புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஏப்., 2023

தம்பாட்டியில் கடற்படைக்கு காணி சுவீகரிப்பு - இன்று எதிர்ப்பு போராட்டம்!

www.pungudutivuswiss.com


ஊர்காவற்துறை-  தம்பாட்டி பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்படும் காணி சுவீகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நாரந்தனை வடக்கு தம்பாட்டியில் உள்ள இறங்கு துறையில் போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

ஊர்காவற்துறை- தம்பாட்டி பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்படும் காணி சுவீகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நாரந்தனை வடக்கு தம்பாட்டியில் உள்ள இறங்கு துறையில் போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

ஊர்காவற்துறை மீனவர்களுக்கு சொந்தமான தம்பாட்டி இறங்குதுறைக்கு அண்மையில் உள்ள பகுதியில் கடற்படையினரால் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டிருந்த நிலையில், இதனை அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

எனினும் குறித்த அரச காணியிலிருந்து கடற்படையினர் வெளியேறாத நிலையில், இன்றைய தினம் நில அளவை திணைக்களத்தினர் அந்த காணியை அளந்து கடற்படையினருக்கு வழங்குவதற்காக அங்கு செல்லவுள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களால் இன்று காலை 8 மணியளவில் தம்பாட்டி இறங்குதுறையில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

ad

ad