புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 அக்., 2013

மு.க.அழகிரிக்கு எதிரான தேர்தல் வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு: ஐகோர்ட்டு உத்தரவு
கடந்த 2009ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில், மதுரை தொகுதியில் தி.மு.க. சார்பில் மு.க. அழகிரியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மோகன் மற்றும் பிற கட்சியை சேர்ந்த
வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள்.

இந்த தேர்தலில் மு.க.அழகிரி வெற்றிப் பெற்றார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் மோகன், தேர்தல் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், இந்த தேர்தலில் ஏராளமான முறைகேடுகள் நடந்தன. எனவே அழகிரி வெற்றிப்பெற்றதை செல்லாது என்று அறிவிக்கவேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி வி.தனபாலன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு தொடர்ந்த மோகன் இறந்துவிட்டார். இதையடுத்து தேர்தலின்போது, மதுரை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாற்று வேட்பாளர் இருந்த ஏ.லாசர், தேர்தல் வழக்கின் மனுதாரராக ஏற்றுக்கொள்ளப்பட்டார்.
வழக்கு விசாரணையின்போது, மு.க.அழகிரி நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை நீதிபதி வி.தனபாலன் முன்பு கடந்த சில நாட்களாக நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, ‘வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

ad

ad