அமெரிக்காவில் மற்றொரு துப்பாக்கி சூடு: அதிர்ச்சியில் உறைந்துள்ள மக்கள்
அமெரிக்காவில் 20 குழந்தைகள் சுட்டுக் கொல்லப்பட்ட அதிர்ச்சியிலிருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில், மற்றொரு துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.அமெரிக்காவின் கனெக்டிக்ட் மாகாணத்தில் தொடக்க பள்ளிக்குள் நுழைந்த ஆடம் லான்சா என்பவர், 20 குழந்தைகள் உட்பட 28 பேரை சுட்டுக் கொன்றார்.இதனால் துப்பாக்கி சட்டத்தை கடுமையாக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள கீசிவுடன் பகுதியில் நேற்று மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர், இதில் 4 பேர் கொல்லப்பட்டனர்.இந்த துப்பாக்கி சூட்டை தடுக்க வந்த பொலிசாரும் சுடப்பட்டனர். இவ்வாறு அடுத்தடுத்த துப்பாக்கி சூடு சம்பவங்கள் நிகழ்வதால், எப்போது என்ன நடக்கும் என்ற அதிர்ச்சியில் மக்கள் உறைந்துள்னர்.