புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 அக்., 2013

அரசாங்கத்திற்கும் கூட்டமைப்பிற்கும் இடையில் விசேட சந்திப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெறவுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 
காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடாத்தும் நோக்கில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அமர்வுகளில் பங்கேற்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
வட மாகாணசபைத் தேர்தலில் வெற்றியீட்டிய வேட்பாளர்கள் மற்றும் முதலமைச்சர் பதவிப் பிரமாண நிகழ்வின் பின்னர், அரசாங்கத்துடன் முக்கிய சந்திப்பு நடத்தப்பட உள்ளது.
பெரும்பாலும் எதிர்வரும் வார இறுதியில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.
இந்த சந்திப்பு மிகவும் தீர்மானமிக்கதாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது. 
அரசாங்கத்துடன் நடத்தும் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்பது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாக கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
எனினும் பேச்சுவார்த்தைகளின் போது தேசிய பாதுகாப்பு குறித்து இணக்கப்பாடுகள் எட்டப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது என அப்பத்திரிகையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, வடக்கிற்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டால், அது பொலிஸ் திணைக்களத்தை பிளவடையச் செய்யும் என பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்கக்கோன் தெரிவித்துள்ளார்.

ad

ad