புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 அக்., 2013

ஜனாதிபதியுடன் பேச்சு தொடரும் - சம்பந்தன் 
ஜனாதிபதிக்கும் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சு தொடரும். தமிழ் மக்களுக்குத் திருப்தியளிக்கக்கூடிய எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் முடிவுகளை நாம் எடுப்போம்.

 
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோண மலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
 
ஜனாதிபதியின் செயலாளரின் அழைப்பின் பேரிலேயே தான் நேற்று ஜனாதிபதியைச் சந்தித்து பல முக்கியவிடயங்கள் குறித்துப் பேசியுள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்குமிடையில் நேற்றுக் காலை 9 மணியளவில் அலரி மாளிகையில் சந்திப்பு நடை பெற்றது. இந்தச் சந்திப்புத் தொடர்பில் கருத்து வெளியிட்டபோதே சம்பந்தன் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: 
 
பல முக்கிய விடயங்களைப் பற்றி நான் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தியுள்ளேன். தொடர்ந்து பேசுவோம். இந்தப் பேச்சுகளூடாக எங்களுடைய தமிழ் மக்களுக்குத் திருப்தியளிக்கக் கூடிய முடிவுகளை நாம் எடுப்போம்.
 
நாங்கள் அந்தந்தக் காலத்திற்கு ஏற்ற வகையில் கருமங்களைக்கையாள வேண்டும். நாங்கள் இப்போது பேசுகின்றோம். இறுதியில் எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் முடிவுகள் நல்லவையாக அமையும் என்றார். 
 

ad

ad