புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 டிச., 2023

கடந்த ஆண்டு 1890 பிக்குகள் துறவறத்தை துறந்தனர்! [Thursday 2023-12-07 07:00]

www.pungudutivuswiss.com


குருந்தூர் மலை விவகாரத்தை பேசி முரண்பாட்டை தூண்டி விடுபவர்கள், கடந்த ஆண்டு மாத்திரம் 1890 பிக்குகள் துறவறத்தை துறந்து விட்டு சென்றுள்ளதை அறியாமல் இருப்பது வேடிக்கையாகவுள்ளதென  ஐக்கிய மக்கள் குடியரசின் தலைவரும் எம்.பி.யுமான  பாட்டலி சம்பிக்க தெரிவித்தார்.

குருந்தூர் மலை விவகாரத்தை பேசி முரண்பாட்டை தூண்டி விடுபவர்கள், கடந்த ஆண்டு மாத்திரம் 1890 பிக்குகள் துறவறத்தை துறந்து விட்டு சென்றுள்ளதை அறியாமல் இருப்பது வேடிக்கையாகவுள்ளதென ஐக்கிய மக்கள் குடியரசின் தலைவரும் எம்.பி.யுமான பாட்டலி சம்பிக்க தெரிவித்தார்

பாராளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற 2024ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தொல்பொருள் மரபுரிமைகள் தொடர்பில் காலம் காலமாக பேசப்படுகிறது.குருந்தூர் மலை ஒரு இனத்துக்கோ அல்லது மதத்துக்கோ சொந்தமானதல்ல ,ஒட்டுமொத்த மக்களுக்கும் சொந்தமானது. இந்த விவகாரத்தை ஜெருசலேம் அளவுக்கு கொண்டு செல்லாமல் பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காண வேண்டும்.மனித உரிமைகளுக்கு அப்பாற்பட்டு மதங்கள் செயற்பட்டால் முரண்பாடுகள் தோற்றம் பெறும்.

ad

ad