புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 டிச., 2013

தொடரும் உள்ளூராட்சி சபைகளின் வரவு செலவுத் திட்டங்களின் தோல்வி: அதிர்ச்சியில் மஹிந்த அரசாங்கம்
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கட்டுப்பாட்டில் இருக்கும் உள்ளூராட்சி சபைகளில், தாக்கல் செய்யப்பட்ட வரவு செலவுத் திட்டங்கள் தொடர்ந்து தோல்வியடைந்துள்ளமை அரசாங்கத்திற்குள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதாக அரச வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இராணுவத் தடையை மீறி வலி.வடக்கிற்குச் செல்வேன்! அ​ந்த மண்ணில் உயிர் பிரிவது பாக்கியம்: ​விக்னேஸ்வ​ரன் சவால்
அதிகாரத்தைப் பகிர்வதாக சர்வதேசத்திற்கு 13வது திருத்தச் சட்டத்தை காண்பித்துவிட்டு அதனை நடைமுறைப்படுத்தாது விடுவதே, அரசாங்கத்தின் நோக்கமாக இருக்கின்றது. வடக்கு மாகாணசபைக்கு மத்திய அரசாங்கம் போடும் முட்டுக் கட்டைகள் இதனையே காட்டுகின்றன
அமெரிக்க அதிகாரிகள் -கூட்டமைப்பு சந்திப்பு 
அமெரிக்க அரசின் வெளிவிவகரப் பிரிவைச் சேர்ந்த டேமியன் நேர்பி தலைமையிலான மூன்று சிரேஷ்டநிலை அதிகாரிகளுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்
சுவிஸ் ராகம் கரோக்கே  வழங்கும் இந்த ஆண்டின் இன்னிசை மாலை 

ஆண்டு தோறும் இறுதி காலப் பகுதியில் அனைத்து கலைஞர்களையும் ஒருங்கிணைத்து நடாத்தும் சுவிஸ் ராகம் கரோக்கே இசைக்குழுவின் இன்னிசைமழை எதிர்வரும் 7 ஆம் திகதி மாலை 4 மணிக்கு

நெல்சனே மீண்டும் பிறந்துவா தமிழனுக்காய்!-அ .பகீரதன் 

கருப்புச் சிங்கமொன்று-இன்று
காரிருளில் ஒளியுதடா
காலமெனும் படகேறி
கைகாட்டி மறையுதடா

நெல்சனெனும் பெயர்கேட்டால்
கல்மனசும் கரையுமப்பா
வெள்ளையனின் பள்ளியிலே-அது
அவன்பெற்ற பெயரப்பா

வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரன் - ஜமமு தலைவர் மனோ கணேசன் சந்தித்து கலந்துரையாடல் 

வட மாகாணசபை முதல்வர் விக்கினேஸ்வரனும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனும் கொழும்பில் நேற்று மாலை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
சம்போ சங்கரா!
வேலைக்கு போகும் பெண்கள் எல்லாரும் விபச்சாரிகள் என்று சொன்ன சங்கராச்சாரி யோக்கியதை தெரியுமா? காஞ்சி காம கோடி ஜெயந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் என பிராமணர்களால் அழைக்கப்படும் ஜெயந்திரனின் வண்டவாளங்கள், தில்லுமுல்லுகள் சங்கர ராமன் கொலை விழக்கை விசாரிக்கும் போது தெரியவந்தது. சங்கர ராமன் கொலை வழக்கு விசாரணையின் போது சங்கராச்சாரியின் காம லீலைகள் வெளியாயின. சங்கராச்சாரியின் பாலியல்
இன்று உதைபந்தாட்ட உலககிண்ண போட்டிக்கான குழுக்கள்  தெரிவாகவுள்ளன 
இன்றைய இந்த விழாவில் விருந்தினர்களாக பின்வரும்  முன்னாள் நட்சத்திர வீரர்கள் பங்குபற்றுகிறார்கள் .இவர்கள் முன்னாள் உலக கிண்ணத்தை வென்றா நாடுகளின் வீரர்கள் என்ற கௌரவிப்பில் இடம் பெறுகிறார்கள்  Uruguay legend Alcides Ghiggia, Englishman Geoff Hurst, form
நெல்சன் மண்டேலா காலமானார்
தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா (95)  ஜோஹனஸ்பெர்க்கில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் அமைதியாக இறந்தார் என்று தற்போதைய ஜனாதி பதிஜேக்கப் ஸூமா அறிவித்துள்ளார்.
கமலேந்திரன் ஈ.பி.டி.பி. கட்சியில் இருந்து இடைநிறுத்தம்
நெடுந்தீவு பிரதேசசபையின் தலைவர் டானியல் றெக்சியன் (ரஐீவ்) படுகொலை சம்பவத்தில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ள கந்தசாமி கமலேந்திரன் ஈ.பி.டி.பி. கட்சியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவில் 60 ஆண்டுகளுக்கு பின் கடும் புயல்: லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்வு! தொடர்ந்தும் அபாய எச்சரிக்கை
பிரித்தானியாவில் 60 ஆண்டுகளுக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள சூறாவளியினால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒரு லட்சத்து 20 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

5 டிச., 2013

    ஏற்காடு இடைத்தேர்தல்: 89.24 % வாக்குப்பதிவு

ஏற்காடு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு புதன்கிழமை அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இதில் 89.24 சதவீத வாக்குகள் பதிவாகின. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் காலை 8 மணிக்குத் தொடங்கி,

சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்த 5 மாநிலங்களில், 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று வாக்குக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில்
தமிழ் இன அழிப்பை ஆதாரப்படுத்திய சனல் 4 ஆவணப்படம் சுவிஸில்! கெலும் மக்ரேயை சந்திக்கலாம்
அரசின் போர்க்குற்றம் முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பை ஐநாவிலும், உலக அரங்கிலும் ஆதாரப்படுத்திய channel 4 ஆவணப்படம் சுவிஸில் திரையிடப்படுகின்றது.
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பற்றிய அறிய புதிய இணையத்தளம்!
இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்றம் பற்றிய சகல விபரங்களும் அடங்கிய இணையத்தளம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மாணவர் வீசாவில் மாலைதீவு யுவதிகளை இலங்கைக்கு அழைத்து வந்து விபச்சாரத் தொழில்!
மாணவர் வீசாவில் மாலைதீவு யுவதிகளை இலங்கைக்கு அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.கொழும்பு மற்றும் சனநெரிசல் மிக்க நகரங்களில் மாலைதீவு யுவதிகள் இவ்வாறு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

பிரபல நடிகர்,ஆர்ட் டைரக்டர் சக்திராஜ் மறைந்தார்
தமிழ் திரையுலகின் பிரபல ஆர்ட் டைரக்டரும், நடிகருமான சக்திராஜ் நேற்று உடல்நலக்குறைவால் சென்னையில் காலாமனார். அவருக்கு வயது 58.
மாகாணசபையில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் முடிவுகளை மீறி செயற்பட்டமைக்கு கூட்டமைப்பு ஆட்சேபம்
கிழக்கு மாகாண சபையில் கடந்த இரண்டு நாட்களாக வரவு செலவுத்திட்ட விவாதம் நடந்து வரும் நிலையில் கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மீறி இன்றைய தினம் சபையை நடத்தியமைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்பேசம் தெரிவித்துள்ளது.
நெடுந்தீவு பிரதேசசபை தலைவர் கொலை! சந்தேகநபர்கள் மூவரையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு
நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் தானியல் றெக்சியனை (ரஜீவ்) கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட அவர்கள் நெடுந்தீவு நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்களை எதிர்வரும் 17ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் எஸ். மகேந்திரராசா உத்தரவிட்டுள்ளார்.

ad

ad