புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 அக்., 2013

கிணற்றில் விழுந்த பெண்–சிறுமியை காப்பாற்றிய போலீஸ் ஏட்டுக்கு 1 லட்சம்: ஜெ., அறிவிப்பு

முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் கிராமம், வடக்குத் தெருவில் வசித்து வரும் கண்ணன் என்பவரின் மனைவி வசந்தி 22.6.2013
அன்று தனது சகோதரியின் மகள் சிறுமி மகேஸ்வரியுடன் வீட்டின் அருகிலிருந்த கிணற்றில் தண்ணீர் எடுக்க சென்றபோது, மகேஸ்வரி எதிர்பாராரமல் கிணற்றில் தவறி விழுந்து விட்டாள். மகேஸ்வரியைக் காப்பாற்ற வசந்தியும் கிணற்றில் குதித்துள்ளார்.
கிணற்றில் விழுந்த இருவரும் கூச்சல் போட்டு

உயிருக்குப் போராடிய நிலையில், அங்கு வந்த ராமநாதபுரம் மாவட்டம், தனிப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை தலைமைக் காவலர் சுபாஷ் சீனிவாசன் என்பவர் தன் உயிரையும் பொருட்படுத்தாமல், சமுதாய அக்கறையோடு கிணற்றுக்குள் குதித்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த வசந்தி மற்றும் ம

கேஸ்வரி ஆகிய இருவரையும் கயிறு மூலம் கிணற்றிலிருந்து மேலே கொண்டு வந்து காப்பாற்றியுள்ளார்.
தலைமைக் காவலர் சுபாஷ் சீனிவாசன் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் துணிச்சலுடன் கிணற்றுக் குள் இறங்கி வசந்தி மற்றும் மகேஸ்வரி ஆகிய இருவரையும் காப்பாற்றியமைக்கு எனது பாராட்டுதல் களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தலைமைக் காவலர் சுபாஷ் சீனிவாசனின் தீரச் செயலையும், தன்னலம் கருதா அவரின் சமுதாய அக்கறையையும், கடமை உணர்வையும் பாராட்டி அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்’’என்று கூறப்பட்டு

ad

ad