புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 டிச., 2013

கமலேந்திரன் ஈ.பி.டி.பி. கட்சியில் இருந்து இடைநிறுத்தம்
நெடுந்தீவு பிரதேசசபையின் தலைவர் டானியல் றெக்சியன் (ரஐீவ்) படுகொலை சம்பவத்தில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ள கந்தசாமி கமலேந்திரன் ஈ.பி.டி.பி. கட்சியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக ஈ.பி.டி.பி. வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,
நெடுந்தீவு பிரதேசசபையின் தலைவர் டானியல் றெக்சியன் (ரஐீவ்) படுகொலை செய்யப்பட்டிருப்பதனை மருத்துவமனை ஆதாரங்களை வைத்து நீதிமன்ற விசாரணைகள் நடந்துவருகின்றன.
ஈவிரக்கமற்ற இப்படுகொலை குறித்து சந்தேகத்தின் பேரில் எமது கட்சியின் உறுப்பினர் கந்தசாமி கமலேந்திரன் அவர்கள் கைதாகி நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றார்.
நீதிமன்ற விசாரணையில் இருக்கும் இவ்விடயம் குறித்து நாம் தற்போது எவ்வித கருத்துக்களும் கூற முடியாது.
ஆனாலும், இது குறித்து எமது மக்களுக்கு நாம் கட்சியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டியது அவசியமாகும்.
வன்முறைகள், அச்சுறுத்தல்கள், மற்றும் படுகொலைகள் போன்ற ஜனநாயக விரோத செயற்பாடுகளால் எமது மக்கள் கடந்த காலங்களில் பேரவலங்களையே
சந்தித்து வந்திருக்கின்றார்கள்.
இது போன்ற படுகொலை சம்பவங்களை எமது கட்சியின் தலைமை ஒருபோதும் அனுமதித்திருந்ததும் இல்லை. நியாயப்படுத்தியிருந்ததும் இல்லை. கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான முரண்பாடுகள் எந்தகட்சிக்குள்ளும் இல்லாமல் இல்லை.
ஆனாலும் அப்படியான முரண்பாடுகள் கட்சியின் கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டே தீர்க்கப்படல் வேண்டும்.
டானியல் றெக்சியன் அவர்களினது படுகொலையானது தனிப்பட்ட முரண்பாடுகளின் காரணமாகவே நடந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவருகின்றது.
டானியல் றெக்சியன் படுகொலை குறித்த கொலையாளிகள் யார் என்பது தொடர்பாக நீதிமன்ற விசாரணைகள் ஒழிந்து தீர்ப்புவழங்கப்படும் வரை எமது கட்சியின் உறுப்பினர் கந்தசாமி கமலேந்திரன் அவர்களை கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து இடைநிறுத்தி வைக்க கட்சியின் தலைமைப்பீடம் தீர்மானித்திருக்கிறது.
எமது கட்சியின் கட்டுப்பாட்டு விதிகளில் இருந்து மீறுவோர் எவராயினும் கட்சியில் இருந்து நிரந்தரமாகவே விலக்கப்படுவார்கள் என்பதையும், சமூக விரோத செயல்களை யார் செய்தாலும் அவர்கள் பாகுபாடின்றி சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டும் என்பதையும், நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ad

ad