புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஆக., 2020

தேசியப் பட்டியல் உறுப்பினராக கலையரசன் வர்த்தமானி மூலம் அறிவிப்பு

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த தவராசா கலையரசன், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ஞானசாரரின் கதிரையினை காணோம்?

Jaffna Editor
எங்கள் மக்கள் சக்தி கட்சியின் பொது செயலாளர் வெதனியகம விமலதிஸ்ஸ தேரர் காணாமல் போனதாக கூறப்படும் நிலையில் ஞானசார தேரரின் தேசிய பட்டியலை உறுதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சிறையிலிருந்து நேரே அமைச்சராகிறார் கொலையாளி பிள்ளையான்?

Jaffna Editor
இலங்கையின் புதிய அமைச்சரவையில் சிறையிலுள்ள கொலையாளி பிள்ளையானிற்கும் அமைச்சர் பதவி கிட்டவுள்ளதாக தெரியவருகின்றது.
நாளை அமைச்சரவை பதவியேற்பில் பங்கெடுக்க

10 ஆக., 2020

கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து ரணில் விலகல்

Jaffna Editor
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க அக்கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளரென ஐ.தே.க செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்

தேசியப் பட்டியல் விடயத்தில் நீங்கள் தலையிட்டு முடிவு செய்யுங்கள்-மாவைக்கு சம்பந்தன்கடிதம்

தேசியப் பட்டியல் ஆசனத்தால் சர்ச்சைகள் எழுந்துள்ளன. அதனால் இந்த விடயத்தில் நீங்கள் தலையிட்டு முடிவு செய்யுங்கள் என தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்றிரவு தமிழரசுக்

9 ஆக., 2020

ஸ்ரீதரனின் ஊடகபீட்டிக்கு நெத்தியடி பத்தரிகையாளர் சந்திப்பில் கட்சி தலைமை தெரிவு செய்யமுடியாது:

“தமிழரசுக் கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் ஏனைய பதவிப் பொறுப்புக்கள் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் மாநாடும், பொதுக்குழுவுமே கட்சி யாப்பின்படி தீர்மானங்களை எடுக்க வல்லதாகும்

7 ஆக., 2020

திருகோணமலையில் சம்பந்தன் வெற்றி

திருகோணமலை மாவட்டத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் இருவரும்,இலங்கை தமிழ் அரசு கட்சியில் ஒருவரும்,பொதுஜன பெரமுனவில் ஒருவரும் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளார்கள்.

பதுளையில் செந்தில் தோல்வி! - வடிவேல் சுரேஸ், அரவிந்தகுமார் வெற்றி

Jaffna Editor.
நாடாளுமன்றத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் நிமல் சிறிபால 141,901 அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ள நிலையில், இதொகாவின் செந்தில் தொண்டமான் தோல்வியடைந்துள்ளார்.

நுவரெலியவில் 5 தமிழ்ப் பிரதிநிதிகள்! - ஜீவன், திகா, ராதாகிருஷ்ணன் வெற்றி

Jaffna Editor
நாடாளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஜீவன் தொண்டமான் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட ஜீவன் தொண்டமான் 1
 மரண  அறிவித்தல் /கண்ணீர் அஞ்சலி 
சுப்பிரமணியம் குகதாசன் புங்குடுதீவு  6 /கனடா 
வேலணை மத்திய கல்லூரியில் எங்களோடு விடுதி வாழ்க்கை வாழ்ந்த தோழன்.விடுதியிலும் கல்லூரியிலும்  நடைபெறும் அத்தனை விழாக்களிலும் நாங்கள் ஒரு  குழுவாக இயங்கி நாடகம்  ,வில்லுப்பாட்டு என்றெல்லாம் கலையுலகை அத்திவாரமிடட கோலங்கள் என்  கண்முன்னே கண்ணீரை  வரவைக்கிறது  என்  நண்பனே . கல்வி  உறக்கம் இவை இரண்டை தவிர  மீதி நேரம் முழுவதுமே  கலை.சமூகசேவை ஊரில் அக்கறை என்றே  தான்  எங்கள் பேச்சும்  செயலும் இருந்தது .வெளிக்கிடடி விசுவமடு  நாடகத்தை பிரதி பண்ணி எத்தனை  தடவை  எத்தனை இடங்களில் களமாடி உள்ளோம் ,எத்தனை நாடகங்கள் எத்தனை நகைச்சுவை அரங்கேற்றங்கள் ,வில்லிசை நிகழ்ச்சிகள் .  நீ  என் நெறியாள்கை  வெறிக்கு கிடைத்த  கருங்கல்  நண்பா  உன்னை செதுக்கி செதுக்கியே உயர்ந்தவன்  நானும்  நண்பர்களும் தான் .அத்தனை  வேடத்தி லும் நீ  தந்த நடிப்பு உச்சம் விடுதி ஆசிரியர்களையெல்லாம் உருகவைக்கும் . எங்கள் ஏக்கத்தின் அவதாரம்  தானே  இன்று கலங்கரை விளக்காக ஒளிரும் ஐங்கரன்  சனசமூக நிலையம் .விதி என் செய்வேன் சுமார் 45  வருடங்களாகியும் உன்னை தரிசிக்க முடியா மல் விடை பெற்று விட்டாய் . இன்னொரு பிறப்பு இருந்தால்  வா நண்பா சேர்ந்தே  சந்திரகலாமணி வில்லிசை செய்வோம் . சகோதரன் கோகிலதாசன் ,திருச்செல்வம், பஞ்சலிங்கம், ஜெயதாசன் ,செல்வா ,மகேஸ்வரன் ,(கேசவன்) நாமெல்லாம் கூடுவோம் ,பாடுவோம் , நாடகம் ஆடுவோம் எழுந்து வா    என்னுயிரே  
திருகோணமலையில் சம்பந்தர்  வெற்றி என்பதே உண்மை .
ஏராளமான ஊடகங்கள் தேர்தலுக்கு  முன்னரே எழுதியது போலவே  சம்பந்தர்  மண்கவ்வுகிறார்  தோல்வி காண்கிறார்  என்றே  எழுதி   வந்தன அப்படியே  ஊகத்தின் அடிப்படையில்  முடிவு  வந்த பின்னும் எழுதி கொண்டிருக்கின்றன மாறி மாறி பிரதி பண்ணி  போடுவது இப்போது  வெளிச்சமாகி  விட்ட்து 

rபாராளுமன்றம் செல்வோர் விபரங்கள்

Jaffna Edito
நடைபெற்று முடிந்த 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து மாவட்டங்களுக்குமான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில் தேர்தலில்

யாழ் மாவட்ட விருப்பு வாக்கு விபரங்கள்

Jaffna Editor
2020 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான யாழ் மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

கொழும்பு மாவட்ட விருப்பு வாக்கு விபரங்கள்

2020 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான கொழும்பு மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

வன்னி மாவட்ட விருப்பு வாக்கு விபரங்கள்குலசிங்கம் திலீபன் - 3,203 வாக்குகள்

Jaffna Editor
2020 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான வன்னி மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

அம்பாறைமொவட்ட தமிழ்மக்கள் மீண்டும் அரசியல் அநாதைகளாக்கப்பட்டுள்ளனர்.

Jaffna Editor திகாமடுல்ல மாவட்டத்தில் இம்முறை நான்கு முஸ்லிம் உறுப்பினர்களும் மூன்று சிங்கள உறுப்பினர்களம்

5 ஆக., 2020

வவுனியா மாவட்ட வாக்களிப்பும் நிலவரமும்

Jaffna Editor
வவுனியாவில் இன்றுகாலை 7 மணி முதல் ஆ

யாழ்ப்பாணத்தில் கள்ள வாக்கு போட்ட மர்ம நபர் யார்?செய்யப்பட்டுள்ளமை தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Jaffna Editor
இதனால் குறித்த தொகுதியில் வாக்களிக்க வந்தவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிற்பகலுக்கு பின்னர் தபால் மூல பெறுபேறு

Jaffna Editor
தபால் மூல வாக்களிப்பின் தொகுதி மட்டத்திலான முதலாவது உத்தியோகபூர்வ பெறுபேற்றை நாளை நண்பகல் 12.00 மணிக்கு பின்னர் வெளியிடக்கூடியதாக இருக்கும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மாற்று அணிகள்  வாக்கு வங்கியை எங்கே    திரட்டுவது ? எது  யதார்த்தம் ?எது சாத்தியம் ? தீவகம் ஒரு  சாட்சி .
மாற்று அணிகள்  என்று புறப்படடவை முன்வைக்கும் கோட்பாடுகள் என்ன ?கூட்டமைப்போடு  என்ன  முரண்பாடுகள் கண்டு வெளியேறினார்கள் ? நீங்கள்  புறப்படட  நோக்கம்  அதற்கண வேலைத்திட்டங்களை  ஒழுங்காக  செய்து கொண்டிருக்கிறீர்களா ?  ஆம்   எனில் அப்போ  என்  உங்களுக்கான வாக்கு வாங்கி ஒன்றை  நிரந்தரமாக  கட்டி எழுப்ப முடியவில்லை ?  நீங்கள் எடுத்துக்கொண்ட காலம்  போதுமானது தானே  .யாழ்  இடம்பெயர்வுக்கு  பின்னர் பெரும்பாண்மை கட்சிகளும்  அடிவருடிகளாக  இருந்த  ஈபிடிபி கட்சியும்   எமது மண்ணை  ஆக்கிரமித்து   தமக்கென  எதோ  ஒரு  வழியில் வாக்கு வங்கியை  தக்க வைத்துக்கொண்டன.  1991   க்கு  பின்னர்  பிறந்த  யாழ் மாவடட  தமிழன்   யாரும்  விடுதலை  உணர்வோ  தனிநாட்டு என்னமோ  இல்லாது  வளர  ஒழுங்காக  திடடமிட்டு  வளர்த்தெடுத்தான் . அதன் நிமிர்த்தமே  அவனுக்கு இப்போதும்  வாக்குகள்  விழுந்துகொண்டிருக்கின்றன விடுதலைப்புலிகளின் காலத்துக்கு முன்னர்  வடக்கில் பெரும்பாண்மை காட்சிகள்  ஒரு  வேட்ப்பாளரை கூட தேர்தலில் நிறுத்தாது  நிறுத்தினாலும் வாக்குகள்  கிடைக்காது அந்த  உணர்வின்  எழுச்சி  அத்திவாரத்தை  உடைத்து வைத்திருந்தார்கள்  இடம்பெயர்வுக்கு  பின்னர்   இந்த அடிவருடிகள் .  பின்வந்த காலத்தில்  கூட்ட்டமைப்பினர்   உள்ளே நுழையவோ  தேர்தலில்  பிரசாரம் செய்யவோ  பகிரங்கமாக  வன்முறை  மூலம் தடை போதுதான்  உதாரணம் அல்லைப்பிட்டியில் வைத்து  கூடட மைப்பினரை தாக்கிய சம்பவம் .ஈபிடிபி தீவகத்தில் தனது முழு அரச சக்தி பலத்தை கொண்டு  இது  தமது கோடடை என்று  சொல்லிக்கொண்டு    கைப்பற்றி கோலோச்சி வந்த காலம் அது .யாரும் நம்பமுடியாத அளவுக்கு அந்த  அசுரர் கோடடையை  வியூகம் அமைத்து உடைத்து  மங்காவை செய்த கட்சி கூட்டமைப்பு மட்டுமே . 2013  க்கு பின்னர்  எங்கெல்லாம்  தனக்கு வாக்கு வங்கியை  வேலை வாய்ப்பு வீட்டுத்திடட்டும்  வன்முறை  என  சில சலுகை மாயையை காட்டி  உருவாக்கி  வைத்திருந்தது அங்கெல்லாம்  கூட்ட்டமைப்பு ஈபிடிபி யை விட  முன்னணி   வெற்றியை பெற்றது .இவ்வாறு  தான் வாக்கு வங்கியிற் வளர்ந்திருக்க வேண்டும்  மாற்று அணிகள்.  தீவகத்தில்  கடந்த பிரதேச சபை  தேர்தலில் கூட  எதிரியானவன் எல்லாவித  சக்திகளையும்  பாவித்து  சில பகுதிகளில்  வெற்றி கண்டான் . நயினாதீவு அனலைதீவு எழுவைதீவு  வேலணை  சில பகுதிகள்  காவலூர்  என  இன்னமும்  கால் பதித்துள்ளான்  மாற்று அணி என மார்தட்டுவோர்  உங்களால் என் அந்த பகுதிகளில்  நுழைந்து   அவனது வாக்கு வங்கியை உடைக்க முடிய வில்லை  ,கொள்கை வழியில் உங்கள் எதிரி   சிங்களமா  கூடடமைப்பா  ?  ஐ தே க  ஸ்ரீ ல சு க மொட்டு அணி ஈபிடிபி  என்றெல்லாம்  எதனை  பிரிவுகளாக எதிரி  வாக்கு  வங்கியை  வைத்திருக்கிறான் உங்களால்  அவனது  வாக்கு வங்கியிற் கைப்பற்ற  போராட முடியவில்லையே   கூட்டமைப்பின் வாகு வங்கியை  தான் பிரிப்போம் என்று  பிரசாரம் செய்கிறீர்கள் . பிரிப்பதோடு  எதிரியின் வெற்றிக்கும் காரணகர்த்தாவாக  இருக்கிறீறீர்கள் .  எதிரியின் வாக்குப்பலத்தை  கைப்பற்றி கூட்ட்டமைப்புக்கு  சவாலாக  சமமாக  முன்னேறலாம் . அப்புறம் கூட்ட்டமைப்பும்  நீங்களும் தானே  கோலோச்சலாம் .தீவகத்தில் ஒரு  மாவீரர்  நிக்கலவை கூட  நடத்தமுடியாமல்  இராணுவ கடல் படை ல த்தின்  நடுவிலே கூட்ட்டமைப்பும்  செண்பகம் அமைப்பும்  சந்தித்த  சோதனைகளை  மக்கள் அறிவார்கள் . கை  கட்டி  பார்த்துக்கொண்டிருந்தீர்களே  சாட்டியில்  துயிலுமில்லம் அமைத்து  சாதனை படைக்கும்வரை  எங்கே  இருந்தீர்கள்    ஆசனம் வேண்டும்  பதவி வேண்டும் பொது மட்டுமா  மக்கள்  வேண்டும் .முடிந்தால்  மிச்சம் இருக்கும் எதிரியின் பலத்தை  அடித்து உடையுங்கள் முட்டி  மோதி  மக்கள் மனதில் இடம் பிடியுங்கள் .இப்போதும்  எதிர்க்கு ஆதரவு  கொடுப்போரின் மனசில்  இடம் பிடியுங்கள்  அவர்கள் மனதை மாற்ற  முயட்சியுங்கள் மாற்ற  முடிந்தால்  தான் நீங்கள் மாற்று அணி 

ad

ad