புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 அக்., 2013

மட்டக்களப்பில் 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் வின்சன்ட் மாணவி முதலிடம்
5ஆம் ஆண்டுப் புலமைப் பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வின்சன்ட் மகளிர் பாடசாலை மாணவி முரளிதரன் கவிலாஸ்னா 193 புள்ளி பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

அத்துடன் மட்டு. மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு கண்ணகி வித்தியாலய மாணவி சதாசிவம் தனுசனா 191 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளார்.
படுவாங்கரையின் வவுணதீவு பிரதேசத்துக்குட்பட்ட விளாவெட்டுவானை சேர்ந்த கல்லடியில் வசிக்கும் பல் வைத்தியர் முரளிதரன் ஆயுள்வேத வைத்தியர் காயத்திரி தம்பதியினரின் சிரேஸ்ட புதல்வியான கவிலாஸ்னாவே மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.
இன்று பரீட்சை முடிவுகள் வெளியானதை அடுத்து பாடசாலைக்குச் சென்ற மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி மற்றும் பாடசாலையின் முன்னாள் அதிபரும் கல்குடா வலய பிரதிக் கல்விப் பணிப்பாளருமாகிய திருமதி சுஜாதா குலேந்திரன் ஆகியோர் மாணவியை வாழ்த்தியதுடன் பரிசிப் பொருட்களும் வழங்கிக் கௌரவித்தனர்.
இதன் போது மாணவியின் வகுப்பு ஆசிரியர் செல்வி எஸ்.ராதிகாவிற்கும் பாடசாலை அதிபர் திருமதி இராஜகுமாரி கனகசிங்கத்திற்கும் பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.
வின்சன்ட் உயர்தர மகளீர் தேசியப் பாடசாலையில் 41 மாணவிகள் வெட்டுப் புள்ளிக்கு வேல் பெற்று சித்தி பெற்றுள்ளதாக பாடசாலை அதிபர் திருமதி இராஜகுமாரி கனகசிங்கம் தெரிவித்தார்.

ad

ad