புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 டிச., 2023

ருத்தித்துறையில் கொட்டித் தீர்த்த 146 மில்லி மீட்டர் கனமழை! - பல பகுதிகள் வெள்ளத்தில்.

www.pungudutivuswiss.com

இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில், இலங்கையில் அதிகபட்ச மழை வீழ்ச்சி பருத்தித்துறையில் பதிவாகியுள்ளது.

இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில், இலங்கையில் அதிகபட்ச மழை வீழ்ச்சி பருத்தித்துறையில் பதிவாகியுள்ளது

இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பருத்தித்துறையில் 146 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவானதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தெல்லிப்பழையில் 140.2 மில்லி மீட்டரும், அச்சுவேலியில், 115.4 மில்லி மீட்டரும் நெடுங்கேணியில் 93.6 மில்லி மீட்டரும் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

வடமராட்சி மற்றும், வலிகாமம் வடக்கு கரையோரப்பகுதிகள் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இந்தக் காலப்பகுதியில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி காணப்பட்டுள்ளது.

இன்று காலையில் கனமழை கொட்டியதுடன், தொடர்ந்து விட்டு விட்டுப் பெய்து வரும் மழையினால் யாழ்ப்பாணக் குடாநாட்டில் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் நெல்வயல்களும், தாழ்வான பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இன்று காலை கொட்டித் தீர்த்த கனமழையினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் பாடசாலைகளுக்கு மாணவர் வரவு மிக குறைவாகவே இருந்தது. சில பாடசாலைகளுக்குச் சென்ற மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

அதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்தில் பெய்துவரும் மழை காரணமாக 219 குடும்பங்களைச் சேர்ந்த 745 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 22 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமைகாலை 10 மணி வரையான நிலவரப்படி யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜ் குறித்த விடயத்தை தெரிவித்தார்.

பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவில் 146 குடும்பங்களைச் சேர்ந்த 485 பேரும், சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் 60 குடும்பங்களைச் சேர்ந்த 205 பேரும், கோப்பாய் பிரதேச செயலக பிரிவில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேரும்,சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 8 பேரும் உடுவில் பிரதேச செயலகப் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் 14 குடும்பங்களைச் சேர்ந்த 46 பேர் அன்னை முன்பள்ளி நிலையத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

படங்கள் - முகிலன்

ad

ad