புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜூலை, 2014


நளினி - முருகன் மீண்டும் சந்திக்க அனுமதி
ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நளினியும் அவரது கணவரான முருகனும் மீண்டும் சந்திக்க சிறைத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, தூக்கு தண்டனையில் இருந்து ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ள முருகன் வேலூர் மத்திய சிறையிலும், இவருடைய மனைவி நளினி வேலூர் பெண்கள் சிறை யிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து 30 நிமிடங்கள் பேசுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன் சிறையில் நடத்தப்பட்ட சோதனையில் முருகன் அறையில் இருந்து ரூ.7,500 மற்றும் செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
இதனையடுத்து நளினி - முருகன் சந்திக்க கடந்த 3 வாரங்களாக சிறை நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை.
இதனால் மன வேதனையடைந்த நளினி உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டார்.
இதுதொடர்பாக முருகன், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனக்கான தண்டனையை ரத்துச் செய்யக் கோரி சிறைத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளார்.
இதையடுத்து வரும் ஆகஸ்ட் 2ம் தேதி வழக்கம் போல் நளினியும், முருகனும் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ad

ad