10 மணி நேரம் நடந்த துப்பாக்கிச் சண்டை: புத்தூரில் பதுங்கியிருந்த 2 தீவிரவாதிகளை பிடித்த தமிழக போலீசார்
சேலம் ஆடிட்டர் ரமேஷ் படுகொலை, மதுரை பைப் வெடிகுண்டு வைத்த சம்பவங்களில் தொடர்புடைய பிலால் மா-க் ஆந்திர மாநிலம் புத்தூரில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சிபிசிஐடி போலீசார் மற்றும் தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படை போலீசார் 100க்கும் மேற்பட்டோர் புத்தூரில் முகாமிட்டு தேடுதல் பணியில் ஈடுபட்டனர். தீவிரவாதிகள் தங்கியிருந்த வீட்டை கண்டுபிடித்து முற்றுகையிட்டனர்.
அப்போது பால்காரர் வேடத்தில் தீவிரவாதிகளி பதுங்கியருந்த வீட்டிற்கு செல்ல இருந்த சிபிசிஐடி போலீஸ்காரர் லட்சுமணனை அடையாளம் கண்டுகொண்ட தீவிரவாதிகள் சரமாரியாக தாக்கினர். தாக்குத-ல் படுகாயம் அடைந்த லட்சுமணனை தீவிரவாதிகளின் பிடியில் இருந்து மீட்ட போலீசார், அவரை சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து தீவிரவாதிகள் தங்கியிருந்த வீடு உள்பட மூன்று தெருக்களை தங்களது கட்டுப்பாட்டுக்குள் போலீசார் கொண்டு வந்தனர். பாதுகாப்பு கருதி அந்தப் பகுதியில் தங்கியிருந்த பொதுமக்களை வெளியேற்றினர். தமிழக போலீசாருடன் ஆந்திர போலீசாரும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
இருதரப்புக்கும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. தீவிரவாதிகளை சரண் அடையும்படி போலீசார் அறிவுறுத்தினர். சனிக்கிழமை பிற்பகல் ஒரு மணி அளவில் பேச்சுவார்த்தையை தொடங்கிய போலீசார், மறுபுறம் அவர்களை பிடிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டனர். ஆனால் தீவிரவாதிகள் சரண் அடைய பிடிவாதம் பிடித்ததால், அவர்கள் தங்கியிருந்த வீட்டிற்குள் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன.
இதையடுத்து தீவிரவாதிகள் தங்கியிருந்த வீட்டில் இருந்து மூன்று குழந்தைகளுடன் ஒரு பெண் வெளியே வந்ததார். இதையடுத்து அந்த வீட்டிற்குள் நுழைந்த போலீசார் அங்கு பதுங்கியிருந்த பிலால் மா-க் மற்றும் பன்னா இஸ்மாயில் ஆகியோரை கைது செய்தனர். பன்னா இஸ்மாயிலுக்கு வயிற்றில் குண்டு காயம் இருந்தது தெரிய வந்தது.
போலீசாருடன் நடந்த சண்டையில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில், பன்னா இஸ்மாயில் வயிற்றில் காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. பிடிபட்ட 6 பேரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.