ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கின்ற முடிவில் எந்த மாற்றங்களும் இல்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சி மீண்டும் அறிவித்துள்ளது. |
-
12 செப்., 2024
சஜித்தை ஆதரிக்கும் முடிவில் மாற்றம் இல்லை - தமிழரசு கட்சி வீம்பு
கமலா ஹாரிஸ் - டொனால்ட் டிரம்ப் இடையே முதல் நேருக்கு நேர் விவாதம்: யார் கை ஓங்கியிருந்தது?
இபோச நடத்துநர் மீது தாக்குதல்
யாழ்ப்பாணத்தில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்ற அரச பேருந்து நேற்று பிற்பகல் வேளையில் வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் தரித்து நின்ற வேளையில் அதன் நடத்துனர் மீது வவுனியா - கொழும்பு பயணிக்கும் தனியார் பேருந்தின் சாரதி ஒருவர் தாக்குதலை மேற்கொண்டதில் நடத்துனர் காயமடைந்த நிலையில் வவுனியா பொதுவைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் |
நாமலின் கூட்டத்தில் கல்வீச்சு
ஹம்பாந்தோட்டை சிறிபோபுர பிரதேசத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் பிரச்சார கூட்டத்தின் மீது கற்கள் வீசப்பட்டுள்ளன. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட குழந்தை ஒன்று காயமடைந்து ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர். |
லண்டனில் புலிக்கொடியுடன் போராட்டம்! - பிரித்தானியாவிடம் இலங்கை அரசு எதிர்ப்பு.
லண்டனில் அண்மையில் புலம்பெயர் தமிழர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் இலங்கை அரசாங்கம், பிரித்தானியாவிடம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. குறித்த போராட்டத்தின் போது விடுதலைப் புலிகளின் சின்னங்கள் காட்சிப்படுத்தப்பட்டமை தொடர்பில் இலங்கை, இங்கிலாந்து உள்துறை அலுவலகத்துடன் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. |