புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஜூலை, 2014

உயிரைத் தவிர அனைத்தையும் மீளத் தருவேன் என்றவரே ஏன் எங்களை இன்னும் மீளக்குடியமர்த்த முன்வரவில்லை? - சம்பூர் மக்கள் 
போரில் தமிழ் மக்கள் இழந்த உயிர்களைத் தவிர அனைத்தையும் மீண்டும் பெற்றுத் தருவேன் என்று தான் வழங்கிய வாக்குறுதிக்கு
அமைவாகத் தங்களைத் தமது சொந்த இடத்தில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச­ மீளக்குடிய மர்த்த வேண்டும் என்று வலி யுறுத்தியுள்ளனர் சம்பூர் மக்கள்.
 
சம்பூரிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் கடந்த 8 வருடங்களாக நலன்புரி நிலையங்களில் தங்கி வாழ்கின்றனர். தமது அவல நிலை தொடர்பாக அவர்கள் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபசக்­வுக்கு மனு ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். 
 
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
போர் முடிவடைந்து ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட பின்னரும் கூட அகதி முகாம்களில் வாழும் எமது துயரத்தை தங்களின் நேரடிக் கவனத்திற்கு கொண்டு வரவிரும்புகின்றோம். 
 
கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் திகதியுடன் நாம் இடம்பெயர்ந்து எட்டு வருடங்கள் முடிவடைந்து விட்டன. கடந்த இரண்டு வருடங்களாக எமக்கான உலர் உணவும் நிறுத்தப்பட்டுள்ளது. 
 
இதனால் எமது பிள்ளைகளும் நாமும் பசி, பட்டினி, வறுமையுடன் தகரக் கொட்டில்களுக்குள் வாடுகின்றோம். வெப்பத்தால் நோய் வாய்ப்பட்டு மிகுந்த துயரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். இதுவரை எங்கள் துயரங்கள் தங்களின் கவனத்திற்கு எட்டவில்லையோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
 
சம்பூர் பிரதேசத்தில் அனல் மின் நிலையம் உட்பட பல்வேறு திட்டங்களுக்கென ஆயிரத்து 458 ஏக்கர் நிலம் சுவீகரிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு சுவீகரிக் கப்பட்டுள்ள பகுதிக்குள் 219 குடும்பங்கள் வாழ்ந்தன. அந்தக் குடும்பங்களுக்கு அங்கு சொந்தமான குடியிருப்பு நிலங்கள் உள்ளன. 
 
சுவீகரிக்கப்படாத எஞ்சிய பகுதியில் ஏனையோரைக் குடியேற்றுவதற்கான வாய்ப்பிருந்தும் இதுவரை அதற்கான முயற்சி எதுவும் எடுக்கப்படவில்லை.
 
அவ்வாறு சுவீகரிக்கப்படாத பகுதியில் சுமார் 700 குடும்பங்கள் வாழ்ந்தன. அங்கு இப் போது சம்பூர் மகாவித்தியாலயத்தை மையமாகக் கொண்டு இயங்கும் ஒரு கடற்படை முகாம் மட்டுமே உள்ளது. அந்த முகாமுக்கு என்று கடற்கரை யோரமாக குறிப்பிட்டளவு நிலத்தை ஒதுக்கீடு செய்து ஏனைய பகுதிக்குள் மக்களை குடியேற்ற முடியும். 
 
அவ்வாறு சம்பூரின் முதலாம், இரண் டாம், மூன்றாம், நான்காம், ஆறாம் வட்டாரங்களை முழு மையாகவும் ஐந்தாம், ஏழாம் வட்டாரங்களின் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் எம்மைக் குடியேற்ற முடியும்.
 
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்  2011ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 21ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இது தொடர் பாக உரையாற்றும்போது, அனல் மின் நிலையத்துக்கு தேவைப்படாத காணிகள் மீள வழங்கப்பட்டு மக்கள் குடியேற் றப்படுவர் என்று உறுதி கூறினார்.
 
அவ்வாறு அந்தப் பகுதிக்குள் வாழ்ந்த குடும்பங்களை முதலில் குடியேற்றினால் சுவீகரிக் கப்பட்ட பகுதிக்குள் வாழ்ந்த 219 குடும்பங்களும் மாற்றிடங்களை தேடிக்கொள்ள முடியும். ஆனால் இது குறித்து ஆராய்ந்து எமது மீள் குடியேற்றத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சி எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை. 
 
தமிழ் மக்கள் போரில் இழந்த உயிர்களைத் தவிர ஏனைய அனைத்தையும் பெற்றுத் தருவேன், என்று தாங்கள் முன்னர் தெரிவித்த கருத்து எங்களுக்கு நம்பிக்கையை தருகின்றது. 
 
அந்த அடிப்படையில் தாங்கள்  உடனடியாக இந்த விடயத்தில் தலையிட்டு தகுதி வாய்ந்த ஒரு அதிகாரியை நியமித்து நீண்ட நாள்களாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் எமது பிரச்சினையைத் தீர்த்து, போரின் பின்னரான அமைதியும் இயல்பு வாழ்வும் எமக்கு கிடைப்பதற்கும், எட்டு வருடங்கள் பின் தள்ளப்பட்டு விட்ட எமது சமூக, பொருளாதார, கல்வி வளர்ச்சியை மீண்டும் முன் னெடுப்பதற்கும் நாமும் இந்த நாட்டில் சமாதானத்தையும் சகவாழ்வையும் அனுபவிக்கும் குடிமக்கள் என்ற உணர்வுடன் வாழ்வதற்கும் உதவ வேண்டும் என்று குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=882003259626708836#sthash.RFYckG8m.dpuf

ad

ad