புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 டிச., 2023

மன்னாரில் வெள்ள அபாய எச்சரிக்கை!

www.pungudutivuswiss.com


மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றமையினால்  பெரும்பாலான தாழ் நில பிரதேசங்கள் வெள்ள அனர்த்தத்திற்கு உள்ளாகுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவம் தெரிவித்துள்ளது.

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றமையினால் பெரும்பாலான தாழ் நில பிரதேசங்கள் வெள்ள அனர்த்தத்திற்கு உள்ளாகுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவம் தெரிவித்துள்ளது

மேலும் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் பாலியாறு மற்றும் பரங்கியாறு போன்ற ஆறுகளின் நீர் மட்டங்கள் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மன்னார் -யாழ்ப்பாணம்(ஏ-32) பிரதான வீதி வெள்ள நீரில் மூழ்கும் வாய்ப்பு காணப்படுவதாகவும் எனவே குறித்த வீதியூடாக பயணம் செய்யும் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறும் அரிவித்துள்ளது.

அத்துடன் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தேவன் பிட்டி,பகுதியில் 72 குடும்பங்களைச் சேர்ந்த 161 நபர்கள் இடம் பெயர்ந்து தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கான உணவு இராணுவத்தினரால் வழங்கப்பட்டுள்ளது.

ad

ad