புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 அக்., 2013

கொமன்வெல்த் மாநாடு! தமிழக சட்டப்பேரவை தீர்மானத்தை உதாசீனப்படுத்தக் கூடாது!- டி.ராஜா - சட்டசபை தீர்மானத்திற்கு ராமதாஸ் பாராட்டு தெரிவிப்பு
காமன்வெல்த் நாடுகள் கூட்டத்தில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசு உதாசீனப்படுத்தக் கூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது. 
இது தொடர்பாக அக் கட்சியின் தேசிய செயலர் டி. ராஜா டில்லியில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
சட்டப்பேரவைத் தீர்மானத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முழுமனதாக ஆதரிக்கிறது. அதற்கு முயற்சி எடுத்த முதல்வர் ஜெயலலிதா பாராட்டுக்குரியவர்.
தமிழக மீனவர் பிரச்சினை, இலங்கைத் தமிழர் விவகாரம், அந் நாட்டில் நடைபெற்ற போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், கொடுமைகள் ஆகியவை குறித்து தொடர்ந்து பிரதமருக்கு கடிதங்களை எழுதினார்.
ஆனால், எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்காத நிலையில், ஒட்டுமொத்த தமிழக சட்டப்பேரவையும் தமிழர்களின் உணர்வுகளைப் பிரதிபலித்து தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
அதை எந்த வகையிலும் மத்திய அரசு உதாசீனப்படுத்தக் கூடாது. கொமன்வெல்த் தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் பங்கேற்காமல் போனால், அந்த அமைப்பில் இருந்து இந்தியா தனிமைப்படுத்தப்படும் என சிலர் கூறுகின்றனர்.
ஆனால், எந்த சக்தியாலும் இந்தியாவை தனிமைப்படுத்த முடியாது என்றார் டி. ராஜா.
கொமன்வெல்த் மாநாடு குறித்த சட்டமன்ற தீர்மானம் வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் அறிக்கை
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் கொமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் மாநாட்டை இந்தியா முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும், இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை வழங்கப்படும் வரை கொமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை தற்காலிகமாக நீக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்தத் தீர்மானத்தை பாட்டாளி மக்கள் கட்சி வரவேற்கிறது.
கொமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கை அமைப்பு நீக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். மனித உரிமைகள், சர்வதேச மனித உரிமைச்சட்டங்கள் உள்ளிட்ட எதையும் மதிக்காமல் இலங்கை அரசு செயல்பட்டு வருகிறது.
ஈழத்தமிழர்களின் நலனுக்காக கடந்த ஆட்சியில் பல தீர்மானங்கள் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டன. ஆனால் அவற்றின் மீது மத்திய அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அதன்பின் அ.தி.மு.க. அரசு பதவியேற்ற பின், இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்; இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளை ஒருங்கிணைத்து தனித்தமிழீழம் அமைக்க ஐ.நா. மூலம் பொதுவாக்கெடுப்பு நடத்துவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் இரு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால், அவற்றின் மீது மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இம்முறையும் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியதுடன் தமிழக அரசு நின்றுவிடக்கூடாது. நான் ஏற்கனவே அறிவுறுத்தியதைப்போல, தமிழகத்தின் அனைத்துக் கட்சித்தலைவர்கள் அடங்கிய குழுவுடன் முதல்-அமைச்சர் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து, தீர்மானத்தில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்த வேண்டும். அப்போது தான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு ஓரளவாவது பயன் கிடைக்கும்.
இவ்வாறு அறிக்கையில் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

ad

ad