புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஏப்., 2023

சிவ தோஷம்-குல நாசம் - சிவன் மீது கை வைத்த நாடு நாசமாகும்!

www.pungudutivuswiss.com



இனவாதத்தின் உச்சம் தமிழர்களின் மத உரிமைகளையும் விட்டு வைக்கவில்லை. சிவ தோஷம்-குல நாசம் என்ற வாக்குக்கு அதிக பலம் உள்ளது, சிவன் மீது கை வைக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த நாடு நாசத்தை நோக்கி செல்லும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.

இனவாதத்தின் உச்சம் தமிழர்களின் மத உரிமைகளையும் விட்டு வைக்கவில்லை. சிவ தோஷம்-குல நாசம் என்ற வாக்குக்கு அதிக பலம் உள்ளது, சிவன் மீது கை வைக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த நாடு நாசத்தை நோக்கி செல்லும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மீதான கட்டளைச்சட்டத்தின் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

வவுனியா வெடுக்குநாறி காட்டுப்பகுதியில் தமிழ்ர்கள் பாரம்பரியமாக வழிபட்டு வந்த ஆதிலிங்கேஷ்வர ஆலயத்தின் சிவலிங்கங்கள் விக்கிரகங்கள் உடைத்தெறியப்பட்டுள்ளன. அம்மன் விக்கிரகத்தின் கழுத்து பகுதி வெட்டப்பட்டு வீசியெறியும் அளவிற்கு இந்த நாட்டில் இனவாதம் மேலோங்கியுள்ளது.

ஒரு இனத்தினர் காலம் காலமாக கடைபிடித்த மத நம்பிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து செல்கிறதே தவிர குறைவடையவில்லை.தமிழர்களின் இருப்பும்,சைவத்தின் இருப்பும் திட்டமிட்ட வகையில் அழிக்கப்படுவது கவலைக்குரியது.

முல்லைத்தீவு குருந்தூர் மலை பகுதியில் இருந்து சிவ சின்னங்கள்,சூலம் மற்றும் சிவலிங்கம் பெரும்பான்மை சமூகத்தால் அழிக்கப்பட்டது.

குருந்தூர் மலையில் விகாரை நிர்மாணிக்கும் பணிகளுக்கு முல்லைத்தீவு மாவட்டம் பல தடவைகள் தடை உத்தரவு பிறப்பித்தும், நீதிமன்றத்தை மதிக்காமல் விகாரை ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

தெற்கில் மாத்திரமே நீதிமன்றங்கள் சுயாதீனமாகவும்,தைரியமாகவும் செயற்படுகிறது.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகள் பிறப்பிக்கும் உத்தரவை எவரும் குறிப்பாக பெரும்பான்மை தரப்பினர் மதிப்பதும் இல்லை,செயற்படுத்துவதுமில்லை.

வவுனியா வெடுக்குநாறி பகுதியில் தமிழர்கள் 1957 ஆம் ஆண்டு காலமும் சிவ வழிபாட்டில் ஈடுபடுகிறார்கள்.இந்த பகுதி தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் இல்லை அத்துடன் தொல்பொருள் அளவையியல் வரைபுக்குள் உள்வாங்கப்படவில்லை,இவ்வாறான பின்னணியில் இந்துக்களின் மத உரிமைகளுக்கு தொல்பொருள் திணைக்களம் இடையூறு விளைவிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இனவாதம் மற்றும் பௌத்தவாதம் பற்றி மேலோங்கி கருத்துரைக்கின்ற தரப்பினர் தான் ஆதிலிங்கேஷ்வரர் ஆலயத்திற்கு தாக்குதலை மேற்கொண்டுள்ளார்கள் .தமிழர்களின் காணி உரிமையும் பறிக்கப்படுகிறது,மத உரிமைகளும் பறிக்கப்படுகிறது.

‘சிவன் தோசம் – குல நாசம்’ என்ற வாக்குக்கு இந்துக்கள் மத்தியில் அதிக நம்பிக்கை உள்ளது.சிவன் தலையில் கை வைக்கப்பட்டுள்ளது,ஆகவே இந்த நாடு நாசத்தை நோக்கி செல்லும் என்பதில் எவ்வித ஐயமும் கிடையாது. உள்ளக பொறிமுறை ஊடாக தீர்வு காண்பதாக சர்வதேசத்திற்கு பொய்யுரைத்து விட்டு,பன்னாட்டையும் ஏமாற்றும் செயற்பாடுகள் மாத்திரம் முன்னெடுக்கப்படுகிறது.

உடைக்கப்பட்ட சிவலிங்கம் மற்றும் விக்கிரகங்களை மீள் அமைப்பதாக இரு அமைச்சர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெடுக்குநாறி பகுதிக்கு விஜயம் செய்தார்கள்.இந்த விவகாரம் சட்ட விசாரணைக்கு உட்பட்டுள்ளது, ஆகவே சட்டத்தின் பிரகாரம் நடடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டு விட்டு திரும்பி விட்டார்கள்.

உடைக்கப்பட்ட சிலைகள் மற்றும் சிவலிங்கத்தை மீள் அமைப்பதற்கு எவ்வித சட்ட தடைகளும் காணப்படவில்லை.உண்மையில் இந்த அமைச்சர்கள் ஆடையுடன் திரிகிறார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் கௌதாரிமுனை பகுதியில் 100 ஹேக்கர் காணி இறால் பண்ணை செய்கைக்காக அளக்கப்படுகிறது.3700 ஆண்டுகாலமாக கௌதாரி முனை பகுதியில் வாழும் தமிழர்கள் இந்த செயற்பாட்டுக்கு கடுமையாக எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள். தமிழர்களின் பூர்வீக காணிகளை சுவிகரித்து சிங்கள குடியேற்றத்தை அமைக்கும் அரசாங்கத்தின் நோக்கத்திற்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் அரசியல்வாதிகள் துணை செல்வது கவலைக்குரியது என்றார்.

ad

ad