புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 டிச., 2012


2016 தேர்தலில் போட்டி – நாம் தமிழர் கட்சி தீர்மானம்


 சென்னை: வரும் 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதென சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் நடந்த கட்சியின் முதல்
பொதுக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள்: தீர்மானம் 1 தமிழ் இனத்தின் மேம்பாட்டிற்காகவும், தமிழ் மொழியைக் காக்கவும் தங்கள் வாழ்நாள் நெடிகிலும் இடைவிடாது போராடி மறைந்த எனது இனத்தின் பெருமைக்குரிய முன்னோடிகளான பெருந்தமிழர் இறைக்குருவனார், மருத்துவப் பெருந்தகை, கொடையாளர் அய்யா தெய்வநாயகம், பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் துணைவியார் அம்மா தாமரை ஆகியோருக்கும்; நமது தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களால் சர்வதேசப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு, சீரிய வகையில் செயல்பட்டு இனத்தின் விடுதலையை இராஜதந்திர வழிகளில் முன்னெடுத்து சிறப்பாக செயலாற்றி வந்த நிலையில், இன எதிரிகளின் சதியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட பரிதி என்கிற மதீந்திரன் அவர்களுக்கும் நாம் தமிழர் கட்சி வீர வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறது. தீர்மானம் 2 தமிழினத்தின் விடுதலைக்காக போராடிய, இன விடுதலைப் போருக்குத் துணை நின்றவர்கள், பொதுமக்கள் என்று பல்லாயிரக்கணக்கானோர் சிங்கள பெளத்த இனவெறி அரசின் இன அழித்தலில் இருந்து தங்களைக் காத்துக்கொள்ள நமது தாய்த் தமிழ் மண்ணிற்கு ஏதிலிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களில் பலரை ஐயத்தின் பேரிலும், சிங்கள இனவெறி அரசின் உளவுத் துறை பரிந்துரையின் பேரிலும் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி தமிழக காவல்துறையின் க்யூ பிரிவினர் கைது செய்து சிகப்பு முகாம்கள் என்ற பெயரில் இருந்துவரும் தனிமைச் சிறைகளில் அடைத்து வதைத்து வருகின்றது. சமீபத்தில் சென்னை, பல்லாவரத்தையடுத்த பொழிச்சலூரில் காவல் நிலையத்தில் பதிவு செய்துவிட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளியில் வாழ்ந்து வரும் 4 பேரை க்யூ பிரிவு காவல் அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சட்டப்படி அவர்களுக்கு எதிராக எந்த குற்றச்சாற்றும் கூற முடியாத நிலையில், அவர்கள் வெடிகுண்டு தயாரிப்பதில் பயிற்சி எடுத்து வந்தார்கள் என்று ஒரு காரணத்தைக் கூறி, சுரேஷ் குமார், மகேஸ்வரன், உதயதாஸ், கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளது. க்யூ பிரிவு காவல் துறையின் இப்படிப்பட்ட நடவடிக்கைகளை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. தீர்மானம் 3 சமூக நல்லிணக்கம் தழைத்துவரும் தமிழ்நாட்டில் சமீக காலமாக நடந்துவரும் சாதிய மோதல்களும், தாக்குதல்களும் அதிகரித்துவருவது கவலையளிக்கிறது. தமிழர்களிடையே நிலவிவரும் சகோதர மனப்பாங்கை சிதைக்கும் இப்படிப்பட்ட நிகழ்வுகளின் பின்னணியில் சாதிய அடிப்படையில் அரசியல் செய்துவரும் சக்திகள் உள்ளன என்பதை தெளிவாக வெளிப்பட்டுள்ளது. இப்படி தமிழினத்திற்குள் சாதி அடிப்படையிலான மோதலையும், தாக்குதல்களையும் திட்டமிட்டு உருவாக்கி, சமூக அமைதியையும், நல்லிணக்கத்தையும் சிதைத்துவரும் அரசியல், சமூக அமைப்புகளையும், அதில் நேரடியாக ஈடுபட்ட நபர்களையும் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று தமிழக அரசை நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது. சாதிய வெறியையும், வெறுப்புணர்ச்சியையும் தூண்டிவிடும் சக்திகளை வேகமாக விசாரணை செய்து தண்டிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைத்திட வேண்டும் என்று தமிழக அரசை நாம் தமிழர் கட்சி மீண்டும் வலியுறுத்துகிறது. தீர்மானம் 4 தமிழினத்தின் விடுதலைக்காகவும், தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்கவும் தமிழினத்தோரை ஒன்றிணைத்து போராடி வரும் ஜனநாயக இயக்கமான நாம் தமிழர் கட்சி, வரும் 2016ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் களமிறங்குவது என்று இந்த முதல் பொதுக் குழுக் கூட்டம் தீர்மானிக்கிறது.

ad

ad