வேலூர் கோர்ட்டில் போலீஸ் பக்ருதீன் ஆஜர்
இந்த நிலையில் போலீஸ் பக்ருதீன், வேலூர் 3வது குற்றவியல்
கோர்ட்டில் சனிக்கிழமை மாலை ஆஜர்படுத்தப்பட்டார்.
போலீஸ் பக்ருதீன் நண்பர் அப்துல் ரகீம் என்பவர், ஆட்கொணர்வு மனு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். கைது செய்யப்பட்ட போலீஸ் பக்ருதீனை, நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தவில்லை என்று மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சுதாகரன் மற்றும் ஆறுமுகசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், போலீஸ் பக்ருதீனை போலீசார் கைது செய்து தற்போது வேலூரில் வைத்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், போலீஸ் பக்ருதீன் கைது செய்தது தொடர்பான அறிக்கையை இரண்டு வாரத்திற்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.