புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜூலை, 2022

அம்பூலன்ஸ் வண்டியில் தப்பித்த கோட்டபாய: மெதமுலானையில் கோட்டபாய பதுங்கி உள்ளார்

www.pungudutivuswiss.com
கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில், 3 அடுக்கு பாதுகாப்பை தகர்த்து மக்கள் உள்ளே நுளைந்த வேளை.அங்கிருந்து வேகமாக புறப்பட்ட ஒரு அம்பூலன்ஸ் வாகனம் தொடர்பாக பலர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்கள். அதில் கோட்டபாய தப்பிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. சுமார் 3 லட்சம் மக்கள் திரண்டு கொழும்பில் பெரும் ஆர்பாட்டத்தில் ஈடு பட்டு வரும் நிலையில். ஜனாதிபதி மாளிகை மக்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ள அதேவேளை. பிரதமர் ரணிலின் இடமான அலரி மாளிகையும் சற்று முன்னர் மக்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது மெதமுலானையில் கோட்டபாய பதுங்கி உள்ளார். அங்கே ராஜபக்ஷர்கள் அனைவரும், ஊர் மக்களின் பாதுகாப்போடு தங்கி உள்ளதாக அறிகிறது. குறித்த கிராமத்தில் உள்ள சிங்கள மக்கள் சில நூறு பேர் மகிந்தவுக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாத்து வருகிறார்கள். இன் நிலையில் ராஜபக்ஷர்கள் வீட்டுப் பெண்கள் மற்றும் சிறுவர்களை ஏற்றிக் கொண்டு, ஒரு படகு இலங்கையில் இருந்து மாலை தீவு நோக்கி புறப்பட்டுள்ளது. இதில் யார் யார் தப்பிச் சென்றார்கள் என்பது தெரியவில்லை. இது இவ்வாறு இருக்க…

ரணில் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் சர்வ கட்சி தலைவர்கள் அவசரமாக கூடி சற்று முன்னர் ஒரு முடிவை எட்டியுள்ளார்கள். அதாவது கோட்டபாயவை ராஜினாமா செய்ய வைப்பது என்பது தான் அது. மேலும் இலங்கை ஜனாதிபதியாக ஒருவரை நியமிக்க பாராளுமன்றம் முடிவை எட்டியுள்ளது. அது சபாநாயகராக இருக்க வாய்ப்புகள் உள்ளது. வேடிக்கை பார்த்த ஆர்மியும் பொலிசாரும்….


மக்கள் அலை கடல் என திரண்டு வந்து, ஜனாதிபதி மாளிகையை நெருங்கிய வேளை ஏதோ தடுப்பது போல பொலிசும் ராணுவமும் நாடகம் ஆடியதே தவிர. அவர்கள் மக்களை சரியான முறையில் தடுக்கவே இல்லை. வானத்தை நோக்கியே சுட்டார்கள். அதுவும் பிளாஸ்டிக் குண்டுகளை பாவித்து தான். இந்த பிளாஸ்டிக் குண்டடிபட்ட 46 பேர் வைத்தியசாலையில் உள்ளார்கள். அதுவே உண்மை நிலை. இம்முறை மக்களை கட்டுப்படுத்த , பொலிசாரும் சரி ராணுவமும் சரி முனையவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

ad

ad