புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 டிச., 2023

காலத்தைக் கடத்த முனைகிறது அரசாங்கம்!- 3 நாடுகளின் தூதுவர்களுக்கு தமிழ் எம்.பிக்கள் எடுத்துரைப்பு. [Monday 2023-12-18 06:00] உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் அளித்த வாக்குறுதிகள் நடைமுறைப்படுத்தப்படாத நிலையில் உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறையை ஸ்தாபித்து அமுலாக்க முயற்சிப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவிப்பதானது காலத்தைக் கடத்தும் செயலாகும் என்று வடக்கு தமிழ் பிரதிநிதிகள் ஜப்பான், தென்னாபரிக்கா,மற்றும் சுவிட்சர்லாந்து இராஜதந்திரிகளிடத்தில் நேரடியாக எடுத்துரைத்துள்ளனர்

www.pungudutivuswiss.com



உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் அளித்த வாக்குறுதிகள் நடைமுறைப்படுத்தப்படாத நிலையில் உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறையை ஸ்தாபித்து அமுலாக்க முயற்சிப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவிப்பதானது காலத்தைக் கடத்தும் செயலாகும் என்று வடக்கு தமிழ் பிரதிநிதிகள் ஜப்பான், தென்னாபரிக்கா,மற்றும் சுவிட்சர்லாந்து இராஜதந்திரிகளிடத்தில் நேரடியாக எடுத்துரைத்துள்ளனர்.

உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் அளித்த வாக்குறுதிகள் நடைமுறைப்படுத்தப்படாத நிலையில் உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறையை ஸ்தாபித்து அமுலாக்க முயற்சிப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவிப்பதானது காலத்தைக் கடத்தும் செயலாகும் என்று வடக்கு தமிழ் பிரதிநிதிகள் ஜப்பான், தென்னாபரிக்கா,மற்றும் சுவிட்சர்லாந்து இராஜதந்திரிகளிடத்தில் நேரடியாக எடுத்துரைத்துள்ளன

வடக்கிற்கு விஜயம் செய்துள்ள இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி ஹிதேகி, சுவிட்சர்லாந்து தூதுவர் சிரி வொல்ட் மற்றும் தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் சாண்டில் ஷால்க் ஆகியோருக்கும் தமிழ் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சனிக்கிழமை இரவு யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் சந்திப்பொன்று நடைபெற்றது.

தமிழ்க் கட்சிகளின் சார்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன், புளொட் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தருமலிங்கம் சித்தார்த்தன், ரெலோ தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், மற்றும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வினோநோதராதலிங்கம், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீததரன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது, தமிழ் அரசியல் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் ஒருமித்த கருத்துக்கள் காணப்படுகின்றனவா, அது எவ்வாறான விடயங்களில் உள்ளன என்ற கேள்வி இராஜதந்திரிகளால் முன்வைக்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த சி.வி.விக்னேஸ்வரன், சிறீதரன், சித்தார்த்தன், செல்வம் அடைக்கலாநாதன், கஜேந்திரன் ஆகியோர் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பூர்வீகத் தாயகம் என்பதில் தமக்கிடையே ஒருமித்த கருத்துக் காணப்படுவதாகவும், இந்த நாட்டில் ஒற்றை ஆட்சிக்குள் தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையில் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வினை காண முடியாது என்பதிலும், ஏகோபித்த நிலைப்பாடுகள் காணப்படுகின்றன.

சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிக்கையில், தமிழ் மக்கள் 3ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரான வரலாற்றைக் கொண்டவர்கள். அவர்களின் வரலாற்று வாழிடம் தான் வடக்கு,கிழக்கு பிரதேசங்களாகும். இந்த விடயத்தினை சிங்கள் மக்கள் முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் தவறான வரலாற்றுப் புனைவுகளை மையப்படுத்தி தமிழர்களை இரண்டாம் தரப்பிரஜைகளாக கருதுகின்றார்கள்.

இந்த நிலைமையில் மாற்றங்களை ஏற்படுத்துவதாக இருந்தால் இந்தநாட்டின் பூர்வீகக் குடிகள் சம்பந்தமாக வரலாற்று நூலொன்று துறைசார்ந்தவர்களால் உருவாக்கப்பட வேண்டியுள்ளது. இந்தச் செயற்பாட்டுக்கு தாங்கள்(இராஜதந்திரிகள்) ஒத்துழைப்புக்களைச் செய்ய வேண்டும்.

அதேபோன்று, இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் பற்றிய உரையாடல் முக்கியமானது. ஆனால் நாட்டின் தற்போதைய சூழலைப் பார்த்தீர்கள் என்றால், கிணற்றுக்குள் தத்தளிக்கும் ஒருவருக்கும், கிணற்றுக்கு வெளியில பாதுகாப்பாக இருக்கும் ஒருவருக்கும் இடையில் தான் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதற்கு முனைகின்றீர்கள்.

இந்த முயற்சியானது பொருத்தமானதொன்றல்ல. இது வெற்றிபெறுவது மிகவும் கடினமானது. ஆகக்குறைந்தது கிணற்றுக்குள் இருப்பவரை வெளியே கொண்டுவந்ததன் பின்னர் அவ்விதமான உரையாடலை மேற்கொள்வதே பொருத்தமானது. ஆகவே முதலில் அதற்கான நடவடிக்கைகளையே முன்னெடுக்க வேண்டும்.

தென்னாபிரிக்காவில், கறுப்பினத்தவர்களுக்கும், வெள்ளையினத்தவர்களுக்கும் இடைலான நல்லிணக்க உரையாடல் முதலில் இரு தரப்பினரும் சமமானவர்கள் என்ற நிலைமை உருவாக்கப்பட்டதன் பின்னர் தான் ஆரம்மாகியிருந்தது.

ஆகவே, முதலில் தமிழர்கள் இந்த நாட்டின் பிரஜைகள், அவர்கள் பூர்வீகமானவர்கள், அவர்களுக்கும் சம அந்தஸ்து உள்ளது என்பது பெரும்பான்மை சிங்கள மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

அந்த நிலைமை உருவாகுவதாக இருந்தால் இனப்பிரச்சினைக்கான தீர்வு காணப்பட வேண்டும். அந்தத் தீர்வு ஒற்றையாட்சிக்குள் ஏற்படுத்த முடியாது என்றார்.

சிவஞானம் சிறீதரன் தெரிவிக்கையில், இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியான உள்நாட்டிலும், சர்வதேசத்துக்கும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாது காலங்கடத்தி வருகின்றது. இவ்வாறான நிலையில் தான் உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறை தொடர்பில் ஆராயப்படுகின்றது.

இலங்கை அரசாங்கம் உண்மைகளை கண்டறிந்து, நல்லிணக்கத்தை ஏற்படுத்துவற்காக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபித்திருந்தது. இந்த ஆணைக்குழு இனப்பிரச்சினைக்கான தீர்வு, நீதியை நிலைநாட்டில், மீண்டும் நிகழாமையை உறுதிப்படுத்தல் உள்ளிட்ட விடயங்களை பரிந்துரைகளில் உள்ளடக்கியிருந்தது. இருப்பினும், அந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாது கிடப்பில் போட்ட அரசாங்கம் பின்னர் பரணகம ஆணைக்குழுவை ஸ்தாபித்தது.

அதன் அறிக்கையும் கையளிக்கப்பட்டதன் பின்னர் கிடப்பில் போட்டதோடு தொடர்ச்சியாக 2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக சர்வதேச விசேட அறிக்கையாளர்கள், நிபுணர்களின் பங்கெடுப்புடன் உள்ளக விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டது.

ஆனால், எந்தவொரு விடயங்களும் நடைமுறையில் முன்னெடுக்கப்படவில்லை. போர் முடிந்து 14ஆண்டுகள் நிறைவுக்கு வந்துவிட்டது. அரசாங்கம் தாமாகவே முன்வந்து நியமித்த ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளைக் கூட நடைமுறைப்படுத்துவதற்கு தயாராக இல்லை.

அவ்வாறான நிலையில், தற்பொது உண்மை, மற்றும் நல்லிணக்க பொறிமுறையொன்றை ஸ்தாபிப்பதானது, அரசாங்கத்தினை பாதுகாக்கும் அல்லது காலங்கடத்தும் செயற்பாடாகவே இருக்கும் என்பதே யதார்த்தமானது.

அதுமட்டுமன்றி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரையில் அவர் கடந்த காலத்தில் விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துவிட்டு பின்னர் அவ்வமைப்பை பிளவுபடுத்துவதில் தான் கவனம் செலுத்தினார்.

அவ்விதமானவரின் தலைமையின் கீழ் உண்மை, நல்லிணக்க பொறிமுறை ஆரம்பிக்கப்படுவதானது தமிழர்களையும், அவர்களின் பிரதிநிதித்துவங்களையும் பலவீனப்படுத்துவதற்காகவே பயன்படுத்தப்படுவதற்கும் அதிகளவான சந்தர்ப்பங்கள் உள்ளன.

ஆகவே, வடக்கு,கிழக்கு தமிழ் மக்களின் மரபுவழித் தாயகம் என்பதையும், அவர்கள் தமது இழந்த இறமையை மீறப்பெறுவதற்காக சுயநிர்ணய அடிப்படையிலான அரசியல் தீர்வொன்று வழங்கப்பட வேண்டும். தற்போது இலங்கை பொருளாதார ரீதியாக நெருக்கடிகளைச் சந்தித்துள்ள நிலையில் சர்வதேச நாடுகள் அதன் மீட்சிக்காக கைகொடுக்கின்றன. ஆனால் அவை எந்தவிதமான நிபந்தனைகளையும் வழங்குவதில்லை.

ஆகக்குறைந்தது, தமிழ் மக்களின் நிலங்களை ஆக்கிரமித்தல், பௌத்தத்தின் பெயரால் முன்னெடுக்கப்படும் அபகரிப்புக்களை நிறுத்தல் உள்ளிட்ட உடனடியான பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நிபந்தனைகளை அல்லது அழுத்தங்களை பிரயோக்க வேண்டும் என்றார்.

செல்வம் அடைக்கலநாதன் மற்றும் தருமலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் தெரிவிக்கையில், இனங்களுக்கு இடையிலான நல்லிணக்க முயற்சிகளை நாம் வரவேற்கின்றோம். ஆனால் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காணாது நல்லிணக்க முயற்சிகள் வெற்றி அளிப்பதற்கான வாய்ப்புக்கள் குறைவாகவே உள்ளன. விசேடமாக, நில அக்கிரமிப்பு, காணாமலாக்கப்பட்டவர்கள் விவகாரம், பௌத்த சமயத்தின் பெயரால் முன்னெடுக்கப்படும் ஆக்கிரமிப்புக்கள் உள்ளிட்டவற்றுக்கு தீர்வு காணப்பட வேண்டும். அதேபோன்று பிரதானமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி வழங்கும் செயற்பாட்டில் முன்னேற்றகரமான நிலைமைகள் காணப்படாத நிலையில் பொறுப்புக்கூறல் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஆகவே பொறுப்புக்கூறுவதற்கான பொறிமுறையும் அவசியமாகின்றது என்றனர்.

செல்வராசா கஜேந்திரன், தெரிவிக்கைiயில், நல்லிணக்கம் தொடர்பான முயற்சிகளை நாம் வரவேற்கின்றோம். உங்களுடைய கோட்பாட்டின்படி அனைத்து இனங்களுக்கும், மதங்களுக்கும் இடையில் பிணைப்பை ஏற்படுத்தி சமாதானத்தை கட்டியெழுப்புவது நல்லொதொரு முயற்சியாக இருந்தாலும் இலங்கையில் அவ்விதமான நிலைமைகளை முன்னெடுப்பதற்கு ஏற்ற சூழல் காணப்படவில்லை.

பெரும்பான்மை சிங்களவர்கள், தமிழர்களும், முஸ்லிம்களும் சிறுபான்மை சமூகத்தினர் அவர்கள் ஒரு தேசிய இனத்தினர் என்பதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை. அவர்களைப் பொறுத்தவரையில், இலங்கை, சிங்கள, பௌத்த நாடு அந்த அடையாளத்துக்கள் தமிழர்கள் உள்ளிட்ட ஏனையவர்களும் கரைந்து விட வேண்டும் என்றே கருதுகின்றனர்.

அதுமட்டுமன்றி, ஒற்றையாட்சியை மேலும் வலுப்படுத்தவே முனைகின்றனர். எம்மைப்பொறுத்தவரையில் ஒற்றையாட்சிக்குள் தமிழர்களுக்கு எந்த தீர்வையும் பெற்றுக்கொள்ள முடியாது. 13ஆவது திருத்தச்சட்டத்தினை அமுலாக்குவதும் பயனற்றது. ஏனென்றால் 30இற்கும் மேற்பட்ட வழக்குகளினால் 13ஆவது திருத்தச்சட்டத்தில் அதிகாரங்கள் இல்லை என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே இனப்பிரச்சினை தீர்வு சம்பந்தமான உரையாடலை ஆரம்பிப்பதாக இருந்தால் ஒற்றையாட்சியை முழுமையாக நீக்க வேண்டும்.

அதேபோன்று, தமிழர்களின் அடையாளங்களை அழிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போதும் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன. குறிப்பாக, இரண்டு தினங்களுக்கு முன்னதாக நானும் எனது கட்சித்தலைவரும் மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை கால்நடையாளர்கள் பிரச்சினைகளை ஆராய்வதற்காக நேரில் செல்வதற்கு முனைந்தபோது, படையினர் தடுத்து நிறுத்தினர். பின்னர் அங்கே அம்பிட்டிய தேரர் சமூகமளித்து பதற்றங்களை ஏற்படுத்தினார். ஆனால் படையினர் தேரரின் செயற்பாடுகள் தொடர்பில் எவ்வித கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை.

இவ்வாறு தான் பாரபட்சமான நிலைமகள் நீடிக்கின்றன. ஆகவே எம்மைப்பொறுத்தவரையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதாக இருந்தால் உள்நாட்டுக்குள் முன்னெடுக்கப்படும் எந்தவொரு பொறிமுறையாலும் பலன்கள் ஏற்படப்போவதில்லை. அந்தவகையில் இலங்கையை சர்தேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பாகவோ அல்லது சர்வதேச குற்றவியல் விசேட தீர்ப்பாயத்தின் முன்பாகவோ நிறுத்துவதன் ஊடாக மட்டுமே நீதியையும் பொறுப்புக்கூறலையும் நிலைநிறுத்த முடியும்.

அந்தவகையில், உள்நாட்டில் முன்னெடுக்கப்படுவதற்கு தயாராகும் உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறையினால் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான நன்மைகளும் ஏற்படுமென நாம் கருதவில்லை. அது காலம் கடத்தும் செயற்பாடாகவே அமையும் என்றார்.

ad

ad