புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 டிச., 2023

சுவிஸில் வாகன காப்புறுதி கட்டணம் உயர்வு

www.pungudutivuswiss.com

சுவிட்சர்லாந்தில் வாகனங்களுக்கான காப்புறுதி கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 2024 ஆம் ஆண்டில் நாட்டில் வாகன காப்புறுதி கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வாகன காப்புறுதி கட்டண அதிகரிப்பு சுவிட்சர்லாந்தின் அரைவாசிக்கும் மேற்பட்ட வாகன சாரதிகளை பாதிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

சராசரியாக காப்புறுதி கட்டணங்கள் 15% உயர்த்தப்பட உள்ளதாகவும் சில காப்புறுதி ஒப்பந்தங்கள் 30 வீதம் வரையில் அதிகரிக்கப்பட உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவி வரும் பணவீக்க நிலைமைகளினால் இவ்வாறு காப்புறுதி கட்டணங்கள் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை சுவிட்சர்லாந்தில் புதிய வாகனங்களின் விலைகள் ஆறு விதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலைகள் 20 வீதத்தினால் உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் வாகன உதிரி பாகங்களின் விலைகள் 16 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுவிட்சர்லாந்து அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

ad

ad