புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 அக்., 2013

ஏற்காடு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பி.சரோஜா பற்றிய விபரங்கள் 
    சேலம் மாவட்டம் ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் சரோஜா. இவருக்கு வயது 55. காலம் சென்ற ஏற்காடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பெருமாளின் மனைவியாவார்.
இதே தொகுதிக்கு உட்பட்ட புளுதிக்குட்டை என்ற ஊரை சேர்ந்த
வரதப்பகவுண்டர் என்பவரின் மகளான சரோஜா எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்துள்ளார். அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்த இவருக்கு, கடந்த 1975-ம் ஆண்டு, பாப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த பெருமாள் அவர்களை திருமணம் செய்தவுடன் தன்னுடைய அங்கன்வாடி ஆசிரியை வேலையை விட்டுவிட்டார்.

திருமணத்திற்கு பிறகு, 1980 முதல் அதிமுக உறுப்பினராக மட்டுமே உள்ளார் சரோஜா. 1992-1996, காலத்தில் பாப்பநாயக்கன் பட்டி மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் தலைவராக இருந்துள்ளார்.
பெருமாள் - சரோஜா தம்பதியினருக்கு, ராஜேஷ்கண்ணா, சுரேஷ்கண்ணா, சதீஷ், கார்த்தி என நான்கு மகன்கள் உள்ளனர். இதில், ராஜேஷ்கண்ணா சேலம் புறநகர் மாவட்ட ஜெ.பேரவை துணை செயலாளராகவும், கருமந்துறை மலைவாழ் மக்கள் பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவராகவும் உள்ளார்.
இரண்டாவது மகன் ராஜேஷ்கண்ணா பாப்பநாயக்கன்பட்டியில் உள்ள நிலத்தில் விவசாயம் செய்துவருகிறார், மூன்றாவது மகன் சதீஸ் தருமபுரி உதவி மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலராக உள்ளார். கடைசி மகனான கார்த்தி தற்சமயம் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். மூன்று முறை அதிமுக எம்.எல்.ஏ.,வாக இருந்து தொகுதிக்கு ஓரளவு மக்களிடம் அறிமுகமான பெருமாளின் மனைவியான சரோஜாவுக்கு மீண்டும் அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கொடுத்திருப்பத்தின் மூலம் அந்த தொகுதியில் உள்ள மக்களின் அனுதாபத்தை சரோஜா பெறுவார் என்று கருதபப்டுகிறது.

ad

ad