புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 அக்., 2013

வடகிழக்கு வாழ் மலையக மக்களின் அரசியல் அபிலாஷைகளை பாதுகாக்கவென வடமாகாண சபையில் விசேடகுழு நியமிக்கப்பட வேண்டும்!

அடையாளம்,
சமூக ஆய்வு மையம் 
மலையக சிவில் அமைப்புக்கள்
02-10-2013

கௌரவ இரா.சம்பந்தன்
தலைவர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
இலங்கை.

பெருமதிப்பிற்குறிய கனம் ஐயா,

வட கிழக்கில் வாழும் மலையக மக்கள் தொடர்பானது!

குண்டுகளுக்கும், கொத்துக் குண்டுகளுக்கும், எறிகணை வீச்சின் உள், வெளி காயங்களுக்கும் துவண்டு விடாது காத்திருந்து தமது வாக்குகளால் பதிலடி கொடுத்த வடக்கின் வாக்காளர்களுக்கும், தெரிவானோருக்கும், மீண்டும் அடையாளம் மற்றும் மலையக சமூக ஆய்வு மையமாக வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.

தெற்கின் பேரின இன ஒடுக்குதலில் இருந்து தமை பாதுகாத்துக் கொள்ள மலையகத்தின் பல பாகங்களில் இருந்தும் மக்கள் கடந்த காலங்களில் வன்னி நோக்கி வந்து குடியேறி தமது இருப்பை பலபடுத்திக் கொண்டனர்.

இம்மக்களும் தமிழ் தேசியம், மண் காத்திட தம்மாலான பெரும் பங்களிப்பினை நல்கி உயிர், உடைமைகளை இழந்து வாழ்விற்கு ஏங்கி நின்ற போதும் தமது புள்ளிடிகள் மூலம் தமிழ் தேசியத்தின் அரசியல் பாதுகாப்பில் தாமும் உடன் பங்காளிகள் என்பதை தெளிவுப்படுத்தியுள்ளனர். அவர்களுக்கும் எமது வாழ்த்துக்கள்.

மேலும் கிடைக்கப் பெற்ற இரண்டு போனஸ் ஆசனங்களில் ஒன்று மலையக மக்களையும் பிரதிநிதிப்படுத்தும் வகையில் சுழற்சி அடிப்படையில் பதவி கொடுக்கப்பட தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுத்திருக்கும் தீர்க்கமான முடிவினையும் மலையக சிவில் அமைப்புகள் என்ற ரீதியில் வரவேற்கின்றோம்.

அத்தோடு ஒரு வருடத்திற்கு இப்பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டாலும் மலையக மக்களினதும், பாதிக்கப்பட்ட அனைத்து மக்களினதும் வாழ்வாதாரங்களை பாதுகாத்து மக்கள் வாழ்வில் பற்று வைத்து தமது அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ந்து உழைக்கும் என்பதிலும் நம்பிக்கை கொள்கின்றோம்.

இவற்றோடு மலையக மக்கள் இந்தியாவில் இருந்து இலங்கை வந்தபோதும் குறிப்பாக இன வன்முறையால் பாதிக்கப்பட்டு வடக்கில் குடியேறிய போதும் தமக்கே உரித்தான அடையாளங்களையும், பாரம்பரியங்களையும் வரலாற்று பின்னணியையும் கொண்டவர்களாகவே வாழ்ந்து வருகின்றனர்.

இவற்றைப் பாதுகாக்க வடமாகாண சபையில் நிரந்தர குழு ஒன்றை அமைக்குமாறு கேட்டுக் கொள்வதோடு இக்குழுவின் செயற்பாட்டில் உள்ளும், புறமும் ஒத்துழைப்பு நல்க அடையாளம் மற்றும் மலையக சமூக ஆய்வு மையம் ஆயத்தமாக இருக்கின்றது என்பதையும் வலியுறுத்துகின்றோம்.

நன்றி.

சமூகப்பற்றுடன்,

பழனி விஜயகுமார்
அடையாளம்
(077-2841096)

அருட்தந்தை மா.சத்திவேல்
மலையக சமூக ஆய்வு மையம்
(0777-663545)

பிரதிகள்:
வட மாகாண சபைமுதலமைச்சர்,
வட மாகாண சபைக்கு உறுப்பினர்கள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டுக் கட்சித் தலைவர்கள்.

ad

ad