புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 அக்., 2013

 ரெலோ சார்பில் சிவாஜிலிங்கமும் புளொட் சார்பில் சித்தார்த்தனும் ஒரு அமைச்சை இரண்டரை வருடங்களுக்கு என்ற அடிப்படையில் பகிர்வதற்கும் ஈ. பி. ஆர். எல். எவ் சார்பில் ஜங்கரநேசனுக்கும் சர்வேஸ்வரனுக்கும் தலா இரண்டரை வருடங்களுக்கு பகிர்ந்து கொடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


வட மாகாண சபைக்கான அமைச்சுப் பதவி தொடர்பாக ஏற்பட்டள்ள இழுபறிநிலையை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.   தமிழரசுக் கட்சியின் சார்பில் குருகுலராஜா கல்வி அமைச்சராகவும,
வைத்தியகலாநிதி பத்மநாதன் சத்தியலிங்கம் சுகாதாரத்துறை அமைச்சராகவும் தெரிவாகுவது உறுதியாகி உள்ளது.
எனினும் ரெலோ சார்பில் சிவாஜிலிங்கமும் புளொட் சார்பில் சித்தார்த்தனும் ஒரு அமைச்சை இரண்டரை வருடங்களுக்கு என்ற அடிப்படையில் பகிர்வதற்கும் ஈ. பி. ஆர். எல். எவ் சார்பில் ஜங்கரநேசனுக்கும் சர்வேஸ்வரனுக்கும் தலா இரண்டரை வருடங்களுக்கு பகிர்ந்து கொடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தமிழரசுக்கட்சியின் 2 அமைச்சுக்களும் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சிக்கு ஒரு அமைச்சும் ரெலோவுக்கும் புளொட்டிற்கும் ஒரு அமைச்சும் என பகிரப்பட்டுள்ளது.
இதேவேளை அமைச்சு பகிர்வினால் டெலோவின் தலைவர் பதவியில் இருந்து இராஜினாமா செய்ய உத்தேசித்துள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பாக வன்னி மாவட்டத்திற்கு அமைச்சுப் பதவி வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் டெலோ சார்பாக வன்னி மாவட்டத்திற்கு வழங்கப்படவிருந்த அந்த அமைச்சுப் பதவியை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு வழங்க கட்சி தீர்மானித்துள்ளது என்றும் கட்சியின் தீர்மானத்திற்கு நான் கட்டுப்பட்டவனாக இருந்தாலும் வன்னி மக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டிய நிலை தனக்கு உள்ளது என்றும் அதனாலேயே டெலோவின் தலைவர் பதவியில் இருந்து இராஜினாமா செய்ய உத்தேசித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக சில தினங்களில் தனது இராஜினாமா கடிதத்தை கட்சியின் செயலாளர் நாயகத்திடம் கையளிக்கவுளளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

ad

ad