புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 டிச., 2023

மொட்டின் வரவுசெலவுத் திட்டத்தை மொட்டு உறுப்பினர்களே தோற்கடிப்பு

www.pungudutivuswiss.com


ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் (மொட்டு சின்னம்) தலைவர் முன்வைத்த பட்ஜெட் யோசனையை, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் இணைந்து தோற்கடித்துள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் (மொட்டு சின்னம்) தலைவர் முன்வைத்த பட்ஜெட் யோசனையை, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் இணைந்து தோற்கடித்துள்ளனர்

எல்பிட்டிய பிரதேச சபையின் (ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன) தலைவரினால் முன்வைக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்ட யோசனைகளை, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஏழு உறுப்பினர் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 19 பேர் இணைந்து, ஒன்பது மேலதிக வாக்குகளால் தோற்கடித்துள்ளனர்.

இலங்கையில், இருக்கும் உள்ளூராட்சி மன்றங்களில் எல்பிட்டிய பிரதேச சபை மட்டுமே தற்போது செயற்பாட்டில் உள்ளது.

எல்பிட்டிய பிரதேச சபையின் மாதாந்த கூட்டம், பிரதேச சபையின் தலைவர் கருணாசேன பொன்னம்பெருமவின் (ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன) தலைமையில், இன்று முற்பகல் 10 மணிக்கு, பிரதேச சபையின் மண்டபத்தில் ஆரம்பமானது.

சமய வணக்கம் மற்றும் உயிரிழந்த படையினரை நினைவு கூர்ந்ததன் பின்னர், 2024 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்ட யோசனைகள், சபை தலைவரினால் முன்​வைக்கப்பட்டது. அதன் பின்னர் வாக்கெடுப்புக்கு விடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad