புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 டிச., 2023

உலகத் தமிழர் பேரவை மகிந்தவைச் சந்தித்தது குறித்து ஹரி ஆனந்தசங்கரி அதிருப்தி!

www.pungudutivuswiss.com


உலகத் தமிழர் பேரவையும், கனடிய தமிழ்க் காங்கிரஸூம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அண்மையில் சந்தித்ததையிட்டு நான் கடும் அதிருப்தி கொண்டுள்ளேன் என்று கனடிய சுதேச உறவுகளின் அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி  தெரிவித்துள்ளார்.

உலகத் தமிழர் பேரவையும், கனடிய தமிழ்க் காங்கிரஸூம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அண்மையில் சந்தித்ததையிட்டு நான் கடும் அதிருப்தி கொண்டுள்ளேன் என்று கனடிய சுதேச உறவுகளின் அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

பாரிய அளவானதும், கட்டமைக்கப்பட்டதுமான மனித உரிமை மீறல்களுக்காக மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் மீது 2023 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆந் திகதி கனேடிய அரசு தடைகளை விதித்தது.

தமிழர்களுக்கு எதிராகப் புரியப்பட்ட போர்க் குற்றங்கள், மனித இனத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை என்பவற்றுக்கு பொறுப்புக்கூறலை வலியுறுத்திப் பல வருடங்களாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலும், ஏனைய சர்வதேச அரங்குகளிலும் குரல் எழுப்பப்பட்ட பின்னரே இது நடைபெற்றது.

தப்பிப்பிழைத்தவர்கள், குடிசார் சமூக அமைப்புகள், இலங்கையில் உள்ள தமிழர்கள் ஆகியோரைக் கலந்தாலோசிக்காது மேற்கொள்ளப்படும் இந்த முயற்சி முடிவெடுப்பதில் ஏற்பட்ட பாரதூரமான தவறாகும்.

இந்த நடவடிக்கைகள், இந்த அமைப்புகள் மீதும், புலம்பெயர் தமிழர்களைப் பிரதிநிதித்துவம் செய்வதாகவும், மிக முக்கியமாகத் தாய்நாட்டில் உள்ள தமிழ் மக்களின் நலன்களுக்காகச் செயற்படுவதாகவும் இந்த அமைப்புகள் கூறுவதன் மீதும் இருந்த நம்பிக்கையை இழக்கச் செய்துள்ளன.

இலங்கைத் தீவில் உள்ள தமிழர்கள், பொறுப்புக்கூறலுக்குத் தொடர்ச்சியாக அழைப்பு விடுக்கும் பலமானதும், சக்திவாய்ந்ததுமான குரலைக் கொண்டுள்ளார்கள். அவர்களின் குரலாக இந்த அமைப்புகளின் நிலைப்பாடுகள் அமையவில்லை. இந்த அமைப்புகளின் தலைமைகளை ஆழ்ந்து சிந்திக்குமாறும், அவற்றின் செயல்களுக்குப் பொறுப்புக்கூறுமாறும் நான் கோருகிறேன் என்றுள்ளது.

ad

ad