புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஜூலை, 2022

குருந்தூர் மலை சட்டவிரோத ஆக்கிரமிப்பு! விகாரை உள்ளிட்ட அனைத்து கட்டுமானங்களையும் உடன் அகற்றுக - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

www.pungudutivuswiss.com

உள்ளிட்ட அனைத்து கட்டுமானங்களையும் அகற்றுமாறு முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது.

 முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலை ஆதி சிவன் அய்யனார் ஆலய வளாகத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரை உள்ளிட்ட அனைத்து கட்டுமானங்களையும் அகற்றுமாறு குறித்த கட்டுமானங்களை அகற்றி நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும், குறித்த பகுதியில் ஆதி சிவன் அய்யனார் ஆலயத்தினர் தங்களுடைய வழிபாடுகளை மேற்கொள்வதற்கு எந்த விதத்திலும் தடை விதிக்க கூடாது எனவும் இந்த இடத்தில் அமைதியின்மை ஏற்படாத வகையில் காவல்தறையினர் உரிய பாதுகாப்பினை வழங்க வேண்டும் எனவும் முல்லைதீவு நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.


குருந்தூர்மலை தொடர்பான AR 673/18 என்ற குறித்த வழக்கு இன்று நீதிமன்றில் முல்லைதீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர் மற்றும், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனும், இவர்கள் சார்பில் சட்டத்தரணி வி. எஸ். எஸ். தனஞ்சயன் மற்றும் சட்டத்தரணி கெங்காதரனும் முன்னிலையாகியதோடு, எதிர்தரப்பிலே காவல்துறையினர் மன்றில் முன்னிலையாகினர்.

இதன்போது முல்லைதீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா வழக்கினுடைய தீர்ப்பை இன்றைய தினம் வழங்கினார்.

மன்றில் முன்னிலையாகிய சட்டத்தரணி வெளியிட்ட தகவல் 

குருந்தூர் மலை சட்டவிரோத ஆக்கிரமிப்பு! விகாரை உள்ளிட்ட அனைத்து கட்டுமானங்களையும் உடன் அகற்றுக - நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Illegal Occupation Of Kurundur Malai Court Order

குறித்த கட்டளை தொடர்பில் இன்று நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் மன்றில் முன்னிலையாகிய சட்டத்தரணி வி. எஸ். எஸ். தனஞ்சயன் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

இன்றைய தினம் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்திலேயே AR 673/18 என்ற குருந்தூர் மலை தொடர்பான வழக்குக்கான தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த வழக்கினுடைய தீர்ப்பானது முல்லைதீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி. சரவணராஜாவால் வழங்கப்பட்டுள்ளது.

விகாரை, சிலைகள் மற்றும் சுருவங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டுமானங்களும் அகற்றப்பட வேண்டும் 

குருந்தூர் மலை சட்டவிரோத ஆக்கிரமிப்பு! விகாரை உள்ளிட்ட அனைத்து கட்டுமானங்களையும் உடன் அகற்றுக - நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Illegal Occupation Of Kurundur Malai Court Order

இந்த தீர்ப்பிலே இரு தரப்பு வாதங்களையும் உய்த்தறிந்த நீதிபதி, புதிதாக குருந்தூர் மலை பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருக்கின்ற விகாரை, சிலைகள் மற்றும் சுருவங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டுமானங்களும் அகற்றப்பட வேண்டும் என கட்டளை ஆக்கி இருக்கின்றார்.

மேலும் புதிதாக அமைக்கப்பட்ட கட்டிடங்களை அகற்றியதன் பின்னர் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென முல்லைத்தீவு காவல்துறையினருக்கு நீதிமன்றம் கட்டளை வழங்கியிருக்கின்றது.

மேலும் குறித்த பகுதியானது தொல்லியல் திணைக்களத்தின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக காணப்படுவதால் அந்த பிரதேசம் தொடர்பான விடயங்களை ஆய்வு செய்து அது தொடர்பாக அறிக்கையிடுமாறு தொல்லியல் திணைக்களத்துக்கு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது.

மேலும் இந்தக் கட்டளையிலே பாரம்பரியமாக முல்லைத்தீவு குருந்தூர் மலையிலே ஆதி சிவன் அய்யனார் ஆலயத்தினர் தாம் செய்து வருகின்ற பூசை வழிபாடு நிகழ்வுகளை எந்த விதத்திலும் யாரும் தடுக்கக்கூடாது என்ற கட்டளையும், தொடர்ந்து அந்த இடத்திலேயே சமாதான குலைவு ஏற்படாத வகையிலே காவல்துறையினர் தமது பாதுகாப்பை வழங்க வேண்டும் எனவும் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் கட்டளை வழங்கி இருக்கிறது எனத் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டத்தால் கைவிடப்பட்ட பெரும் முயற்சி

குருந்தூர் மலை சட்டவிரோத ஆக்கிரமிப்பு! விகாரை உள்ளிட்ட அனைத்து கட்டுமானங்களையும் உடன் அகற்றுக - நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Illegal Occupation Of Kurundur Malai Court Order

தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில் கடந்த 12.06.2022 (ஞாயிறு) அன்று, 'கபோக்' கல்லினாலான புத்தர் சிலை ஒன்றினை அமைப்பதற்கும், அங்கு நீதிமன்ற கட்டளையை மீறி அமைக்கப்பட்ட விகாரையில் விசேட பௌத்த வழிபாடுகளை மேற்கொள்வதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டதைத் தொடர்ந்து அந்த முயற்சிகள் கைவிடப்பட்டிருந்தன.

இந் நிலையில் குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர் மற்றும், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோர், 16.06.2022 அன்றைய தினம் குருந்தூர்மலை தொடர்பில் ஏற்கனவே முல்லைத்தீவு நீதவான் நீதி மன்றில் தொடரப்பட்ட வழக்கினை நகர்த்தல் பத்திரம் அணைத்து, ஏற்கனவே நீதிமன்றம் வழங்கிய கட்டளையினை மதிக்காமல் அவமதிப்புச் செய்து, அங்கு அமைக்கப்பட்ட விகாரை தொடர்பிலும், காவல்துறையினர் தொடர்ச்சியாக இந்த வழக்கிலே நீதிமன்றிற்கு வழங்கவேண்டிய அறிக்கைகளை வழங்காது, சட்டத்தை மீறிச் செயற்படுபவர்களுக்கு சார்பாகச் செயற்பட்டதையும் முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் சட்டத்தரணிகள் அனைவரும் இணைந்து மன்றில் நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

வழக்கு விசாரணைகள்

குருந்தூர் மலை சட்டவிரோத ஆக்கிரமிப்பு! விகாரை உள்ளிட்ட அனைத்து கட்டுமானங்களையும் உடன் அகற்றுக - நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Illegal Occupation Of Kurundur Malai Court Order

அந்த வகையில் குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகம் மற்றும், காவல்துறையினர் ஆகியோரால் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆழ்ந்து அவதானித்த நீதவான், வழக்குத் தொடுனரான காவல்துறையினர், குருந்தூர் மலையில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் விளக்கமளிப்பதற்காக 23.06.2022 திகதியிட்டிருந்தார்.

குருந்தூர்மலை தொடர்பான AR 673/18 என்ற குறித்த வழக்கு, மீண்டும் 23.06.2022 அன்று இடம் பெற்றபோது காவல்துறையினர் இது தொடர்பான பூரணமான விளக்கத்தை அளிப்பதற்கு முடியாத சூழல்நிலையில் இருப்பதாகவும் மேலதிகமாக தமக்கு விளக்கமளிப்பதற்கும் காலம் தேவை எனவும் கோரியிருந்தனர். இதனடிப்படையில் வழக்கு விசாணைகள் 30.06.2022 தினத்துக்கு தவணையிடப்பட்டிருந்தது.

பின்னர் 30.06.2022 அன்று முல்லைத்தீவு நீதவான் நீதி மன்றில் முல்லைத்தீவு நீதவான் நீதி மன்ற நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர் சார்பில் சிரேஸ்ர சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம், முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் சட்டத்தரணிகள் கெங்காதரன், பரஞ்சோதி, தனஞ்சயன் உள்ளிட்ட பலர் முன்னிலையாகியிருந்தனர்.

இதேவேளை காவல்துறை தரப்பில் விளக்கமளிப்பதற்காக முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பொறுப்பான உதவி காவல்துறை அத்தியட்சகர் லசந்த விதானகே, முல்லைத்தீவு மாவட்ட தலைமை காவல்துறை பரிசோதகர் அமரசிங்க உள்ளிட்டவர்கள் மன்றில் சமூகமாகி விளக்கமளித்தனர்.

இரண்டு தரப்பு வாதங்கள் சமர்ப்பணங்களை அவதானித்த நீதவான், கட்டளைக்காக இந்த வழக்கினை 14-07-2022 இன்றைய தினத்துக்கு திகதியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

ad

ad