புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 நவ., 2012

பார்வைகள் குறும்பட வெளியிட்டு விழாவில் சிறந்த ஒளிபதிவிற்காக தீவகம் வேலணையைச் சேர்ந்த பிரியந்தன் (starmedia இன் இயக்குனர்) என்பவருக்கு வவுனியா வலயக்கல்வி பணிமனை விருது 
வடமாகாணத்தில் நடைபெற்ற மனநலதினத்தை முன்னிட்டு குறும்படபோட்டியில் வெற்றிபெற்ற  பார்வைகள் குறும்பட வெளியிட்டு விழாவில் சிறந்த ஒளிபதிவிற்காக

நயினாதீவு பெருங்குளம் மதுரை மீனாட்சி அம்மன் , ஆலய திருப்பணி வேலைகள் ,யாவும் ஆரம்பமாகி நடைபெற்று கொண்டிருக்கின்றன
இத் திருப்பணி வேலைகளுக்காக ,புலம் பெயர்ந்து வாழும் எமது ஊர் உறவுகள் தங்கள் பங்களிப்பை வழங்கி வருவதாக அறிய முடிகின்றது .இப் பெரும் திருப்பணிக்கு தங்களால் வழங்குகின்ற பேருதவியை .முன்னிட்டு .அனைத்து உறவுகளுக்கும் .எமது அன்புகலந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம் .. நன்றியுடன் . ஆலய அறங்காவலர்களும்


அனலைதீவு இந்து மயானம் புனரமைக்கப்பட்டுள்ளது.  22-7-2012 அன்று ஆரம்பிக்கப்பட்ட வேலைகள் தற்போது நிறைவடைந்துள்ளது. இப்பணிகளை அனலைதீவு கலாச்சார ஒன்றியம் கனடா திறம்பட நடாத்தி முடித்திருக்கிறது. அத்துடன் ஊரின் வளர்ச்சிக்கு இவ் ஒன்றியம் மகத்தான சேவையை வழங்கிவருது குறிப்பிடத்தக்கது. (படங்கள் )

மண்டைதீவுப் பிரதேசத்திற்கு விரைவில் மின்சாரம் விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் மிகவும் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன.
வடக்கின் வசந்தம் அபிவிருத்தி திட்டத்தின் கீழ்  இப்பகுதிக்கு மின்சாரம்
விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் ஒரு கட்டமாக மின்கம்பங்கள் நடப்பெற்று மின்கம்பிகள்
பொருத்தும் பணிகள் நடைபெற்றுவருகின்றது.
 2013 ஆண்டு பங்குனி மாதம் மட்டில் குறிகட்டுவான் நயினாதீவுக்கான பாதை சேவை ஆரம்பிக்கப்படலாம் என எதிர்பாக்க படுகின்றது . நிர்மானபணிகள் .இரு இடங்களிலும் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று கொண்டிருக்கின்றது .
தண்ணீர்ப் போத்தலால் சிறீதரனைத் தாக்க முயற்சித்தார் சந்திரகுமார்; ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் சம்பவம்
ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனுக்கும் ஈ.பி.டி.பியின் நாடாளுமன்ற உறுப்பினரான சந்திரகுமாருக்கும் இடையில் காரசாரமான விவாதத்தினையடுத்து தண்ணீர்ப் போத்தலால் சிறீதரனைத் தாக்க முயற்சித்தார் சந்திரகுமார்.பதிலுக்கு சிறீதரன் உங்களிடம் மட்டுமா தண்ணீர் போத்தல் இருக்கிறது நீர் தாக்கினால் நாங்களும் தாக்குவோம் என அவர் பதிலளித்தார். 

ஐ.நா.வில் இலங்கையின் நியாயங்களை வெளிப்படுத்தும் தூதுக்குழு : (நேரலை ஒளிபரப்ப
ஜெனீவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரைவையின் அனைத்துல ஆவர்த்தன பரிசீலனையில் இலங்கை தற்போது தன்பக்க கருத்துக்களை முன்வைத்து கொண்டிருக்கின்றது. 

முன்னாள் பெண் போராளியின் பேட்டி கவலை தருகின்றது!- பா.உறுப்பினர் சி.சிறீதரன்
கொடுக்கும் பதிலடி .நன்றி 
ஆனந்த விகடனில் வெளியாகிய “நேற்று நான் விடுதலைப் போராளி இன்று நான் ஒரு பாலியல் தொழிலாளி’’ என்ற தலைப்பில் தமிழ்வின் இணையத்தளத்தில் வந்திருக்கும் முன்னாள் போராளியின் பேட்டியை வாசித்து நாம் கவலை அடைந்துள்ளோம்.
விடுதலைப்புலிகளில் அனுபவம் மிக்க படையில் இருந்த ஒரு முதல்நிலையில் இருக்கக்கூடிய போராளி தன் துன்பங்களையோ கஸ்டங்களையோ இங்கு இருக்கக்கூடிய பா.உறுப்பினர்களிடமோ
விகடனில் வந்த இந்த கட்டுரையை முழுதாக பிரசுரிக்க எமக்கு விருப்பம் இல்லை.இணையத்தை பார்வையிடுவோர் தொகை கூடும் என்பதற்காக இந்த விபசாரத்தை நாங்கள் செய்ய விரும்பவில்லை    நன்றி
 விகடன் 
நேற்று நான் விடுதலைப் போராளி! இன்று பாலியல் தொழிலாளி! - ஒரு பெண் புலியின் வாக்குமூலம்! இது உண்மைக் கதை

வித்யா ராணி... 2009 மே வரை தமிழ் ஈழம் போற்றிய ஒரு பெண் போராளி. ஆனையிறவு முகாம் மீதான தாக்குதல் தொடங்கி 'ஜெயசிக்குறு எதிர் சமர்’ என ஈழத்தின் பெரும் சமர்களிலும் பங்கெடுத்தவர்.

தமிழகத்தையே உலுக்கிய கோவை குழந்தைகள் கொலை வழக்கு! குற்றவாளிக்கு தூக்கு! கோவை கோர்ட் தீர்ப்பு!


கோவை, ரங்கேகவுடர் வீதி, சித்தி விநாயகர் கோவில் வீதி அருகிலுள்ள காத்தான் செட்டி சந்தில் வசிக்கும் ஜவுளி வியாபாரி ரஞ்சித் ஜெயின் - சங்கீதா தம்பதியின், குழந்தைகள் முஸ்கான்,10, ரித்திக்,7. இக்குழந்தைகள், "சுகுணா ரிப்ஸ்' பள்ளியில் படித்தனர். 

முன்னாள் விடுதலைப்புலிப் போராளிகள் 48 பேர் இன்று விடுவிப்பு
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பாதுகாப்பு தரப்பினரிடம் சரணடைந்த முன்னாள் போராளிகளில் 48பேர் முழுமையான புனர்வாழ்வுக்குப் பின் இன்று புதன்கிழமை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்று புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் தர்ஷன ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.
இவ்வாறு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டவர்களில் 7 பெண்கள்

சீனத் தயாரிப்பான ஆட்லறிகள் புலிகளுக்கு எவ்வாறு கிடைத்தன? இலங்கை இராணுவம் அதிர்ச்சி
முள்ளிவாய்க்கால் கடற்கரையில் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் 5 ஆட்லறிகள் சீனத் தயாரிப்புக்கள் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.. இந்த ஆட்டிலறிகள் விடுதலைப் புலிகளின் கைக்கு எவ்வாறு கிடைத்தன என்பது குறித்து  இலங்கை இராணுவத்தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளது.
நீலம் புயலினால் ஏற்பட்ட மண்அரிப்பை அடுத்து, விடுதலைப் புலிகளால் கரையோரத்தில் புதைத்து வைக்கப்பட்ட 5 ஆட்லறிகளை இலங்கை இராணுவத்தினர் நேற்று மீட்டுள்ளனர்.
ராஜீவ்காந்தியின் கொலைக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை: கே.பி.முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தியின் கொலைக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் தெரிவித்தார்.இந்திய மத்திய புலனாய்வு, அதிகாரிகள் கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனிடம் விசாரணை நடத்தியுள்ளதாக த இண்டியன் எக்ஸ் பிரஸ் இணையத்தளம் வெளியிட்டுள்ள செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 
 23 வயதுடைய தாய் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள் பிறந்துள்ளன.
கொழும்பு தனியார் வைத்தியசாலையொன்றில் 23 வயதுடைய தாய் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள் பிறந்துள்ளன.மூன்று பெண் குழந்தைகளும் இரண்டு ஆண் குழந்தைகளும் பிறந்துள்ளதோடு ஆரோக்கிய நிலையில் உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளைஇ கடந்த மாதம் கண்டி போதனா வைத்தியசாலையில் தாய் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் ஐந்து குழுந்தைகள் பிறந்த நிலையில் சில நாட்களின் பின் ஒரு குழந்தை இறந்தது. இந்நிலையில் நேற்றும் கண்டியில் ஒரு தாய்க்கு ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்தமை குறிப்பிடத்தக்கது.
 
இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசை, ஸ்ரீலங்கா சிங்கள பெளத்த குடியரசாக மாற்ற அரசு தீர்மானித்து செயல்படுகிறது: மனோ கணேசன்
இலங்கையின் அதிகாரப்பூர்வ பெயர் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசு என்பதாகும். பெயரில் இருக்கும், ஜனநாயகமும், சோசலிசமும் நாட்டுக்குள்ளே கிடையாது. ஆனால், நாட்டில் ஜனநாயகத்திற்கும், சோஷலிசத்திற்கும் பதிலாக சிங்களமும், பெளத்தமும் நடைமுறையில் தலைவிரித்தாடுவது எல்லோருக்கும் தெரியும். இந்த நடைமுறை மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் நீண்டகால திட்டத்தை முன்கூட்டியே அறிவிக்கிறது. அதுதான், ஸ்ரீலங்கா சிங்கள பெளத்த குடியரசு என்பதாகும். முழுநாட்டையும்
பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை சமர்ப்பிப்பு
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக குற்றவியல் பிரேரணை ஒன்று சபாநாயகர் சமல் ராஜபக்~விடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.குறித்த பிரேரணையை அமைச்சர்களான அருந்திக்க பெர்னாண்டோ, லசந்த அழகியவண்ண மற்றும் பவித்திரா வன்னியாராச்சி ஆகியோரினால் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.இதேவேளை இக் குற்றவியல் பிரேரணையை நிறைவேற்றிக் கொள்ளவும் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடம் கையளிக்கவும் தேவையான ஆதரவைப் பெற்றுக்கொள்ள 118 பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து அரசாங்கம் கையெழுத்துகளைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
செல்வம் எம்.பி.யின் உறவினர் காணவில்லையென முறைப்பாடுதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் உறவினர் ஒருவரை கடந்த 30 ஆம் திகதி முதல் காணவில்லை என காணாமல் போனவரது மனைவி கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் நேற்று முறையிட்டுள்ளார்.
தனது மனைவியின் சகோதரரான சின்னத்துரை இந்திரேஸ்வரன் (வயது-60) என்பவரே காணமல் போயுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
நீதிமன்றம் விஜயகாந்த்துக்கு முன்ஜாமீன் வழங்கியது.
சென்னை விமான நிலையத்தில் கடந்த 27.10.2012 அன்று செய்தியாளரை அவதூறாக பேசியதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு விஜயகாந்த் மனுதாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் விஜயகாந்த்துக்கு முன்ஜாமீன் வழங்கியது.

நக்கீரனுக்கு எதிராக மதுரை ஆதினம் தொடர்ந்த வழக்கிற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை!
துரை ஆதினத்தில் நடக்கும் பல்வேறு விஷயங்களை நக்கீரன் முதல் முதலில் அம்பலப்படுத்தியது. இதைத்தொடர்ந்து தன்னைப் பற்றி நக்கீரன் எந்த செய்தியும் வெளியிடக் கூடாது என்று ஒரு சிவில் வழக்கு சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் மதுரை ஆதினம் அருணகிரிநாதர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது.
மகளிர் ஆசிய கோப்பை இருபது ஓவர் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றியது.
 முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 81 ரன்கள் சேர்த்தது. பின்னர் பேட் செய்த பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 63 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வியைத் தழுவியது.
 சீனாவில் புதன்கிழமை நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

ad

ad