மாற்று அணிகள் என்று புறப்படடவை முன்வைக்கும் கோட்பாடுகள் என்ன ?கூட்டமைப்போடு என்ன முரண்பாடுகள் கண்டு வெளியேறினார்கள் ? நீங்கள் புறப்படட நோக்கம் அதற்கண வேலைத்திட்டங்களை ஒழுங்காக செய்து கொண்டிருக்கிறீர்களா ? ஆம் எனில் அப்போ என் உங்களுக்கான வாக்கு வாங்கி ஒன்றை நிரந்தரமாக கட்டி எழுப்ப முடியவில்லை ? நீங்கள் எடுத்துக்கொண்ட காலம் போதுமானது தானே .யாழ் இடம்பெயர்வுக்கு பின்னர் பெரும்பாண்மை கட்சிகளும் அடிவருடிகளாக இருந்த ஈபிடிபி கட்சியும் எமது மண்ணை ஆக்கிரமித்து தமக்கென எதோ ஒரு வழியில் வாக்கு வங்கியை தக்க வைத்துக்கொண்டன. 1991 க்கு பின்னர் பிறந்த யாழ் மாவடட தமிழன் யாரும் விடுதலை உணர்வோ தனிநாட்டு என்னமோ இல்லாது வளர ஒழுங்காக திடடமிட்டு வளர்த்தெடுத்தான் . அதன் நிமிர்த்தமே அவனுக்கு இப்போதும் வாக்குகள் விழுந்துகொண்டிருக்கின்றன விடுதலைப்புலிகளின் காலத்துக்கு முன்னர் வடக்கில் பெரும்பாண்மை காட்சிகள் ஒரு வேட்ப்பாளரை கூட தேர்தலில் நிறுத்தாது நிறுத்தினாலும் வாக்குகள் கிடைக்காது அந்த உணர்வின் எழுச்சி அத்திவாரத்தை உடைத்து வைத்திருந்தார்கள் இடம்பெயர்வுக்கு பின்னர் இந்த அடிவருடிகள் . பின்வந்த காலத்தில் கூட்ட்டமைப்பினர் உள்ளே நுழையவோ தேர்தலில் பிரசாரம் செய்யவோ பகிரங்கமாக வன்முறை மூலம் தடை போதுதான் உதாரணம் அல்லைப்பிட்டியில் வைத்து கூடட மைப்பினரை தாக்கிய சம்பவம் .ஈபிடிபி தீவகத்தில் தனது முழு அரச சக்தி பலத்தை கொண்டு இது தமது கோடடை என்று சொல்லிக்கொண்டு கைப்பற்றி கோலோச்சி வந்த காலம் அது .யாரும் நம்பமுடியாத அளவுக்கு அந்த அசுரர் கோடடையை வியூகம் அமைத்து உடைத்து மங்காவை செய்த கட்சி கூட்டமைப்பு மட்டுமே . 2013 க்கு பின்னர் எங்கெல்லாம் தனக்கு வாக்கு வங்கியை வேலை வாய்ப்பு வீட்டுத்திடட்டும் வன்முறை என சில சலுகை மாயையை காட்டி உருவாக்கி வைத்திருந்தது அங்கெல்லாம் கூட்ட்டமைப்பு ஈபிடிபி யை விட முன்னணி வெற்றியை பெற்றது .இவ்வாறு தான் வாக்கு வங்கியிற் வளர்ந்திருக்க வேண்டும் மாற்று அணிகள். தீவகத்தில் கடந்த பிரதேச சபை தேர்தலில் கூட எதிரியானவன் எல்லாவித சக்திகளையும் பாவித்து சில பகுதிகளில் வெற்றி கண்டான் . நயினாதீவு அனலைதீவு எழுவைதீவு வேலணை சில பகுதிகள் காவலூர் என இன்னமும் கால் பதித்துள்ளான் மாற்று அணி என மார்தட்டுவோர் உங்களால் என் அந்த பகுதிகளில் நுழைந்து அவனது வாக்கு வங்கியை உடைக்க முடிய வில்லை ,கொள்கை வழியில் உங்கள் எதிரி சிங்களமா கூடடமைப்பா ? ஐ தே க ஸ்ரீ ல சு க மொட்டு அணி ஈபிடிபி என்றெல்லாம் எதனை பிரிவுகளாக எதிரி வாக்கு வங்கியை வைத்திருக்கிறான் உங்களால் அவனது வாக்கு வங்கியிற் கைப்பற்ற போராட முடியவில்லையே கூட்டமைப்பின் வாகு வங்கியை தான் பிரிப்போம் என்று பிரசாரம் செய்கிறீர்கள் . பிரிப்பதோடு எதிரியின் வெற்றிக்கும் காரணகர்த்தாவாக இருக்கிறீறீர்கள் . எதிரியின் வாக்குப்பலத்தை கைப்பற்றி கூட்ட்டமைப்புக்கு சவாலாக சமமாக முன்னேறலாம் . அப்புறம் கூட்ட்டமைப்பும் நீங்களும் தானே கோலோச்சலாம் .தீவகத்தில் ஒரு மாவீரர் நிக்கலவை கூட நடத்தமுடியாமல் இராணுவ கடல் படை ல த்தின் நடுவிலே கூட்ட்டமைப்பும் செண்பகம் அமைப்பும் சந்தித்த சோதனைகளை மக்கள் அறிவார்கள் . கை கட்டி பார்த்துக்கொண்டிருந்தீர்களே சாட்டியில் துயிலுமில்லம் அமைத்து சாதனை படைக்கும்வரை எங்கே இருந்தீர்கள் ஆசனம் வேண்டும் பதவி வேண்டும் பொது மட்டுமா மக்கள் வேண்டும் .முடிந்தால் மிச்சம் இருக்கும் எதிரியின் பலத்தை அடித்து உடையுங்கள் முட்டி மோதி மக்கள் மனதில் இடம் பிடியுங்கள் .இப்போதும் எதிர்க்கு ஆதரவு கொடுப்போரின் மனசில் இடம் பிடியுங்கள் அவர்கள் மனதை மாற்ற முயட்சியுங்கள் மாற்ற முடிந்தால் தான் நீங்கள் மாற்று அணி