தமிழரசுக் கட்சியின் தீர்மானத்தை எதிர்க்கிறேன்
தமிழரசுக்கட்சியின் தீர்மானத்தை நான் எதிர்க்கிறேன் என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் 6 பேர் கொண்ட குழுவின் உறுப்பினருமான சி. சிறிதரன் தெரிவித்தார். வவுனியாவில் உள்ள கட்சி அலுவலகமான தாயகத்தில் 6 பேர் கொண்ட குழு கூறியதன் பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். |
பொதுவேட்பாளரின் செல்வாக்கு அதிகரிப்பால் அரியநேத்திரனின் உயிருக்கு ஆபத்து! - பொலிஸ் எச்சரிக்கை.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அச்சுறுத்தல்கள் தொடர்பில் தமிழ் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு பிரதி பொலிஸ்மா மா அதிபரால் சிங்களத்தில் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இம்முறை தேர்தலில் அரியநேத்திரன் மீதான மக்கள் செல்வாக்கின் நிமித்தம் உயிருக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்படக் கூடும் என்று அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது |
யாழ்ப்பாணத்தில் யுவதி சடலமாக மீட்பு
யாழ்ப்பாணத்தில் இளம் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ். கொட்டடி பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வன் யதுசாயினி என்ற 22 வயது யுவதியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் |
பொதுவேட்பாளரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார் மாவை
தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தமிழ்ப்பொதுவேட்பாளர் அரியநேத்திரனை நேரில் சந்தித்து தனது ஆதரவினையும் வாழ்த்தினையும் தெரிவித்தார். |