புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 அக்., 2013

யாழ்.மாநகர சபையில் இடம்பெற்ற மோசடிகளுக்கு மேயர் யோகேஸ்வரிக்கும் தொடர்பு!– மனம்திறந்தார் விஜயகாந்த்
யாழ். மாநகர சபை மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா பலரிடம் பணத்தை ஏமாற்றிப் பெற்றுள்ளார். இடம்பெற்ற மோசடிகளில் அவருக்கும் தொடர்பு உண்டு என யாழ்.மாநகர சபையின் ஈ.பி.டி.பி உறுப்பினர் சுதர்சிங் விஜயகாந் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்.
யாழ்.மாநகர சபை மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தனது மகனை இந்தியாவில் கல்வி கற்க அனுப்புவதற்காக ஒன்றரைக் கோடி பணத்தை வசூலித்துள்ளார். அவர் இந்தியாவில் மருத்துவ துறையில் கற்று வருகின்றார்.
யாழ். மாநகர சபையில் தற்காலிகமாக பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவருக்கு நிரந்தர நியமனம் வாங்கித் தருவதாக கூறி குருநகரில் அமைந்துள்ள அவரது வீட்டை வாங்கியுள்ளார்.
மேலதிக பணத்தை வர்த்தகர் ஒருவரிடம் இருந்து பெற்றுள்ளார். ஆனால் அவருக்கும் இன்னமும் அந்தப் பணம் இன்னமும் திருப்பிச் செலுத்தப்படவில்லை.
யாழ்.மாநகரில் உள்ள அவரது வீட்டின் வாசல் கதவு ரிமோட் கொன்ட்ரோல் மூலம் திறந்து மூடக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
வீடு, ஜனாதிபதி, அமைச்சர்களின் வாசஸ்தலங்கள் போல பளிங்காக மினுங்குகின்றது. சாதாரண மாநகர மேயரான அவரால் இதெல்லாம் எவ்வாறு செய்ய முடிந்தது. யாழ்ப்பாணத்தில் இப்போதைய அவரின் சொத்து மதிப்பு பல கோடியாகும்.
யாழ்.மாநகர சபையில் இடம்பெற்ற மோசடிகளில் மாநகர சபை மேயருக்கும் தொடர்பு உள்ளது.
எனது திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்தவர் இந்த மேயர். அப்போது என்னைப் பற்றி இவருக்கு தெரியாதா? இப்போது என் மீது உள்ள காழ்ப்புணர்வின் காரணமாக தான் பொய்யான குற்றச்சாட்டுக்களைத் தெரிவித்து வருகின்றார்.
அன்றாடம் உழைத்து வாழும் தற்காலிகத் தொழிலாளியிடம் நான் 2, 3 லட்சங்கள் வாங்கியதாகக் கூறுகின்றார்.
இரண்டு மூன்று லட்சங்கள் இருந்தால் அவர்கள் ஏன்? கழிவகற்றல் தொழிலுக்கு வர வேண்டும் என்று அவர் மேலும் கேள்வியெழுப்பினார்.

ad

ad