புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 அக்., 2013

அண்ணாநகரில் பட்ட பகலில் இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை

¨சென்னை அண்ணாநகரில் சாலையில் பைக்கில் சென்றுக் கொண்டிருந்த வாலிபர் ஒருவர் திடீரென பைக்கில் இருந்து

யாழ்.மாவட்டத்தில் மூன்று இடங்களில் கொள்ளை! பல லட்சம் ரூபா பணம், நகைகள் அபகரிப்பு!- அச்சத்தில் மக்கள்
யாழ்.மாவட்டத்தில் மூன்று பிரதேசங்களில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களில் பல லட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள், பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இராஜினாமா செய்யும் யோசனையை கைவிட்டார் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.
தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ அமைப்பின் தலைமைப் பதவியை இராஜினாமா செய்யும் யோசனையை பலருடைய வேண்டுகோள்களுக்கு அமைய கைவிடுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
அரசோடு ஒத்துழைத்தால் உதவி நிச்சயம்!- ஜனாதிபதி மகிந்த
அரசாங்கத்தோடு ஒத்துழைத்து செயற்பட தமிழ் தேசியக் கூட்டமைப்பு தயாரென்றால் வடக்கின் அபிவிருத்தி, மேம்பாடுகளை தொடர்ந்து முன்னெடுக்க நாம் தயாரென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கிழக்கில் முஸ்லிம் மக்களின் காணி பிரச்சினை தொடர்பில் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் மு.காங்கிரஸ்
கிழக்கு மாகாணத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்டுப்பாட்டில் உள்ள உள்ளூராட்சி சபைகளுக்குட்பட்ட பிரதேசங்களில் உள்ள முஸ்லிம் மக்களின் காணி தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட உள்ளது.
ஜனாதிபதி முன்னிலையில் விக்னேஸ்வரன் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்
வட மாகாணத்தின் முதலமைச்சராக முன்னாள் நீதியரசர் சீ.வி விக்னேஸ்வரன் சற்று நேரத்திற்கு முன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் தமிழ் மொழி மூலம் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
நவிபிள்ளையின் யோசனைக்கு அமைய மாகாண மற்றும் உள்ளூராட்சி சபைகளின் பிரதிநிதிகளுக்கு மனித உரிமை கல்வித்திட்டம்
மாகாண சபை, உள்ளூராட்சி சபைகளின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு மனித உரிமைகள் தொடர்பான கல்வித்திட்டம் ஒன்றை நடத்த இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
வடமாகாண முதலமைசரின் விசேட அறிக்கை !!!

என்னுடைய பதவியின் செயல்பண்புகளையும் கடப்பாடுகளையும் நான் நேர்மையுடனும் நம்பிக்கையுடனும் இயற்றுவேன் என்றுதான் இன்று காலை பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டேன். 
இணையத்தளங்கள் வெளியிடும் செய்தியில் உண்மையில்லை!

இணையத்தளங்கள் சில “அனந்தி, முதலமைச்சர் விக்னேஸ்வரன்அவர்கள் முன்னிலையில் பதவி பிரமாணம் செய்ய மாட்டேன் என கூறியதாகவும் அனந்தி 12ஆம் திகதி சமாதான நீதவான் அல்லது சத்தியபிரமாண ஆணையாளர் முன்னிலையில் பதவி பிரமாணம் செய்ய இருப்பதாகவும் மாகாணசபையில் கலந்து கொள்ளும் முதலாவது கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்க இருப்பதாகவும்” என விசமத்தனமான பொய்யான செய்திகளை வெளியிட்டுள்ளன. ஆகவே இந்த செய்தியில் உன்மை இல்லை என்பதனை எமது மக்களுக்குத் தெரிவித்துக்கொள்கின்றோம்..

தினக்குரல் பத்திரிகையின் ஊடகவியலாளர் அமரர் ரவிவர்மாவுக்கு புளொட் அமைப்பு தனது அஞ்சலி தெரிவித்துள்ளது.
அவ் அமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தினக்குரல் பத்திரிகையின் பிரபல ஊடகவியலாளர் ரவிவர்மன் என்கின்ற பரமகுட்டி மகேந்திரராஜா மரணமடைந்த செய்தி எம்மையெல்லாம் பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது.

விக்கினேஸ்வரனின் பதவிப் பிரமாண நிகழ்வில் குர்சித் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார்

முன்னாள் நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் நாளைய தினம் வடமாகாணத்தின் முதலாவது முதலமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்கவுள்ளார். இதன் போது விசேட விருந்தினராக இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித் கலந்துக் கொள்வார் என்று தமிழ் தேசியகூட்டமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மேல்மருவத்தூரில் நவராத்திரி விழா

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் வெள்ளிக்கிழமை நவராத்திரி விழா சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது.

நீலாங்கரையில் டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்த 3 வாலிபர்கள் கைது

நீலாங்கரையில் பூட்டிய வீட்டிற்குள் புகுந்து இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். படுக்கை அறையில் இருந்த தானியங்கி கதவை திறக்க முடியாததால் அவர்கள் சிக்கினர்.

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்: மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன்

10 அணிகள் இடையிலான 5–வது சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா கடந்த 21–ந்தேதி தொடங்கியது. லீக் மற்றும் அரைஇறுதி முடிவில் இந்தியாவைச் சேர்ந்த மும்பை இந்தியன்சும், ராஜஸ்தான் ராயல்சும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.இந்த நிலையில்




கொரியன் பார்முலா 1 கார்பந்தயம்: செபாஸ்டியன் வெட்டல் முதலிடம்

பார்முலா1 கார் பந்தயம் மொத்தம் 19 சுற்றுகளை கொண்டதாகும். இதன் 14–வது சுற்றான கொரியன் கிராண்ட்பிரீ பந்தயம் அங்குள்ள யோன்காமில் உள்ள ஓடுதளத்தில் இன்று நடந்தது. 309 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த
இந்தியா முழுவதும் 2½ கோடி பேருக்கு இலவச செல்போன்களை மத்திய அரசு வழங்க இருக்கிறது.
இந்தியாவில் 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் அறிவித்திருக்கும் இந்த நிலையில் மத்திய அரசு நாடு முழுவதும் 2½ கோடி பேருக்கு இலவச செல்போன்களை வழங்க முடிவு செய்திருக்கிறது.மின்னணு மயமாவதில் உள்ள இடைவெளியை பூர்த்தி செய்யும் வகையில் குறைந்த விலையில்,

224 பேர் பலியான குண்டு வெடிப்பில் தொடர்பு: அல்கொய்தா இயக்க தலைவர் பிடிபட்டார்

ஆப்பிரிக்க நாடுகளில் குண்டு வெடித்து 224 பேர் பலியான சம்பவத்தில் தொடர்புடைய அல்கொய்தா இயக்க முக்கிய தலைவர் பிடிபட்டார். அமெரிக்க ராணுவம் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்தது.

தெலுங்கானாவுக்கு எதிரான போராட்டம் தீவிரம்: விஜயநகரத்தில் ஊரடங்கு; கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு

தெலுங்கானாவுக்கு எதிரான போராட்டம் விஜயநகரம் பகுதியில் கலவரமாக வெடித்தது. இதனால் அந்த பகுதியில் நேற்று 2–வது நாளாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அந்த பகுதியில் கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்கிடையே மின்சார ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.
இலங்கையில் இனப்பிரச்சினை இன்னும் தீரவில்லை: திஸ்ஸ விதாரண
இலங்கையில் தேசியப் பிரச்சினை இன்னும் முடிவுக்கு வரவில்லை என சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
இடதுசாரி அரசியல்வாதியான பீட்டர் கொனமனின் 96வது ஜனன தினத்தை முன்னிட்டு மருதானையில் உள்ள அவரது சிலைக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
வவுனியாவில் டிப்பர் வாகனம் மோதி 6 வயது சிறுமி பலி: சிங்கள சாரதியை காப்பாற்ற முனைந்த பொலிஸார்
வவுனியா ஏ9 வீதியில் இடம் பெற்ற வீதி விபத்தில் ஆறு வயது சிறுமி தலைசிதறிபலியாகியுள்ளார்.இன்று மதியம் 2.00 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் கணேசன் நிறோசினி என்ற ஆறு வயது சிறுமியே உயிரிழந்துள்ளார்.

6 அக்., 2013

இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை பெண்ணொருவர் பலி

இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் பிரதேசத்தில் நேற்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
ஸ்பீட் வெல் மற்றும் மற்றும் பிரிக்பீல்ட்ஸ் வீதி சந்திக்கு அருகில் இந்த விபத்து நேற்று அதிகாலை 6.45 அளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் இலங்கையில் பிறந்த 55 வயதான முத்துமனக்கா பின்ஹாமி என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.

புகைப்படத்தை பார்த்து கொலையா விபத்தா என்பதை தீர்மானியுங்கள் ( படங்கள் இணைப்பு)

இரண்டு பிள்ளைகளின் தந்தை செல்வராசாசிங்கம்.கஜந்தன் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் மர்மமான முறையில் இறந்து கிடக்க காணப்பட்டார். போக்கறுப்பு கேவிலிருந்து நேற்றிரவு 8மணியளவில் அம்பன் பகுதியில் மணல் ஏற்றுவதற்காக தனது உழவு இயந்திரத்தில் புறப்பட்டு சென்றார் என்று அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

சிங்க கொடி சம்பந்தனுக்கும் சிங்கள சம்பந்தி விக்கிக்கும் செருப்படி கொடுக்க இருக்கும் அனந்தி

தமிழின துரோகி சிங்க கொடி சம்பந்தனுக்கும் சிங்கள சம்பந்தி விக்னேஸ்வரனுக்கும் வடமாகாணசபை தேர்தலில் அதி கூடிய வாக்கு பெற்ற அனந்தி எழிலன் செருப்படி கொடுக்க உள்ளார்.  

ஜனாதிபதி முன் சத்தியப் பிரமாணம் : தமிழ் சட்டத்தரணிகள் எதிர்ப்பு


ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்னிலையில் வடமாகாண முதலமைச்சர் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவிருப்பதை தமிழ் சட்டத்தரணிகள் பேரவை கண்டித்துள்ளதுடன், கூட்டமைப்பின்

 ரெலோ சார்பில் சிவாஜிலிங்கமும் புளொட் சார்பில் சித்தார்த்தனும் ஒரு அமைச்சை இரண்டரை வருடங்களுக்கு என்ற அடிப்படையில் பகிர்வதற்கும் ஈ. பி. ஆர். எல். எவ் சார்பில் ஜங்கரநேசனுக்கும் சர்வேஸ்வரனுக்கும் தலா இரண்டரை வருடங்களுக்கு பகிர்ந்து கொடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


வட மாகாண சபைக்கான அமைச்சுப் பதவி தொடர்பாக ஏற்பட்டள்ள இழுபறிநிலையை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.   தமிழரசுக் கட்சியின் சார்பில் குருகுலராஜா கல்வி அமைச்சராகவும,
யாழில் இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!
யாழ்ப்பாணம், பளை, போக்கறுப்பு பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த இளம் குடும்பஸ்தர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியுடன் பேச்சு தொடரும் - சம்பந்தன் 
ஜனாதிபதிக்கும் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சு தொடரும். தமிழ் மக்களுக்குத் திருப்தியளிக்கக்கூடிய எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் முடிவுகளை நாம் எடுப்போம்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பதவியேற்பு முடிவுக்கு ஐ.தே.க., ஜே.வி.பி கட்சிகள் பாராட்டுகின்றன 
வடமாகாண சபையின் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்வதற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் எடுத்துள்ள
சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகள் ரத்து
சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகள் அனைத்தும் சனிக்கிழமை ரத்து செய்யப்பட்டன. தனி தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திராவில் போராட்டம் நடைபெறுவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா சனிக்கிழமை தொடங்கியது. பேருந்து இயக்கப்படாததால் திருப்பதி திருமலையில் பிரம்மோற்சவத்துக்கு செல்லும் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். சென்னை கோயம்பேட்டில் இருந்து ஆரம்பாக்கம் என்ற இடம்வரை மட்டும் தமிழக பேருந்துகள் இயக்கப்பட்டன.

வேலூர் கோர்ட்டில் போலீஸ் பக்ருதீன் ஆஜர்
சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த போலீஸ் பக்ருதீனை, சென்னை பெரியமேட்டில் வெள்ளிக்கிழமை இரவு போலீசார் கைது செய்தனர். போலீஸ் பக்ருதீனிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் போலீஸ் பக்ருதீன், வேலூர் 3வது குற்றவியல்
10 மணி நேரம் நடந்த துப்பாக்கிச் சண்டை: புத்தூரில் பதுங்கியிருந்த 2 தீவிரவாதிகளை பிடித்த தமிழக போலீசார்
ஆந்திர மாநிலம் புத்தூரில் உள்ள வீடு ஒன்றில் பதுங்கியிருந்த இரண்டு தீவிரவாதிகளை 10 மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் போலீசார் கைது செய்துள்ளனர். 
சேலம் ஆடிட்டர் ரமேஷ் படுகொலை, மதுரை பைப் வெடிகுண்டு வைத்த சம்பவங்களில் தொடர்புடைய பிலால் மா-க் ஆந்திர மாநிலம் புத்தூரில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சிபிசிஐடி போலீசார் மற்றும் தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படை போலீசார் 100க்கும் மேற்பட்டோர் புத்தூரில் முகாமிட்டு தேடுதல் பணியில் ஈடுபட்டனர். தீவிரவாதிகள் தங்கியிருந்த வீட்டை கண்டுபிடித்து முற்றுகையிட்டனர். 
சென்னையில் பன்னா இஸ்மாயிலுக்கு சிகிச்சை: பலத்த போலீஸ் பாதுகாப்பு
ஆந்திர மாநிலம் புத்தூரில் தலைமறைவாக இருந்த தீவிரவாதிகளை போலீசார்  சுற்றி வளைத்து கைது செய்தனர். அப்போது
நடிகர் சங்கத்துக்கு சிவாஜி சமூகநல பேரவை கண்டனம்
சிவாஜி கணேசன் பிறந்தநாளை கொண்டாடாத நடிகர் சங்கத்துக்கு சிவாஜி சமூக நலப் பேரவை சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து அதன் தலைவர்
ரணிலுக்கு எதிரான பேரணி மீது மாத்தறையில் துப்பாக்கிச் சூடு 7 பேர் வைத்தியசாலையில்! மாகாணசபை உறுப்பினரின் தந்தை கைது
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நடத்தப்பட்ட பேரணியின் மீது மாத்தறையில் இன்று மதியம் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விக்னேஸ்வரன் ஒரு பிரிவினைவாத ஆயுத போராளி அல்ல என்பது சிலரின் இன்றைய கவலை!- மனோ கணேசன்
இந்த தீவில் தனியொரு தமிழ் நாட்டிற்காக ஆயுதம் தூக்கி போராடிய வரலாறு வடக்கு முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ள விக்னேஸ்வரனுக்கு கிடையாது. இந்த அடிப்படை உண்மை, ஜாதிக ஹெல உறுமய
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகும் ரணில்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுமாறு அந்த கட்சியின் ஐக்கிய பிக்கு முன்னணி விடுத்த கோரிக்கைக்கு பதிலளித்துள்ள ரணில் விக்ரமசிங்க இரண்டு நாள் காலஅவகாசம் கேட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் மோதி விபத்து!- யாழ். பல்கலை மாணவன் அச்சுவேலியில் பலி
விபத்தில் சாவகச்சேரி, கெருடாவில் பிரதேசத்தைச் சேர்ந்த சோதீஸ்வரன் கஜந்தன் என்ற மாணவன் உயிரிழந்துள்ளார்.
யாழ், அச்சுவேலி பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த யாழ். பல்கலைக்கழக மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
எங்கள் ஊர்..!-(புங்குடுதீவு)

''சிறுத்திடல்" வளவெல்லாம் இந்நாளில்
சிறுவெள்ளம் பாயும் - வேலிப்
புற்றெங்கும் குடைபிடிக்கும் காளான்
பிடுங்குதற்கோ போட்டி சிறார்
'சோழனோடை" நிரம்பியே வழிந்து
சேரும் கடலுள் நன்றாய் - 'கேரதீவு"
தாழங்கடற்கரை ஈஞ்சுபுகுந்து வாடை
தம்பாட்டில் சில்லிட்டுச் செல்லும்..,
பிரதமருக்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழுவில் முறைப்பாடு!- ஜனாதிபதிக்கு நெருக்கமான சட்டத்தரணிகள்
பிரதமர் டி.எம். ஜயரத்னவுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய ஜனாதிபதிக்கு நெருக்கமான சட்டத்தரணிகள் சிலர் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரியவருகிறது.
பிரான்சில் நாடுகடந்த தமிழீழ அரசாங்க தேர்தல் ஆணையத்தின் பொதுக்கூட்டம்
நாடுகடந்த தமிழீழ அரசாங்க தேர்தல் ஆணையத்தின் பொதுக்கூட்டமொன்று  நாளை ஞாயிற்றுக்கிழமைன்று பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இடம்பெறவுள்ளது.

5 அக்., 2013

கள்ளக்காதலியை நிர்வாணப்படமெடுத்து இணையத்தில் வெளியிடப் போவதாக மிரட்டிய வர்த்தகருக்கு விளக்கமறியல்

கள்­ளக்­கா­த­லியை தாக்கி, நிர்­வாண கோலத்தில் புகைப்­ப­ட­மெ­டுத்து, இணை­யத்­த­ளத்தில் வெளி­யிடப் போவ­தாக அச்­சு­றுத்­திய வர்த்­தகர் ஒரு­வரை நீர்­கொ­ழும்பு பிர­தான நீதிவான்

டெலோவின் தலைமை பதவியை இராஜினாமா செய்ய உத்தேசம்: செல்வம் எம்.பி. தெரிவிப்பு

தமிழீழ விடுதலை இயக்கம் டெலோவின் தலைவர் பதவியில் இருந்து இராஜினாமா செய்ய உத்தேசித்துள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற

தடுப்பில் உள்ள இரு தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களை சந்திப்பதற்கு சுவிஸ் அதிகாரிகளுக்கு அனுமதி

சுவிற்சர்லாந்தில் இருந்து நாடு கடத்தப்பட்டு, இலங்கையில் கைது செய்யப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர் இருவரையும், பார்வையிடுவதற்கு இலங்கை அரசாங்கம், சுவிஸ்
எதிர்வரும் 7ம் திகதி திங்கட்கிழமை முற்பகல் 9மணிக்கு கொழும்பில் ஜனாதிபதி முன்னிலையில் வடமாகாண முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளார்.

எதிர்வரும் 11ம் திகதி ஏனைய மாகாண அமைச்சர்களும் உறுப்பினர்களும் வடமாகாண முதலமைச்சர் முன்னிலையில் யாழ்ப்பணத்தில் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்கள்.
வடகிழக்கு வாழ் மலையக மக்களின் அரசியல் அபிலாஷைகளை பாதுகாக்கவென வடமாகாண சபையில் விசேடகுழு நியமிக்கப்பட வேண்டும்!


அடையாளம்,
சமூக ஆய்வு மையம் 
மலையக சிவில் அமைப்புக்கள்
02-10-2013


கௌரவ இரா.சம்பந்தன்
தலைவர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
இலங்கை.


பெருமதிப்பிற்குறிய கனம் ஐயா,

வட கிழக்கில் வாழும் மலையக மக்கள் தொடர்பானது!
மு.க.அழகிரிக்கு எதிரான தேர்தல் வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு: ஐகோர்ட்டு உத்தரவு
கடந்த 2009ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில், மதுரை தொகுதியில் தி.மு.க. சார்பில் மு.க. அழகிரியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மோகன் மற்றும் பிற கட்சியை சேர்ந்த
ஏற்காடு சட்டமன்ற தொகுதியில் டிசம்பர் 4ல் இடைத்தேர்தல்
    ற்காடு சட்டமன்ற தொகுதியில் வரும் டிசம்பர் 4ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. டிசம்பர் 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். மனுத்தாக்கல் நவம்பர் 9ஆம் தேதி தொடங்கி
5 மாணவர்கள் கடத்தல்! விசாரணையில் தவராசாவின் வாதத்தால் திடீர் திருப்பம்! ஜப்பான் தூதுவர் வசந்த கரன்னாகொடவுக்கு அழைப்பாணை
மனுதாரர்கள் சார்பாக ஆட்கொணர்வு மனு விசாரணையில் சாட்சியம் அளிக்க முன்னாள் கடற்படைத் தளபதியும் தற்பொழுது ஜப்பான் வெளிநாட்டு தூதுவருமான வசந்த கரன்னாகொடவுக்கு அழைப்பாணை விடுக்கும்படி நீதவான் நீதிமன்ற நீதிபதி நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டார் 
இலங்கைக்கு அருகில் பூமிக்கு அடியில் பாரிய வெடிப்பு - பூகம்பம் ஏற்படும் ஆபத்து
இலங்கைகுரிய பூமி மண்டலப் பகுதியில் சுமார் 500 முதல் 600 கிலோ மீற்றர் தூரத்தில் தெற்கு கடலில் பூமிக்கு அடியில் பாரிய வெடிப்பு ஏற்பட்டு வருவதாக சிரேஷ்ட பூகோளவியல் பேராசிரியர் சீ.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
இயந்திர கோளாறுக்கு உள்ளான படகில் இருந்த 70 பேரை கடற்படையினர் காப்பாற்றினர்
இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையில் உள்ள கடற்பரப்பில் இயந்திர கோளாறுக்கு உள்ளான படகில் 70 பேர் இருந்ததாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

4 அக்., 2013

பொதுநலவாய நாடுகளின் தேசியக் கீதங்கள் இலங்கையின் 54 பகுதிகளில் இசைக்கப்படும்

எதிர்வரும் நவம்பர் மாதம் தலைநகர் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டினை முன்னிட்டு எம்.டீ.வி மற்றும் எம்.பீ.சி நிறுவனங்கள் தேசிய இளைஞர் சேவை

யாழ். பொன்னாலை வரதராஜ பெருமாள் ஆலயத்தில் கொள்ளை

கூரை ஒடுகளைப் பிரித்து உள்நுழைந்த திருடர்கள் அங்கு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 150 பவுண் வரையான தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனர். அத்துடன் சுவாமிக்கு

பிர­பா­கரன் கொல்­லப்­பட்ட போதிலும் வடக்கு அர­சியல் தலை­வர்கள் நாட்டை பிள­வு­ப­டுத்த முயற்சி -இரா­ணுவ வீரர்­களின் சங்கம்

நாட்டில் பிரி­வி­னை­வாத யுத்தம் முடி­வ­டைந்­தும் இலங்கை ஒரே நாடாக உள்­ளதா? என்­பதில் சந்­தே­க­மே நில­வு­கி­ன்றது. பிர­பா­கரன் இறந்த போதிலும் வடக்கின் அர­சியல் தலை­வர்கள்


சென்னையில் திருமாவளவன் உண்ணாவிரதம்

இலங்கையில் நடக்கவுள்ள காமன்வெல்த் மாநாட்டை தடுக்க வேண்டும் அல்லது அதில் இந்தியா பங்கேற் காமல்  தவிர்க்க வேண்டும்.   சிங்கள அரசுக்கு இந்தியா போர்க்கப்பல்களை வழங்கக்கூடாது.  இந்தியாவிலி ருந்து கம்பி வழியே இலங்கைக்கு
மத்திய அமைச்சர் பதவியிலிருந்து சிரஞ்சீவி ராஜினாமா

தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதையடுத்து, மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் பதவியிலிருந்து சிரஞ்சீவி ராஜினாமா செய்துள்ளார். 
250 கடல் மைல் தொலைவில் 65 பேருடன் தத்தளிக்கும் படகு! மீட்பு பணிக்காக இலங்கை கடற்படை கப்பல் அனுப்பி வைப்பு
இலங்கையில் இருந்து 250 கடல் மைல் தொலைவில் தென்கிழக்கு கடற்பரப்பில் இயந்திர கோளாறு காரணமாக கடலில் தத்தளித்து வரும் படகில் உள்ளவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
யாழ்.மாநகர சபையில் இடம்பெற்ற மோசடிகளுக்கு மேயர் யோகேஸ்வரிக்கும் தொடர்பு!– மனம்திறந்தார் விஜயகாந்த்
யாழ். மாநகர சபை மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா பலரிடம் பணத்தை ஏமாற்றிப் பெற்றுள்ளார். இடம்பெற்ற மோசடிகளில் அவருக்கும் தொடர்பு உண்டு என யாழ்.மாநகர சபையின் ஈ.பி.டி.பி உறுப்பினர் சுதர்சிங் விஜயகாந் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
முல்லைத்தீவில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வீட்டை வெடி வைத்து தகர்த்துள்ள படையினர்
முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் பயன்படுத்தியதாக கூறப்படும் நிலத்தடி வீடு இராணுவத்தினரால் இன்று மாலை தகர்க்கப்பட்டிருப்பதாக முல்லைத்தீவிலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

3 அக்., 2013

ஆபத்தில் இருந்து தாயை மீட்க! உள்ளத்தை உருக்கும் சிறுவனின் மன்றாட்டம்

aimpari_jvpnews


தனது தாயை மீட்டுத்தருமாறு 7 வயது சிறுவனொருவன் உருக்கமான வேண்டுகோளொன்றை விடுத்துள்ளார்.

இலங்கை தமிழ் யுவதி கனேடிய இளம் அழகியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அபிசேகா லொயிட்சன் என்ற யுவதியே இவ்வாறு இளம் கனேடிய அழகியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இத்தாலியில் கப்பல் மூழ்கியது : 100 பேர் பலி- 250 பேரை காணவில்லை
வட ஆப்ரிகாவில் இருந்து இத்தாலி வந்த ஒரு கப்பல் இன்று கடலில் மூழ்கியது. இதில் 100 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை 82 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த கப்பலில் 500 பேர் வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் 250 பேர் நிலை தெரியவில்லை என்றும் மீட்புபணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அதிகாரப் பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதா நேரில் ஆஜராக உத்தரவு : சொத்துக்குவிப்பு வழக்கின் புதிய நீதிபதி முடிகவுடர் அதிரடி
சொத்துக்குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா அக்டோபர் 30ம் தேதி பெங்களூர் கோர்ட்டில் நேரில் ஆஜராகவேண்டும் என்று புதிய நீதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்ட முடிகவுடர்

லாலு பிரசாத்துக்கு  5 ஆண்டு சிறை தண்டனை
 

பீகார் மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்ட்டீரிய ஜனதாதள கட்சின் தற்போதைய எம்.பியுமான  லல்லுபிரசாத் யாதவுக்கு மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
கிணற்றில் விழுந்த பெண்–சிறுமியை காப்பாற்றிய போலீஸ் ஏட்டுக்கு 1 லட்சம்: ஜெ., அறிவிப்பு

முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் கிராமம், வடக்குத் தெருவில் வசித்து வரும் கண்ணன் என்பவரின் மனைவி வசந்தி 22.6.2013
ஸ்ரீரங்கம் கோயிலுக்கு ஜெயலலிதா கொடுத்த யானை தமிழகம் முழுவதும் தெருத்தெருவாக பிச்சை எடுக்கும் பரிதாபம்
கடந்த 2011-ம் ஆண்டு திருச்சி, ஸ்ரீரங்கம் கோயிலுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் பரிசாக வழங்கப் பட்டது சிமித்ரா என்கிற சுமி யானை.  அந்த யானைக்கு காயம் ஏற்பட்டதால்
வாகரை இந்து ஆலயத்தில் இராணுவத்தின் தலையீடு: நிறுத்துமாறுகோரி அரச அதிபருக்கு யோகேஸ்வரன் எம்.பி.மகஜர்
வாகரை ஆலங்குளத்திலுள்ள இந்து ஆலயங்களில் இராணுவம் தலையிடுவதை நிறுத்தி உதவுமாறு கோரி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் அவசர மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மோதல் மூன்று மாணவிகள் உட்பட 8 பேர் காயம்
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சம்மாந்துறையில் உள்ள விஞ்ஞான பீடத்தில் இன்று ஏற்பட்ட மோதலில் 8 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
பிரபாகரன்...தலைவராக சிறந்த ரோல்மாடல்! எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை! பிரகாஷ்ராஜ் -விகடன் 
என் மகன் உயிரோடு இருந்திருந்தால், விடுதலைப்புலி பிரபாகரனை அவனுக்கு ரோல்மாடலாகக் காட்டியிருப்பேன்’னு சொல்லியிருக்கீங்க. பிரபாகரன் மீதான விமர்சனங்களை தாண்டியும் அவரை அவ்வளவு பிடிக்குமா?''
மட்டக்களப்பில் கடனை திரும்ப செலுத்த முடியாத பெண்களிடம் பாலியல் இலஞ்சம் கோரும் அதிகாரிகள்!- அதிர்ச்சி தகவல்
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுயதொழில் செய்ய கடனை வழங்கும் நிறுவனங்களின் அதிகாரிகள் கடனை திருப்பிச் செலுத்த முடியாத பெண்களுக்கு பாலியல் ரீதியான தொல்லைகளை கொடுப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன என்று அரசசார்பற்ற
கூட்டமைப்புக்கு ஆதரவு தெரிவித்ததால் உயிரச்சுறுத்தல்: தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ஈழத்தமிழர் தகவல்
நடந்து முடிந்த வட மாகாண தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு தெரிவித்து செயற்பட்டதால் சில சிங்கள கட்சிகள் தன்னை அச்சுறுத்தி வருவதாக அதிவேக படகில் சென்று இந்தியாவில் இறங்கி பரபரப்பை ஏற்படுத்திய நபர் தெரிவித்துள்ளார்.
நரேந்திர மோடியுடன் சந்திரபாபு நாயுடு; பா.ஜனதா கூட்டணியில் தெலுங்கு தேசம் சேர வாய்ப்பு?
பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் சூழ்நிலையில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியும், பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும்
லாலுவுக்கு சிறை எதிரொலி: ம.பி. மாநில ராஷ்டிரீய ஜனதாதள கட்சி, பா.ஜனதாவுடன் இணைந்தது
மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும், பீகார் மாநில முன்னாள் முதல்–மந்திரியுமான லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என ராஞ்சி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இளைஞனின் சடலம் புதருக்குள்ளிருந்து மீட்பு : நொச்சிக்குளத்தில் சம்பவம்
நொச்சிக்குளம் மேற்கு கரைப் பகுதியில் இருந்து இளைஞன் ஒருவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மொரவௌ பொலிஸார் தெரிவித்தனர்.

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் பாரிய ஆர்ப்பாட்டம்

பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் கண்டி நகரத்தில் பாரிய ஆர்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் அரசியல் அமைப்பின் 157 (அ) உறுப்புரையையும் அரசியல் அமைப்பிற்கான ஆறாவது திருத்தத்தையும், மீறியுள்ளதாக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்த 6 மனுக்களும் இன்று பிரதம நீதியரசர் மொகான் பீரிஸ், நீதியரசர்களான சந்திரா ஏகநாயக, ரோகினி மாரசிங்க ஆகியோர் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

1. இந்த மனுக்களில் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டிருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா ஆகியோர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி

2 அக்., 2013

 முதல்வர் செய்த முதல் பணி 
news
வடக்கு மாகாண முதலமைச்சராக நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்ட க.வி.விக்னேஸ்வரன் தனது முதல் பணியாக முதியோர் தினமான நேற்று சுழிபுரம் வழக்கம்பரை சிவபூமி முதியோர் இல்லத்துக்குச் சென்று அவர்களுடன் கலந்துரையாடினார்.
செங்­க­லடி படு­கொலை: சந்தேகநபரான மகளை பிணையில் விடு­விக்கக் கோரி மனு­த் தாக்கல்
செங்கலடி நகரில் தாயும் தந்தையும் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான பிரதான சந்தேகநபராகக் கருதப்படும் மகளுக்கு பிணை கோரி மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டத்தரணிகளான நிஸாம் காரியப்பர் மற்றும் ஏ.ஏ. றூமி ஆகியோர் இந்த மனுவினைத் தாக்கல் செய்துள்ளனர்.
செங்கலடியில் பிரபல வர்த்தகரான சிவகுரு ரகு அவரது மனைவி சுந்தரமூர்த்தி விப்ரா ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் 7ம் திகதி நள்ளிரவு படுக்கையறையில் கோரமான முறையில் வெட்டி குத்திக் கொலை செய்யப்பட்டிருந்தார்கள்.
முதலாவது அரசவை நிறைவு! ஒக்ரோபர் 26ல் தேர்தல்! செயற்பாடுகள் விரிவாக்கப்படும்: பிரதமர் வி.உருத்திரகுமாரன்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவை தனது ஆட்சிமைக்காலமாகிய மூன்று வருடங்களை நிறைவு செய்துகொள்கின்றமையால் அரசாங்கத்தின் அரசியலமைப்பு விதிகளுக்கமைய 2013 ஒக்ரோபர் 1ம் நாளாளன்று முதலாவது அரசவை கலைக்கப்படுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் அறிவித்துள்ளார்.
இதேவேளை வரும் (ஒக்ரோபர் 26) தேர்தல் மூலம் தெரிவாகும் இரண்டாம் அரசவையானது தனது பணிகளை தொடங்கும் வரை தற்போதைய அமைச்சரவை தொடந்து நீடிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பிரதமர்
ஐ.நா சட்டக்குழுவில் இலங்கை: ஏமாற்றமளிப்பதாக கனடா தெரிவிப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் 68வது பொதுச் சபையின் ஆறாவது சட்டக் குழுவிற்கு இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளது.
யாழ்.மாநகர சபையில் ஈ.பி.டி.பி யின் ஆட்சி மோசடிகள் நிறைந்ததே!- பகிரங்கமாக ஒப்புக் கொண்டார் மேயர்
ஈ.பி.டி.பி தலைமையிலான யாழ்.மாநகர சபையின் ஆட்சியானது ஊழல் மோசடிகள் நிறைந்தது என்பதை யாழ்.மாநகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார்.
யாழ்.மாநகர சபையில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவிலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இதனை பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார்.
யாழ்.மாநகர சபையில் ஊழல் மோசடிகளிலும் நிர்வாக மோசடிகளிலும் ஈடுபட்டவர் ஈ.பி.டி.பி உறுப்பினர் விஜயகாந்த் ஆவார்.

1 அக்., 2013

வெளிநாட்டுக் கணவர் பார்க்க! கணணி முன் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை

கிருஷ்னப்பிள்ளை நிர்மலா என்ற இருபத்தைந்து வயதுடைய ஒருபெண் குழந்தையின் தாய் ,கட்டாரில் தொழில் புரியும் தனது கணவரான சத்தியசீலன் சீவரத்தினம் என்பவரோடு இன்று SKYPEயில்
புலிகளின் தலைவரின் முல்லைத்தீவு வீட்டை பார்க்க மக்களுக்கு திடீர் தடை(படங்கள் இணைப்பு)
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சில சுற்றுலா தளங்களுக்கு மக்கள்

கோச்சடையான் ‘சிங்கிள்’ அக்டோபர் 7 ரிலீஸ்!

கோச்சடையான் திரைப்படத்தின் டிரெய்லரில் ரஜினியை இளைமைத் துள்ளலுடனும், அதிரடியான வேகத்துடனும் கண்ட ரசிகர்கள் வாயடைத்துவிட்டனர். 


கோச்சடையான் பெரும்பாலும் ரஜினியின் பிறந்தநாளன்று ரிலீஸாகும் என்று ஒரு பேச்சு நிலவிவந்தாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக காத்திருக்கிறது



           ""ஹலோ தலைவரே... சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பா டெல்லியில் ஒரு சட்டப் போராட்டமே நடந்திருக்குது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்காக ஜெ. தரப்பும் தி.மு.க தரப்பும் காத்துக்கிட்டிருக்குது.''



          ந்திய சினிமாவின் நூற்றாண்டை நான்கு நாள்‘"சிறப்பாக' கொண்டாடி மகிழ்ந்திருக்கிறது தமிழக அரசும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையும். ஆனால், "தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கும் மறு மலர்ச்சிக்கும் வித்திட்ட ஜாம்பவான்கள் பலரும் மறக்கடிக்கப்பட்டனர்,

           கேரளத்தில் இருந்து கிளம்பிய நரேந்திர மோடியின் தனி விமானம், பிற்பகல் 3.45-க்கு திருச்சியில் தரையிறங்கியது. விமானநிலையத்தில் வந்திறங்கியவருக்கு, திருச்சிவாழ் குஜராத்தி கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து, அம்பாசடர் காரில், கூடவே
இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்தக் கூடாது என வலியுறுத்தி தியாகு உண்ணாவிரதம்!
தமிழ் தேசிய விடுதலை இயக்க பொதுச்செயலாளர் தியாகு சென்னையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். வள்ளுவர் கோட்டம் அருகே காலவரையற்ற உண்ணாவிரதத்தை
யாழ்.மாவட்டத்தில் ஏழாலையைச் சேர்ந்த மாணவன் 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் முதலிடம்
நடந்து முடிந்த 2013ம் ஆண்டு தரம்- 5 புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ். ஏழாலை மேற்கு சைவ சன்மார்க்க வித்தியாசாலையில் கல்வி பயிலும் மாணவனான பரமானந்தம் தனுராஜ் 194 புள்ளிகளை பெற்று யாழ். மாவட்டத்தில் முதல் இடம் பெற்றுள்ளார்.
மட்டக்களப்பில் 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் வின்சன்ட் மாணவி முதலிடம்
5ஆம் ஆண்டுப் புலமைப் பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வின்சன்ட் மகளிர் பாடசாலை மாணவி முரளிதரன் கவிலாஸ்னா 193 புள்ளி பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
ஜனநாயக மக்கள் முன்னணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கும்: சிறீதரன் எம்.பி
கொழும்பு உட்பட்ட மேல்மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணிக்கு தமது முழுமையான ஆதரவை வழங்கும் என பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் தெரிவித்தார்.
இலங்கை குறித்து இந்தியாவுடன் பான் கீ மூன் பேச்சு!
இலங்கை நிலவரம் உட்பட்ட விடயங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூன் இந்தியாவுடன் பேச்சு நடத்தியுள்ளார்.
நகைக்கடையில் திருடியவர்களை 20 நாட்களின் பின்னர் காட்டிக்கொடுத்த கமெரா- யாழ்.நகரில் சம்பவம
யாழ்.நகரிலுள்ள நகைக்கடையொன்றில் திருடிய இரண்டு பெண்களை 20 நாட்களின் பின்னர் கமெரா காட்டிக் கொடுத்த சம்பவம் பெருபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெல்ஜியத்தில் இடம்பெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு: ஆயிரக்கணக்கானோர் உணர்வுபூர்வமாக பங்கேற்பு
பெல்ஜியம் - புருசல் நகரில் இடம்பெற்ற கவனயீர்ப்பு நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் உணர்வுபூர்வமாகக் கலந்து கொண்டனர்.

அரசாங்கத்திற்கும் கூட்டமைப்பிற்கும் இடையில் விசேட சந்திப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெறவுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 
அனைத்துலக வல்லுனர்கள் பங்கெடுப்பில் தமிழினப் படுகொலைக்கு பொறுப்புக்கூற முழங்கிய 16 தீர்மானங்கள்
இலங்கைத்தீவில் தமிழினத்தின் மீது நடந்தேறும் இனப்படுகொலைக்கு பொறுப்புக்கூற வைக்கும் பொருட்டு பிரித்தானிய மண்ணில் இடம்பெற்றிருந்த மாநாடு பதினாறு தீர்மானங்களுடன் நிறைவு பெற்றுள்ளது.
கிழக்கு மாகாண சபையில் இன்று கூச்சல் குழப்பம்
அரசியலமைப்பின் 13வது திருத்த சட்டத்தை பலப்படுத்துவது தொடர்பாக கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல் சமர்ப்பித்த பிரேரணைக்கு முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து, சபையில் பெரும் அமளி துமளி ஏற்பட்டதுடன் சபை

கூட்டமைப்புடன் அரசாங்கம் பேச்சு நடத்தவே வேண்டும் : ஐ.தே.க.

வட மாகாண சபைத் தேர்­தலில் தமிழ் மக்­களின் அமோ­க­மான ஆத­ரவு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு கிடைத்­துள்­ள­மையின் கார­ண­மாக தேசிய பிரச்­சினைத் தீர்வு உள்­ளிட்ட எந்த விட­ய­மா­னாலும்

2013 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரிட்சையில் மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை மாவட்ட மட்டத்தில் 1 ஆம், 4ஆம் மற்றும் 6 ஆம் இடங்களை பெற்றுக் கொண்டுள்ளது.
குறித்த பாடசாலையில் 29 மாணவர்கள் சித்தி அடைந்துள்ளனர். இவர்களில் நடராஜா அருண் மாவட்ட மட்டத்தில் 185 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தையும், தர்மகுலசிங்கம் மேர்வின் 183 புள்ளிகளை பெற்று மாவட்ட மட்டத்தில் நான்காம் இடத்தையும், பாஸ்கரன் டிருக்சி 182 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் 6 ஆம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

லாலுவின் எம்.பி. பதவி பறிப்பு
மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் குற்றவாளி என பரபரப்பு தீர்ப்பளித்தது ராஞ்சி சிபிஐ கோர்ட். குற்றவாளி என்பது உறுதியானதால் லாலுவின் எம்.பி. பதவி உடனடியாக பறிக்கப்படுகிறது.    தண்டனை பெறுவோரின் எம்.பி. பதவியை பறிக்க முன்னதாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ad

ad