புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜூலை, 2014


நளினி - முருகன் மீண்டும் சந்திக்க அனுமதி
ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நளினியும் அவரது கணவரான முருகனும் மீண்டும் சந்திக்க சிறைத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்

ஐ.நா விசாரணைக் குழுவுக்கு மோடியின் அரசு விசா வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்
இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல் குறித்து விசாரிக்க வருகை தர இருக்கும் ஐ.நா. விசாரணை குழுவுக்

157 அகதிகளும் கொக்கோஸ் தீவில் இறக்கி விடப்பட்டுள்ளனர்
157 புகலிடக் கோரிக்கையாளர்களை தடுத்து வைத்திருந்த அவுஸ்திரேலிய சுங்கத் திணைக்களத்தின் கப்பல் தற்போது கொக்கோஸ் தீவை சென்றடைந்துள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியில் மாற்றம்?

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக ஞாயிறு பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மாறுதடம் இயக்குனர் ரமணன்  கைதானாரா ?
யாழ்ப்பாணத்தில் இன்று " மாறுதடம்" என்ற புலம் பெயர் தமிழர் ஒருவர் இயக்கிய திரைப்படம் திரையிடப்பட்டிருந்த வேளையில் திடீரென்று அங்கு வந்த இனஅழிப்பு அரசின்

26 ஜூலை, 2014

http://kananithamil.blogspot.ch/2014/04/friday-july-26-2013.html
நேரடியாகவே உங்கள் கணனியில் தமிழ் எழுத்தினை வைத்திருக்கலாம்
அந்த எழுத்தின் மூலமே தமிழில் முகநூல் எம் எசென் யாஹூ எங்கும் எழுதலாம்
இலகுவான முறை .சுமார் 3 நிமிடங்களில் வந்துவிடும் உங்கள் கணனிக்கு .
மேலே உள்ள லிங்கில் அழுத்துங்கள் .ஒரு பக்கம் திறக்கும் அங்கே  இடப்பக்கமாக உங்கள் மொழியை தெரிவு செய்யுங்கள் (choose Your Languege )என்று ஆங்கிலத்தில் இருக்கும்  கீழே  மொழிகளின் வரிசையில் தமிழுக்கு பக்கத்தில் அழுத்தி பெட்டிக்குள் புள்ளடி போடுங்கள் .அதற்கு சற்று கீழே  ஏற்றுக் கொள்கிறேன் (I agree -------)என்று பொருள்பட ஒரு வசனம் இருக்கும் அதற்கும் அழுத்தி புள்ளடி போடுங்கள் .இப்போது இன்னும் கீழே போனால் தரவிறக்கம் (Download )என்று இருக்கும் அங்கே அழுத்துங்கள். உங்கள் கணணிக்குள் வருகின்ற  ப்ரொகிராமை இனி திறவுங்கள்.கணணி இந்த ப்ரொகிராமை எடுக்க விருப்பமா என்று கேட்கும் ஆம் என்று சொல்லுங்கள் இப்போது உங்கள் கணனியில் 2 நிமிடங்கள் காத்திருக்க ப்ரோகிராம் வந்து சேரும். கணனியின் கீழே வலது மூலையில் மொழி மாற்றுகின்ற ஒரு சின்னம்(DEUஅல்லது  ENGஅல்லது  FR இங்கே த ) இருக்கும் .அதாவது   அங்கே அழுத்தி பிடிக்க த  என்ற எழுத்து இருக்கும் அங்கே  அழுத்தினால் உங்கள் கணணி தமிழ் எழுத்தை தரும் .இனி  தட்டச்சு செய்தால் தமிழில் வரும்
மேலதிக தகவலுக்கு www .kananithamil .blogspot .com சென்றும் பார்க்கலாம் 

யாழ்நகரில் மாறுதடம்  ஒத்திவைப்பு 
அனைத்து நண்பர்களுக்கும் ஓசைபிலிம்ஸின் அன்பு வணக்கம்.
நேற்று (25.07.2014) யாழ்.ராஜா திரையரங்கில் வெளியிட்டு சில நிமிடங்களில் இடைநிறுத்தப்பட்ட எமது 'மாறு தடம்' திரைப்படத்திற்கு ஏற்பட்ட இடையூறுக்கும் சங்கடங்களுக்கும் பார்வையாளர்களுக்கு வருத்தத்தை தெரிவிக்த்துக் கொள்கிறோம். திரைப்படத்தை பிரத்தியேகமாகப் பார்வையிட்ட காவல்துறையினர் திரைப்படத்தை வெளியிட எந்தவித தடையுமில்லை என்றும் அதேவேளை அனுமதியைப் பெறுவதற்கு தற்போது விடுமுறை தினமாக இருப்பதனால் இன்னும் ஓரிரு தினங்களில் அதற்கான அனுமதியை பெற்று மீண்டும் அதே திரையரங்கங்களில் வெளியிடலாம் எனும் மகிழ்ச்சியான செய்தியை எமக்குத் தெரிவித்தனர். எனவே 'மாறு தடம்' திரைப்படம் விரைவில் வெளியிடப்படும் என்பதனை அனைவருக்கும் அறியத்தருகின்றோம். 
அத்தோடு எமக்கு சகலவழிகளிலும் தங்களின் பங்களிப்பைச் செய்த திரைத்துறை நண்பர்களுக்கும், நேற்று திரையரங்கத்திற்கு வருகைதந்து ஒத்துழைத்த அத்தனை உறவுகளுக்கும் எமது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்புடன் ஓசைபிலிம்ஸ்.
அனைத்து நண்பர்களுக்கும் ஓசைபிலிம்ஸின் அன்பு வணக்கம்.
நேற்று (25.07.2014) யாழ்.ராஜா திரையரங்கில் வெளியிட்டு சில நிமிடங்களில் இடைநிறுத்தப்பட்ட எமது 'மாறு தடம்'

நடிகை நக்மா கைது!

உத்தரபிரதேச மாநிலம், மொரதாபாத்தில் காந்த் பகுதியில் உள்ள இந்துக் கோவில் ஒன்றில் ஒலிப்பெருக்கி அமைப்பதில் கடந்த 4-ந் தேதி பிரச்சினை ஏற்பட்டது. அது கலவரமாக மாறியது. இதில் மாவட்ட கலெக்டர் தீபக் அகர்வால் கண்களில் படுகாயம் ஏற்பட்டது. இந்த கலவர வழக்கில் பாரதீய ஜனதா கட்சியினர் 62 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது போலீஸ் சூப்பிரண்டு தரம்வீர் சிங் வன்கொடுமையை கட்டவிழ்த்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.


வெடிகுண்டு மிரட்டல்! மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீவிர சோதனை!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக வந்த தகவலை


காமன்வெல்த்: 5 ஆவது இடத்தில் இந்தியா



காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் 4 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம் என 13 பதக்கங்கள் வென்று இந்தியா 5வது இடத்தில் உள்ளது. முன்னதாக இந்தியா 4 ஆவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. 
பளையை நோக்கி வந்த ரயிலிலிருந்து விழுந்து இளைஞன் சாவு 
கொழும்பிலிருந்து பளையை நோக்கி வந்துகொண்டிருந்த ரயிலில் இருந்து தவறிவீழ்ந்து இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
கள்ளத்தொடர்பை தட்டிக்கேட்டார் மனைவி : குத்திக்கொன்றார் கணவன் 
இலங்கைப் பெண் ஒருவரை குவைத்தில் நாட்டில் அவரது கணவர் பலமுறை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். 
 
கோராத விசாவுக்கு தடையா : இந்தியாவை கிண்டலடிக்கும் ஐ.நா 
இந்தியாவிடம் விசா கோரவில்லை என இலங்கை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஐக்கிய நாடுகள் சபையின் குழு தெரிவித்துள்ளது. 
உயிரைத் தவிர அனைத்தையும் மீளத் தருவேன் என்றவரே ஏன் எங்களை இன்னும் மீளக்குடியமர்த்த முன்வரவில்லை? - சம்பூர் மக்கள் 
போரில் தமிழ் மக்கள் இழந்த உயிர்களைத் தவிர அனைத்தையும் மீண்டும் பெற்றுத் தருவேன் என்று தான் வழங்கிய வாக்குறுதிக்கு

30 ஆண்டுகளின் பின்னர்  யாழ்ப்பாணம் செல்லும் யாழ்தேவி 
யாழ்ப்பாணம் வரையான ரயில் பாதை நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர்,
நாங்கள் மீண்டும் சேருவதற்காகவே சாகிறோம்: காதலனின் உருக்கமான கடிதம்
புதுக்கோட்டை அருகே நேற்று ரயில் முன்பாய்ந்து காதலி தற்கொலை செய்து கொண்டதால் 6மணி நேரம் கழித்து காதலனும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஐக்கிய சோசலிசக் கட்சியினரின் சமாதான யாத்திரையை தடுத்து நிறுத்திய பொலிஸார்
ஐக்கிய சோசலிசக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தலைமையில் நடத்தப்பட்ட  சமாதான யாத்திரையை பொலிஸார்  தடுத்து நிறுத்தியுள்ளனர்.

முல்லைத்தீவு பொலிஸ் விடுதியில் குண்டு வெடிப்பு...
பொலிஸ் விடுதிக் கட்டடம் சேதமடைந்துள்ளது. பொலிஸ் வாகனம் ஒன்றும் சேதத்திற்குள்ளானது என்று அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

25 ஜூலை, 2014


சுவிஸில் எழுச்சியாக நினைவு கூரப்பட்ட கறுப்பு ஜூலை
இலங்கை அரசின் இனப்படுகொலையின் ஓர் அங்கமான கறுப்பு ஜூலையின் 31ம் ஆண்டு நினைவு நிகழ்வானது, பேர்ண் பாராளுமன்றம் அருகில் அமைந்துள்ள Helvetiaplatz எனும் இடத்தில் நினைவு கூரப்பட்டது.
நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் கனத்த நினைவுகளுடனும், மாறா வடுக்களுடனும் கலந்து கொண்டிருந்தனர்.

சுவிஸில் எழுச்சியாக நினைவு கூரப்பட்ட கறுப்பு ஜூலை

இலங்கை அரசின் இனப்படுகொலையின் ஓர் அங்கமான கறுப்பு ஜூலையின் 31ம் ஆண்டு நினைவு நிகழ்வானது, பேர்ண் பாராளுமன்றம் அருகில் அமைந்துள்ள

ad

ad