கிளிநொச்சி, பாரதிபுரம் பகுதியில் உள்ள முன்பள்ளி ஒன்றில் வலய பணிமனையால் வழங்கப்பட்ட பாலை அருந்திய 13 சிறார்கள் ஒவ்வாமை ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் |
-
5 ஏப்., 2023
முன்பள்ளியில் பால் குடித்த 13 சிறார்கள் வைத்தியசாலையில் அனுமதி!
சிவ தோஷம்-குல நாசம் - சிவன் மீது கை வைத்த நாடு நாசமாகும்!
இனவாதத்தின் உச்சம் தமிழர்களின் மத உரிமைகளையும் விட்டு வைக்கவில்லை. சிவ தோஷம்-குல நாசம் என்ற வாக்குக்கு அதிக பலம் உள்ளது, சிவன் மீது கை வைக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த நாடு நாசத்தை நோக்கி செல்லும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார் |
நாவலர் மண்டப வழக்கு - ஆளுநரின் உத்தரவுக்கு இடைக்கால தடை!
யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் இருந்து, யாழ்ப்பாணம் மாநகர சபையை வெளியேற வடக்கு மாகாண ஆளுநர், பணித்தமைக்கு எதிராக, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம், இடைக்கால கட்டளை விதித்துள்ளது |
சூறையாடப்படுகிறது குடாக்கடல் பகுதி கடல் வளங்கள்
யாழ்ப்பாணம் -குடாக்கடல் நீரேரிப் பகுதியிலுள்ள கடல்அட்டைப் பண்ணைகள் அகற்றப்பட வேண்டும் இந்தக் கடல் அட்டைப் பண்ணைகளினால் கடல்வளங்கள் சூறையாடப்படுவதுடன் கடல் வாழ் உயிரினங்கள் அழிவடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உரிய திணைக்களங்கள் இதுதொடர்பில் அக்கறை எடுத்து இதனை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் இயக்குநர் அருட்தந்தை யூஜின் பிரான்சிஸ் அடிகளார் தெரிவித்தார் |
சூறையாடப்படுகிறது குடாக்கடல் பகுதி கடல் வளங்கள்!
யாழ்ப்பாணம் -குடாக்கடல் நீரேரிப் பகுதியிலுள்ள கடல்அட்டைப் பண்ணைகள் அகற்றப்பட வேண்டும் இந்தக் கடல் அட்டைப் பண்ணைகளினால் கடல்வளங்கள் சூறையாடப்படுவதுடன் கடல் வாழ் உயிரினங்கள் அழிவடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உரிய திணைக்களங்கள் இதுதொடர்பில் அக்கறை எடுத்து இதனை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் இயக்குநர் அருட்தந்தை யூஜின் பிரான்சிஸ் அடிகளார் தெரிவித்தார் |
ரணில் பக்கம் தாவும் ஹர்ஷ, ஏரான், கபீர்?
எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் அணிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது. அவ்வணியைச் சேர்ந்த மூவர், ஜனாதிபதி ரணிலுடன் இணைந்துகொள்ளவிருக்கின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹர்ஷ டி சில்வா, ஏரான் விக்ரமரத்ன மற்றும் கபீர் ஹாசீம் ஆகியோரே இணைந்து கொள்ளவுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. |
கொழும்புக்கு மேற்கே புவியோட்டில் பாரிய விரிசல்!
கொழும்பிற்கு மேற்கே ஆழ்கடல் பகுதியில் புவியோட்டில் பாரிய விரிசல்கள் காணப்படுவதாகவும், இதற்கும் மேல் மாகாணத்தை பாதிக்கும் நிலநடுக்கங்களுக்கும் இடையேதொடர்புள்ளதா என்பது தொடர்பில் முறையான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் எனவும் பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார். |
தம்பாட்டியில் கடற்படைக்கு காணி சுவீகரிப்பு - இன்று எதிர்ப்பு போராட்டம்!
ஊர்காவற்துறை- தம்பாட்டி பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்படும் காணி சுவீகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நாரந்தனை வடக்கு தம்பாட்டியில் உள்ள இறங்கு துறையில் போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. |
4 ஏப்., 2023
சர்வதேச மன்னிப்புச் சபை-சஜித் சந்திப்பு
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச மன்னிப்புச் சபையின்
3 ஏப்., 2023
விடுதலைப் புலிகளின் ராதா வான்படை உறுப்பினரின் சாட்சியத்தை நிராகரித்து நீதிபதி இளஞ்செழியன் அதிரடி தீர்ப்பு
14 வருடங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 3 தமிழ் அரசியல் கைதிகளை
கொழும்பில் பெருமளவு அதிரடிப்படையினர் குவிப்பு! பல்கலைக்கழக மாணவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம்
கொழும்பில் பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணி மீது மீண்டும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகங்களில் இடம்பெற்று வரும் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரின் ஏற்பாட்டில் இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
லிட்ரோ எரிவாயுவின் விலை பெருந்தொகையால் அதிரடியாக குறைப்பு
நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவோம்!
அரசாங்கம் கொண்டு வரவுள்ள, பயங்கரவாதத்துக்கு எதிரான புதிய சட்டமூலத்தில் அடிப்படை உரிமைகள் மீறப்படுமாயின் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது |
தமிழ்த் தேசிய அரசியல் செய்கிறவர்களால் மட்டுமே எதிர்த்துப் போராட முடியும்!
இன்று வடக்கு - கிழக்கில் பல இடங்களிலே நில அபகரிப்புகள் இடம்பெற்றுக் கொண்டுவருகிறது, தொல்பொருள் திணைக்களத்தின் மூலமாக திட்டமிட்டு புத்தர் சிலைகள் வைக்கப்பட்டு கொண்டிருக்கிறது, இவற்றை எதிர்த்துப் போராடக்கூடியவர்கள் இலங்கை தமிழரசு கட்சியும் தமிழ்த் தேசிய அரசியல் செய்கிறவர்கள் மட்டுமே என ப.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார் |
அத்தியாவசிய பொருட்களின் மொத்த விலை குறைப்பு!
டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளமையினால், அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட இறக்குமதி பொருட்களது மொத்த விலை 10 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதாக அத்தியாவசிய இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது |
தமிழ் எம்.பிக்களின் அரங்கம் - அழைக்கிறார் மனோ!
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அரங்கம் ஒன்றை நாடாளுமன்றத்தில் அமைத்திடும் யோசனையை முன்னிறுத்தி தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி., இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி., ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் த. சித்தார்த்தன் எம்.பி., தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி. விக்னேஸ்வரன் எம்.பி. ஆகியோருக்கு மின்னஞ்சல் கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார் |