புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 அக்., 2013

இலங்கையின் நீண்டகால நல்லிணக்கத்துக்கு ஐநா உதவும்!- சுபினாய் நன்டி
இலங்கையின் நீண்டகால நல்லிணக்கத்துக்கு உதவ தாம் எதிர்ப்பார்ப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது . ஐக்கிய நாடுகளின் கொழும்புக்கான வதிவிடப் பிரதிநிதி சுபினாய் நன்டி இந்த கருத்தை நேற்று மஹரகமவில் இடம்பெற்ற நிகழ்வின் போது வெளியிட்டுள்ளார்.
இலங்கைக்கு எதிரான தூக்கு மேடை நிர்மாணிக்கப்படும் சத்தம் கேட்கிறது: தயான் ஜயதிலக்க
நாட்டின் தலைவருக்கும், முப்படையினருக்கும், இறையாண்மைக்கும், சுயாதீனத்திற்கும் எதிராக தூக்கு மேடை நிர்மாணிக்கும் சத்தம் கேட்பதாக ராஜதந்திரியும் ஜெனிவாவுக்கான இலங்கையின் முன்னாள் நிரந்தர பிரதிநிதியுமான தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
கொள்ளுப்பிட்டியில் விபச்சார விடுதி சுற்றிவளைப்பு!- 7 பெண்கள் கைது
கொழும்பு கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் ஆயுர்வேத நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதியொன்றை சுற்றிவளைத்த மேல் மாகாண மோசடி தடுப்பு பிரிவு பொலிஸார் அங்கிருந்த 7 பெண்களை கைதுசெய்துள்ளனர்.
கொமன்வெல்த் மாநாடு! தமிழக சட்டப்பேரவை தீர்மானத்தை உதாசீனப்படுத்தக் கூடாது!- டி.ராஜா - சட்டசபை தீர்மானத்திற்கு ராமதாஸ் பாராட்டு தெரிவிப்பு
காமன்வெல்த் நாடுகள் கூட்டத்தில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசு உதாசீனப்படுத்தக் கூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது. 
பொலிஸ் அதிகாரத்தை வழங்குங்கள்! முதலமைச்சர் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவார்!- தமிழ் தேசிய கூட்டமைப்பு
பொலிஸ் அதி­கா­ரத்தை தம்வசம் வைத்துக் கொண்டு வடக்கில் சட்டம் ஒழுங்கை நிலை­நாட்­ட­ வேண்­டி­யது முத­ல­மைச்சர் விக்­கினேஸ்­வ­ரனின் கட­மை­யாகும் எனக் கூறு­வது எவ்­வி­தத்தில் நியா­ய­மாகும். எனவே பொலிஸ் அதி­கா­ரத்தை எழுத்து மூலம் முத­ல­மைச்­ச­ருக்கு வழங்க வேண்­டு­ம் என்று தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தெரிவித்துள்ளது.
நாவற்குழி காணிப்பிரச்சினை தொடர்பில் நீதிமன்றத்தை நாடப்போவதாக வடக்கு முதலமைச்சர் அறிவிப்பு! அரசாங்கக் காணிகளை வழங்குவது தொடர்பில் புதிய நடைமுறை அறிமுகம்
யாழ்ப்பாணம் நாவற்குழியில் இராணுவம் சிங்களவர்களுக்கு காணிகளை பகிரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக வடக்கு முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 
பிபிசி நிருபர் யாழ் சென்று எடுத்த அடுத்த ஆவணப்படம் நேற்று மாலை வெளியாகியது!

போர் முடிவடைந்துவிட்டது. சமாதானம் வந்துவிட்டதாக இலங்கை அரசு கூறியுள்ளது. ஆனால் அங்கே உண்மையாக நடப்பது என்ன ?
இலங்கையின் இறுதிப் போரில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்து ஒரு சர்வதேச

எழிலன் பற்றிய வழக்கு முல்லைத்தீவு நீதிமன்றத்தில் நடக்கும்

விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் இராணுவத்திடம் சரணடைந்த பின், அவர் பற்றிய தகவல்கள் இல்லை என்று அவரது மனைவி முறையிட்டுள்ளார்

24 அக்., 2013



சட்டசபைத் தீர்மானம் மனநிறைவைத் தரவில்லை;
ஏமாற்றம் அளிக்கிறது - கவலை தருகிறது : வைகோ விரக்தி
 

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், 

ஜெ., கொண்டு வந்த தீர்மானம் :
இலங்கை தூதர் எச்சரிக்கை

இலங்கையில் உள்ள தமிழர்கள் சுதந்திரமாக வாழ அரசு நடவடிக்கை எடுக்கும் வரை அந்த நாட்டை காமன்வெல்த் அமைப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது: தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
 
இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்பதை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் 24.10.2013 வியாழக்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ராணுவ மேலாதிக்கத்தில் துப்பாக்கி முனைகளின் கீழ் நடத்தப்படுவது பாலியல் வல்லுறவேயன்றி பாலியல் தொழில்ல

அனந்தி சசிதரன் (எழிலன்)
ராணுவ மேலாதிக்கத்தில் துப்பாக்கி முனைகளின் கீழ் நடத்தப்படுவது பாலியல் வல்லுறவேயன்றி  பாலியல் தொழில்ல
முள்ளிவாய்க்கால் பேரவலத்தினிலிருந்து ஒருவாறு மீண்டெழுந்து கொண்டிருக்கும், வட-கிழக்கு பெண் சமூகத்தினை மீண்டும் மீண்டும் சகதிக்குள் இழுத்து வீழத்த கொழும்பு ஆட்சியாளர்களும்,
இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கையில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டினை இந்தியா முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் முதல்வர் ஜெயலலிதா இன்று தீர்மானத்தை முன்மொழிந்து பேசுகையில்

23 அக்., 2013

சுவிட்சர்லாந்து நலிவடைந்தோர் உதவிச் சங்கத்தின் ஆண்டுவிழா

தமிழர் தாயகத்தில் வாழும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துயர்துடைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் சுவிட்சர்லாந்து நலிவடைந்தோர் உதவிச் சங்கத்தின் முதலாவது ஆண்டுவிழா அண்மையில் பேர்ண்- ஒஸ்ரர்முண்டிகன் நகரில் நடைபெற்றது.
சங்கத்தின் தலைவர் க.மகாலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வினை பேர்ண் ஞானலி
ஏற்காடு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பி.சரோஜா பற்றிய விபரங்கள் 
    சேலம் மாவட்டம் ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் சரோஜா. இவருக்கு வயது 55. காலம் சென்ற ஏற்காடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பெருமாளின் மனைவியாவார்.
இதே தொகுதிக்கு உட்பட்ட புளுதிக்குட்டை என்ற ஊரை சேர்ந்த
30 வருடமாக சம்பாதித்த நற்பெயரெல்லாம் ஜெயலலிதா வழக்கு விசாரணையினால் பறி போனது: நீதிபதி பாலகிருஷ்ணா
தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நான்கு பேர் மீதான சொத்து குவிப்பு வழக்கு, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 
கொமன்வெல்த் மாநாடு ஏன் இலங்கையில் நடாத்த வேண்டும்? - சனல் 4
இலங்கையில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய மாநாட்டுக்கு இன்னமும் ஒரு மாதத்திற்கு குறைவான நாட்களே இருக்கும் இந்நிலையில், அம்மாநாட்டை ஏன் இலங்கையில் நடாத்தவேண்டும் என சனல் 4 கேள்வி எழுப்பியுள்ளது.
இலங்கைக்கு இந்திய பிரதமர் செல்லக்கூடாது! மன்னிப்பு சபையின் பிரசாரத்துக்கு இந்தியாவில் 35 ஆயிரம் பேர் ஆதரவு
இந்திய பிரதமர் மன்மோகன்சிங் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்று கோரி சர்வதேச மன்னிப்பு சபை இந்தியாவி;ல் மேற்கொண்ட பிரசாரத்துக்கு இதுவரை 35 ஆயிரம் பொதுமக்கள் ஆதரவை வெளியிட்டுள்ளனர்.
தமிழக சட்டசபையில் கொமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க கோரி தீர்மானம்
தமிழக சட்டசபையின் மழைக்கால கூட்டத் தொடர் நாளை ஆரம்பிக்கவுள்ள நிலையில், இக்கூட்டத் தொடரில் கொமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் புறக்கணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படக் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு - கட்டுநாயக்க அதிவேகப் பாதை பொது மக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது!
கொழும்பு - கட்டுநாயக்க அதிவேகப் பாதை இன்று செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் பார்வையிடுவதற்காக திறந்து வைக்கப்பட்டது.

ad

ad