புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 டிச., 2012


கிளிநொச்சி இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறப்பு

இது தொடர்பில் குளத்தின் நீர்பாசனப் பொறியியலாளர் தகவல் தருகையில்,கிளிநொச்சி இரணைமடுக் குளத்துக்கான நீர் வரத்து அதிகரித்திருப்பதால் அதன் வான்கதவுகள் இன்று ஒருமணிக்கு திறக்கப்படவுள்ளன.

குளத்தின் நீர்மட்டம் தற்போது 30 அடி ஆக உள்ளது. கனகராயன் ஆற்றிலிருந்து நீர்வரத்து அதிகரித்திருப்பதால் வான்கதவுகளை அவசரமாகத் திறக்குவேண்டியுள்ளது.
இதன் படி பிற்பகல் ஒரு மணிக்கு 6 கதவுகளை 3இஞ்சி அளவில் திறப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். குளத்தின் அணைக்கட்டு பலமாக இல்லாததால் 30 அடிக்கு மேல் நீர்மட்டத்தைப்பேண முடியாது என்றும் இரணைமடு குளத்தின் நீர்பாசன பொறியியலானர் எஸ்.விகிர்தன் தெரிவித்தார்.
இதனால் குளத்தின் கீழ் உள்ள முரசுமோட்டை, ஊரியான்,மருதநகர், நாகேந்திரபுரம் ,பரந்தன், சிவபுரம்,உடுப்பாற்றுகண்டல், புதுக்குளம்,ஐயன்கோயிலடி, தட்டுவன்கொட்டி,கோரக்கன்கட்டு,பன்னங்கண்டி போன்ற இடங்களில் உள்ள மக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி கிளிநொச்சி மாவட்டச் செயலக அனர்த்த முகாமைத்துவப் பிரிவு கேட்டுள்ளது.
இந்தப் பகுதிகளில் 2200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. இவர்களுக்கு வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டால் உதவுவதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் அந்த பிரிவு அறிவித்துள்ளது.
இதேவேளை இராணுவத்தினரின் உதவியுடன் குறித்த பகுதி மக்களை எச்சரிக்கையாக இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

ad

ad