2024 தேர்தலை எதிர்கொள்ள ஜோ பைடனின் திறமை குறித்து முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா கேள்வி எழுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி ஜோ பைடன் தேர்தலில் போட்டியிடுவது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ள ஒபாமா, அவரது திறமை குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார். |
-
19 ஜூலை, 2024
"போட்டியில் இருந்து ஜோ பைடன் விலக வேண்டும்" - பராக் ஒபாமா வெளிப்படை
சிறைக்குள் தள்ளுவேன் என ஊடகவியலாளர்களை மிரட்டிய பொலிஸ் அதிகாரி!
யாழ்ப்பாணத்தில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை சிறையில் அடைப்பேன் என சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மிரட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது |
வாக்குறுதியை மீறி பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துகிறது அரசு!
பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை முடிவிற்கு கொண்டு வருவதாக உறுதியளித்துள்ள போதிலும் இலங்கை அதிகாரிகள் தொடர்ந்தும் பயங்கரவாத தடைச்சட்டத்தினை தாங்கள் எதிராளிகள் என கருதுபவர்கள் மற்றும் சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராக பயன்படுத்துகின்றனர் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது |
பலத்தைக் காட்டவே பொதுவேட்பாளருக்கு ஆதரவு!
தமிழ் மக்கள் ஒற்றுமையாக இருக்கின்றோம் என்பதை உலகுக்குக் காட்டுவதுதான் எங்களது விருப்பம் எனவும் அதனால் தான் தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தை நாங்கள் ஆதரிக்கின்றோம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார் |
நண்பியின் துரோகத்தால் உயிரை மாய்த்த பெண்!
தனது நண்பிக்காக வங்கியில் இருந்து கடனாக பெற்று கொடுத்த பணத்தினை மீள செலுத்த முடியாதமையால் மனமுடைந்த குடும்ப பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் , அல்வாய் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் . |
பாடசாலை நேரத்தில் தனியார் கல்வி நிறுவனத்தில் கற்பித்த ஆசிரியர் இடைநீக்கம்!
உயர்தர மாணவர்களுக்கு கணிதம் கற்பித்த ஆசிரியர் ஒருவர், இடைநீக்கம் செய்யப்பட்டார். பாடசாலைக்கு சமுகமளிக்காது, உயர்தர வகுப்பு மாணவர் குழுவிற்கு பணத்துக்காக பிரத்தியேக வகுப்பை நடத்தினார் என்ற குற்றச்சாட்டிலேயே அந்த ஆசிரியரை இடைநீக்கம் செய்துள்ளதாக வடமத்திய மாகாணக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.டபிள்யூ. சமரக்கோன் தெரிவித்தார் |