புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 அக்., 2013

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பதவியேற்பு முடிவுக்கு ஐ.தே.க., ஜே.வி.பி கட்சிகள் பாராட்டுகின்றன 
வடமாகாண சபையின் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்வதற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் எடுத்துள்ள
முடிவை ஐக்கிய தேசியக்கட்சியும் ஜே.வி.பி கட்சியும் பாராட்டியுள்ளதுடன் இந்த முடிவானது நல்லிணக்கத்துக்கு சாதகமான ஒரு சமிக்ஞை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் இந்த தீர்மானமானது அவர்கள் தமது பிரிவினைத் திட்டத்திலிருந்து விலகிவந்துள்ளதை காட்டுகின்றது என்று மக்கள் விடுதலை முன்னணியின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினரான விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

தமிழ்;த்தேசியக் கூட்டமைப்பின் இந்த தீர்மானமானது புதுப்பாதையொன்றை காட்டுவதாக அமைந்துள்ளது எனவும்; எதிர்காலத்தில் சாதகமான நிலைமைகள் ஏற்படுவதற்கான அடையாளமாக இதை கொள்ளலாம் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

இவ்வாறான முடிவுகள் தொடர்ந்து நல்லவழியில் செல்லும் என்று தான் நம்புவதாகவும் அவர் கூறினார்.

இருப்பினும் இந்த தீர்மானம் முன்னாள் இராணுவ அதிகாரியான ஆளுநருக்கு எதிரான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தொடர்ச்சியான நிலைப்பாட்டின் குறியீடாக உள்ளதென்றும் அவர் கூறினார்.
  
மேலும், அரசாங்கத்தினால் இனவாதிகளாக சித்திரிக்கப்படும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தனது இந்த தீர்மானத்தின் மூலம் தன் மீதான இனவாத குற்றச்சாட்டிலிருந்து விடுபட்டுள்ளதெனவும் அவர் கூறினார்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=578162342406268506#sthash.ap1126jX.dpuf

ad

ad