அமெரிக்காவினதும், மேற்குலக நாடுகளினதும் எதிர்ப்புக்களையும் மீறி ஈரானில் நடைபெற்ற அணிசேரா நாடுகளின் மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டு நாடு திரும்பியுள்ளார் மகிந்த ராஜபக்ச. இந்தப் பயணத்தின் போது அதே எதிர்ப்புக்களை மீறி அங்கு வருகைதரும் ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூன் மற்றும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சந்தித்துப்பேச மகிந்த முடிவு செய்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் பரவலாக செய்திகளை வெளியிட்டிருந்தன.
-
9 செப்., 2012
திருகோணமலையில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு முன்னணி |
திருகோணமலை மாவட்டத்தில் முதற்கொண்டு கிடைத்த தேர்தல் பெறுபேறுகளின் அடிப்படையில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு முன்னிலை. திருகோணமலை தேர்தல் தொகுதி த.தே.கூ -28070 மு.கா - 8633 ஐ.தே.க - 2980 ஐ.ம.சு.கூ - 7923 |
கிழக்கில் தபால் மூல வாக்குகளின் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னணியில் |
நடந்துமுடிந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால் மூல வாக்குகளின் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னணியில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் தபால் மூல வாக்குகளின் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 3240 வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு 1448, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 463 வாக்குகளையும், சுயேட்சைக்குழு 08 – 170 வாக்குகளையும் பெற்றுள்ளது. |
கிழக்கில் தபால் மூல வாக்குகளின் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னணியில்! - பொலனறுவைய. இரத்தினபுரி மாவட்ட ஐ.ம.சு.கூ. முன்னணியில்!
நடந்துமுடிந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால் மூல வாக்குகளின் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னணியில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மட்டக்களப்பு மாவட்டத்தின் தபால் மூல வாக்குகளின் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது
8 செப்., 2012
மட்டக்களப்பு தபால் மூல வாக்களிப்பில் தமிழரசுக்கட்சி வெற்றி
மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால் மூலம் அளிக்கப்பட்ட வாக்குகளில் தமிழரசுக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் கல்லூரி, மெதடிஸ்த மத்தியகல்லூரி ஆகியவற்றில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதில் தபால் மூலம் அளிக்கப்பட்ட வாக்குகள் தற்போது எண்ணி முடிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் திணைக்களம் இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடாத போதிலும் வாக்கு எண்ணும் நிலையத்திலிருந்து உத்தியோகபூர்வமற்ற வகையில் எமக்கு கிடைத்த முடிவுகள் இலங்கை தமிழரசுக் கட்சி 3,219
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 1,428
முஸ்லிம் காங்கிரஸ் 454
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் 170
ஐக்கிய தேசியக் கட்சி 63
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)