புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 டிச., 2023

ரிரான் அலசுக்கு கத்தோலிக்க திருச்சபை சவால்! - வலுக்கிறது மோதல்.

www.pungudutivuswiss.com


பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் குண்டர் செயற்பாடுகளுக்கு நாம் ஒருபோதும் அஞ்சப் போவதில்லை. அருட்தந்தை சிறில் காமினி தொடர்புடைய விபத்து குறித்து பேராயருக்கு நெருங்கிய ஒருவர் அவருடன் தொலைபேசியில் உரையாடியதாக அவர் தெரிவித்துள்ளமை முற்றிலும் பொய்யாகும் என்று பேராயர் இல்லத்தின் மக்கள் தொடர்பு ஒருங்கிணைப்பு பிரிவின் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் பெர்னாண்டோ தெரிவித்தார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் குண்டர் செயற்பாடுகளுக்கு நாம் ஒருபோதும் அஞ்சப் போவதில்லை. அருட்தந்தை சிறில் காமினி தொடர்புடைய விபத்து குறித்து பேராயருக்கு நெருங்கிய ஒருவர் அவருடன் தொலைபேசியில் உரையாடியதாக அவர் தெரிவித்துள்ளமை முற்றிலும் பொய்யாகும் என்று பேராயர் இல்லத்தின் மக்கள் தொடர்பு ஒருங்கிணைப்பு பிரிவின் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் பெர்னாண்டோ தெரிவித்தார்

கடந்த வியாழக்கிழமை ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்த கருத்துக்களுக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அருட்தந்தை சிறில் காமினியால் இடம்பெற்ற விபத்தின்போது, பதில் பொலிஸ்மா அதிபருடன் தொலைபேசியில் உரையாடியதாகவும், பிணை வழங்கியமைக்காக நன்றி தெரிவித்ததாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்திருக்கின்றார். அது முற்றிலும் பொய்யானதொரு விடயமாகும்.

விபத்து இடம்பெற்று அருட்தந்தை சிறில் காமினி பொலிஸாரால் விடுவிக்கப்பட்ட மறுநாளே தான் இந்த சம்பவம் தொடர்பில் தெரிந்துகொண்டதாக பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மிகவும் பொறுப்புடன் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திடமோ அல்லது பொலிஸாரிடமோ தனது பெயரைக் கூறி சிறப்புரிமைகளைப் பெற்றுக்கொள்ளக் கூடியளவு நெருக்கமானவர்கள் எவரும் தனக்கு அருகில் இல்லை என்றும், அவ்வாறு எவரும் செயற்பட்டிருப்பார்களானால், அது தனக்கு பெரும் ஆச்சரியம் அளிப்பதாகவும் பேராயர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, அமைச்சரால் பேராயரை தொடர்புபடுத்தி கூறப்பட்ட விடயங்கள் முற்றிலும் பொய்யானவை என்பதை நாம் பொறுப்புடன் கூறிக்கொள்கின்றோம்.

அத்தோடு அருட்தந்தை சிறில் காமினியும் இவ்வாறு ஒருவர் பதில் பொலிஸ்மா அதிபரிடம் பேசிய விடயத்தை அறிந்திருக்கவில்லை. எனவே இவ்வாறு அப்பட்டமான பொய்களைக் கூற வேண்டாம் என்று அமைச்சர் டிரான் அலஸிடம் கேட்டுக்கொள்வதோடு, மாறாக அமைச்சர் கூறுவது உண்மையெனில், அதனை சாட்சியங்களுடன் நிரூபிக்குமாறும் சவால் விடுக்கின்றோம்.

அமைச்சர் டிரான் அலஸின் செயற்பாடுகளை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம். இவர் அண்மைய நாட்களாக கத்தோலிக்க சபைக்கும், பேராயர் மீதும் அவதூறுகளை ஏற்படுத்தும் வகையில் செயற்படுகின்றமை கவலைக்குரியதாகும். இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்திக்கொள்ளுமாறு அமைச்சரை வலியுறுத்துகின்றோம். இவ்வாறு கத்தோலிக்க சபை மற்றும் பேராயர் மீது அவதூறு பரப்பும் செயற்பாடுகளானது மதங்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவிப்பதாகவும், மதத்தை நிந்திப்பதாகவும் உள்ளது.

இவ்வாறான செயற்பாடுகள் அவரை சாபத்துக்குள்ளாக்கும். அரசாங்கத்தின் பிரதான அமைச்சரான டிரான் அலஸ் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஒப்பந்தத்தை செயற்படுத்துகின்றாரா என்ற சந்தேகம் நிலவுகிறது. அமைச்சர் டிரான் அலஸ் அவரது குண்டர் செயற்பாட்டை வேறு நபர்களிடம் காண்பிக்கலாம். ஆனால், கத்தோலிக்க சபையைச் சேர்ந்த நாம் அதற்கு ஒருபோதும் அஞ்சப் போவதில்லை என்றார்.

ad

ad