புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 டிச., 2023

கொழும்பில் தமிழரசுக்கட்சியின் அரசியல்குழுக் கூட்டம்! [Sunday 2023-12-31 16:00]

www.pungudutivuswiss.com

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் விசேட அரசியல் குழுக் கூட்டம் எதிர்வரும் பத்தாம் திகதி அக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் நடைபெறவுள்ளது.
இதனையடுத்து மத்திய செயற்குழுக் கூட்டமொன்றும் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் விசேட அரசியல் குழுக் கூட்டம் எதிர்வரும் பத்தாம் திகதி அக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் நடைபெறவுள்ளது. இதனையடுத்து மத்திய செயற்குழுக் கூட்டமொன்றும் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இரா.சம்பந்தன், பிரதிநிதித்துவம் செய்யும் திருகோணமலை மாவட்டத்தின் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் கிளைகளுக்கான அங்கத்தவர்கள் தெரிவுகள் இடம்பெற்றபோது அவரது ஆதரவாளர்களும், கட்சியுடன் நீண்டகாலமாக செயற்பட்டவர்களும் புறக்கணிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதை அடுத்து அத்தெரிவுகளில் பூரண திருப்தியற்ற நிலைமைகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டி கட்சியின் தலைவருக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தார்.

இதனையடுத்து மன்னாரில் மார்ச் மாதத்தில் நடைபெற்ற மத்திய குழுக் கூட்டத்தின்போது குறித்த கடிதத்தின் உள்ளடக்கங்கள் வெளிப்படுத்தப்பட்டு விசாரணைக் குழுவொன்று அமைக்கப்பட்டது. அந்த விசாரணைக்குழுவின் தலைமைப்பதவி சீனித்தம்பி யோகேஸ்வரனுக்கு வழங்கப்பட்டது.

எனினும் அதன்பின்னரான காலத்தில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கான முனைப்புக்கள் எவையும் தற்காலிக பொதுச்செயலாளரான வைத்தியர் சத்தியலிங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை.

இந்நிலையில், கொழும்பில் தன்னை நேரில் சந்தித்த கட்சியின் தலைவர் மாவை.சேனதிராஜாவிடத்தில் மீண்டும் குறித்த விடயம் சம்பந்தமாக சம்பந்தன் கரிசனைகளை வெளியிட்டிருந்தார்.

அதன்பின்னர், வவுனியாவில் நடைபெற்ற மத்திய குழுக் கூட்டத்தில் சம்பந்தன் வெளியிட்ட கரிசனைகள் தொடர்பில் பேசப்பட்டாலும் அக்கூட்டத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுமென கூறப்பட்டதோடு கட்சியின் மாநாட்டுக்கான திகதி தீர்மானிக்கப்பட்டு உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 18ஆம் திகதி திருகோணமலையில் அரசியல்குழு கூடுவதற்கு முன்னதாக 17ஆம் திகதி குறித்த விடயம் சம்பந்தமாக விசாரணைக்குழுவின் தலைவரான சீனித்தம்பி யேகேஸ்வரன் பங்கேற்காத நிலையில் பொதுப்படையான விசாரணையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, சீனித்தம்பி யோகேஸ்வரன், தலைமைப்பதவிக்கு போட்டியிடுவதன் காரணத்தினால் அவர் விசாரணைக்குழுவில் பிரசன்னமாக முடியாது என்ற அறிவித்தல் விடுக்கப்பட்டு திருகோணமலைக்கு பயணித்துக்கொண்டிருந்த நிலையில் அவர் இடைவழியில் மட்டக்களப்புக்கு மீண்டும் திரும்பியுள்ளதாக தகவல்கள் உள்ளன.

மேலும், சம்பந்தனின் கடிதத்தின் பிரகாரம், திருகோணமலை மாவட்டத்தின் கிளைத்தெரிவுகளின் போது சுயாதீனத்தன்மை, மற்றும் வெளிப்படைத்தன்மையற்ற நிலைமை காணப்படுவதற்கு இடமளிக்க முடியாது. கட்சியின் நீண்டகால அங்கத்தவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்கள் புறக்கணிக்கப்பட முடியாது. ஆகவே அவர்களையும் உள்ளீர்த்த வகையில் தெரிவுகள் அமைய வேண்டும் என்பதே பிரதான விடயமாக உள்ளது.

அந்த அடிப்படையில், திருகோணமலை மாவட்டத்தின் கிளைத்தெரிவு தொடர்பில் சுயாதீன தெரிவுக்குழு அமைக்கப்பட்டு மீள் தெரிவுகள் இடம்பெற வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

இவ்வாறான பின்னணியில் தான் கொழும்பில் இலங்கை தமிழரசுக்கட்சியின் அரசியல்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad