புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 அக்., 2013

பிரான்சில் நாடுகடந்த தமிழீழ அரசாங்க தேர்தல் ஆணையத்தின் பொதுக்கூட்டம்
நாடுகடந்த தமிழீழ அரசாங்க தேர்தல் ஆணையத்தின் பொதுக்கூட்டமொன்று  நாளை ஞாயிற்றுக்கிழமைன்று பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் ஒக்ரோபர் 26ம் நாள் சனிக்கிழமை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் தவணை அரசவைக்கான தேர்தல் புலம்பெயர் தேசங்களெங்கும் இடம்பெறவுள்ளன.
இதன் வரிசையில் பிரான்சில் நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பிலான நடைமுறை ஒழுங்குகள் தொடர்பில் இக்கூட்டம் இடம்பெறுகின்றது.
பிரான்சில் தமிழ் சமூகத்தின் மத்தியில் செயற்படுகின்ற தமிழர் அமைப்புக்கள், சமூக, அரசியல் ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் என அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
5 Place de le Maché, 93170 Montreuil / Metro : Croix des Chevaux - ligne : 9 எனும் முகவரியில் மாலை 4.00 மணிக்கு இக்கூட்டம் இடம்பெறுகின்றது.

ad

ad