புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 டிச., 2012

ஆசிய சாம்பியன் ஹாக்கியில் இந்தியாவுக்கு 2-வது வெற்றி: ஜப்பானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது
கத்தார் தலைநகர் டோகாவில் ஆசிய சாம்பியன் கோப்பை ஹாக்கி போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான் மலேசியா, ஓமன் ஆகிய 6 நாடுகள் பங்கேற்றுள்ளன. நடப்பு சாம்பியனான இந்திய அணி தனது
முதல் லீக் ஆட்டத்தில் சீனாவை 4-0 என்ற கோல்கணக்கில் வென்றது. 

இந்நிலையில் 2-வது ஆட்டத்தில் இந்திய அணி இன்று ஜப்பானுடன் மோதியது. பரபரப்பாக நடந்த இப்போட்டியின் 22-வது நிமிடத்தில் துணை கேப்டன் ரகுநாத் கோல் அடித்து கணக்கை துவக்கினார். இதையடுத்து முனைப்புடன் முன்னேறிய ஜப்பான் வீரர்கள் முதல் பாதியில் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனால் 1-0 என இந்தியா முன்னிலையில் இருந்தது. 

2-வது பாதியில் கோல் அடிக்கும் முயற்சியில் ஜப்பான் வீரர்கள் உத்வேகத்துடன் முன்னேறினர். இந்திய வீரர்களும் கடுமையாக போராடினர். இந்நிலையில், 50-வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் கோஜி கயுகாபா கோல் அடித்து சமன் செய்தார். அடுத்த நிமிடத்தில் குர்விந்தர் சாண்டி, அபாரமாக கோல் அடித்து மீண்டும் இந்தியாவை முன்னிலை (2-1) பெறச் செய்தார். 

கடைசி 10 நிமிடங்களில் மட்டும் இந்தியாவுக்கு 3 பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. கடைசியாக 59-வது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பை ரகுநாத் கோலாக மாற்றினார். இதனால் இறுதியில் 3-1 என்ற கோல்கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. 

இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்றின் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

ad

ad